தேடப்படும் நியோமேக்ஸ் நிர்வாகிகளே… நீதிமன்றத்தில் சரணடையுங்கள் ! வேண்டுகோள் விடுக்கும் வாடிக்கையாளர்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தேடப்படும் நியோமேக்ஸ் நிர்வாகிகளே… நீதிமன்றத்தில் சரணடையுங்கள் ! வேண்டுகோள் விடுக்கும் வாடிக்கையாளர்கள்!

Neomas
Neomas

நியோமேக்ஸ் வழக்கு ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க …‌ பாதிக்கப்பட்டவர்கள் மற்றொரு பக்கம் அவர்களால் ஆன வகையில் பல்வேறு முயற்சிகளை விடாமல் செய்து கொண்டுதானிருக்கிறார்கள். முக்கியமாக மாவட்டம் மண்டலம் அளவில் வாட்சப் குழுக்களை ஒருங்கிணைத்து தங்களுக்குள் ஆரோக்கியமான உரையாடலை நடத்தி வருகிறார்கள்.

Sri Kumaran Mini HAll Trichy

அடுத்த விசயம் வழக்கறிஞர் ஒருவர் பதிவிடும் வீடியோக்கள் எதுவென்றையும் தவறாமல் பார்த்து விடுகின்றனர் என்பது. எந்த திசையில் இருந்தாவது நல்ல சேதி வந்து சேராதோ‌ என்ற பரிதவிப்பின்‌ சாட்சியங்களாக அமைந்திருக்கின்றன, வீடியோவை கண்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை.

நியோமேக்ஸ் வாடிக்கையாளர் வாட்சப் குழு ஒன்றில் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த உரையாடல் சில முக்கியமான விசயங்களை கோடிட்டுக் காட்டுகிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வழக்கு கொடுத்தபோதே, சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் அனைவரும் சரண்டர் ஆகி ஜாமின் பெற்று வாடிக்கையாளர்களை சந்தித்து பேசியிருந்தாலே, பாதி சிக்கல் தீர்ந்திருக்கும் என்பதை சுட்டிக் காட்டி பதிவிட்டிருக்கிறார் வாடிக்கையாளர் ஒருவர்.

Flats in Trichy for Sale

Sir வணக்கம்..
7%வழக்கு கொடுத்தவர்கள் இடம் நிறுவனத்தின் இயக்குனர்கள் ( ஜாமீன் வந்தவர்கள்) நேரில் சென்று போய் பேசி அவர்கள் போட்ட பணத்திற்கு தாங்கள் சொல்லும் தேதியில் செக் போட்டு கொடுத்தால்@ ஏதாவது ஒரு agree ment போட்டால் மட்டுமே சரி செய்ய முடியும்…அவர்கள் வழக்கு மன்றம் சென்று இருக்கிறார்கள் என்றால் CH,TH,ZH ஒழுங்காக phone எடுத்து பதில் சொல்லி இருக்க மாட்டார்கள்… monthly benefit ஒழுங்காக சென்று இருக்காது..ஆதலால் வேற வழி இல்லாமல் வழக்கு மன்றம் போய் உள்ளார்கள்…

மீண்டும் நிறுவனம் செயல் பட, புகார் தரார் களிடம் பேசினால் மட்டும் சாத்தியம்… இல்லை என்றால் வழக்கு போய் கொண்டே இருக்கும்… தீர்ப்பு வர பல ஆண்டுகள் வரும்… இந்த கால தாமதத்திற்கு காரணம் நம் நிறுவனத்தின் தலைமைகள் தான்… ஜூன் மாதத்தில் வழக்கு பதிவு செய்த உடன் 3நபர்கள் கைதானார்கள்.

அவர்களுக்கு ஜாமீன் கிடைத்த உடன் Fir உள்ள அனைவரும் ஆஜர் ஆகி இருந்தால் எல்லோருக்கும் ஜாமீன் கிடைத்து இருக்கும், அடுத்த கட்ட பணிகளை பார்த்து இருக்கலாம்…. புகார் தார்களை நேரில் பார்த்து பிரச்சனையே முடிக்காமல் இந்த வழக்கு முடியாது… நிறுவனத்திற்கு தவறான வழிகாட்டுதல் கள் தான் இந்த கால தாமதத்திற்கு காரணம் … எல்லொரும் போய் சரண் அடைந்து இருந்தால், ஜாமீன் கிடைத்து இருக்கும், மீண்டும் நிறுவனம் நடந்து இருக்கும்.. கொஞ்சம் சொல்லுங்கள்..

(குறிப்பு;EOW வில் பணி புரியும் ஒரு நண்பர் கூரிய செய்தி:தமிழகத்தில் EOW வில் வழக்கு பதிவு செய்த நிறுவனம் மீண்டும செயல் பட்டதாக இது வரையில் இல்லை…(எனக்கு தெரிந்த வரையில் ).. கடவுள் தான் வழி காட்ட வேண்டும்… காலம் தான் பதில் சொல்லும்.பார்போம்

அங்குசம் செய்தி பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.