நியோமேக்ஸ் முக்கிய புள்ளி ஏஜெண்ட் தியாகராஜன் கைது !
நியோமேக்ஸ் விருதுநகர் ஏஜெண்ட் தியாகராஜன் கைது ! நியோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான க்ளோமேக்ஸ் (GLOWMAX) நிறுவனத்தின் ஏஜெண்டுகளுள் ஒருவரான விருதுநகரைச் சேர்ந்த த.தியாகராஜன் என்பவரை மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் பிற்-12 அன்று கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள்.
500-க்கும் அதிகமான நபர்களிடமிருந்து 125 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை இவர் வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவரையில், இவருக்கு எதிராக 15.7 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 புகார்கள் வரப்பெற்றிருப்பதாக, போலீசாரின் செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.
நியோமேக்ஸ் விவகாரத்தில் ஒருபக்கம் தங்களுக்கு எதிரான போலீசாரின் கைது நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்; வருமானவரி கட்ட வேண்டும் அதற்கு தலைமை அலுவலகத்தை திறக்க அனுமதிக்க வேண்டும்; ஏற்கெனவே கைது செய்தவர்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என அடுத்தடுத்து வழக்குகளை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த வழக்கு விசாரணைகளின்பொழுது, போலீசாரின் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றம் சில விளக்கங்களை கேட்டால்கூட, பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசின் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததை போல செய்தியாக்கப்படுகின்றன. இதுபோன்ற, எந்தவிதமான அழுத்தங்களுக்கும் இடம் தராமல், அதே நேரத்தில் எதற்கும் அசராமல் நியேமேக்ஸ் வழக்கை கையாண்டு வருகிறார், சிறப்பு விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி. மனிஷா என்கிறார்கள்.
ஷாகுல், படங்கள்: ஆனந்த்.