புதிய கட்சி… புதிய படம்… புதிய டிவி… தெறிக்கவிடும் விஜய்யின் அரசியல் ஆடுபுலி!

நடிகர் 2026ம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட திட்டம் போடுகிறார்.

0

அன்றே சொன்ன அங்குசம் இதழ்… நடிகர் விஜய் புதியபடம்  – புதிய அரசியல் கட்சி குறித்த கட்டுரை கடந்த செப்டம்பர்

புதிய கட்சி… புதிய படம்… புதிய டிவி… தெறிக்கவிடும் விஜய்யின் அரசியல் ஆடுபுலி!

நடிகர் விஜய். 90’ஸ் திரைப்படங்களில் வலம் வந்தவர். தற்போது 2026ம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட திட்டம் போடுகிறார். 2018ஆம் ஆண்டு வெளியான சர்கார் படத்தில் முழுக்க முழுக்க அரசியலையும் தமிழ் நாட்டின் அரசியல் நிலவரத்தையும் பேசிய விஜய், விரைவில் தன் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

நடிகர் விஜய் அரசியல் குறித்து
நடிகர் விஜய் அரசியல் குறித்து

ஆனால், அப்படியெதுவும் நடக்கவில்லை. 2019, 2020, 2022 ஆகிய ஆண்டுகளிள் நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றனர். இதுவே, விஜய்யின் ப்ராண்டிற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட்டது.

நடிகர் விஜய் கடந்த ஏப்ரல் மாதம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். குறிப்பாக, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை மக்களின் பசியாற்றும் வகையில் `விலையில்லா விருந்தகம்’ நடத்தும் திருச்சி, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்து அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார் நடிகர் விஜய்.


மேலும், இன்னும் நிறைய மக்கள் நலத்திட்டங் களைச் செயல்படுத்துங்கள். இது போன்ற நலத்திட்டங்களை மேற்கொள்ள பண உதவிகள் தேவைப்பட்டால் தயங்காமல் என்னிடம் கேளுங்கள்; கொடுப்பதற்கு நான் இருக்கிறேன்; நாம் செய்யக்கூடிய நலத்திட்டங்களையெல்லாம் மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும். மக்களிடம் நம் இயக்கத்தை வலுப்படுத்துங்கள்!” என நிர்வாகி களிடம் நடிகர் விஜய் கேட்டுக்கொண்டதாக புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கடந்த சில நாட்களாக விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக வலுவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதையடுத்து நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். அப்போது, அம்பேத்கார், பெரியார், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை முன்னிறுத்தி அவர் பேசியது, அரசியல் கொள்கைகள் எப்படி இருக்க கூடும் என்பதை கணிக்க கூடிய அளவில் இருந்தது. தற்போது மெல்ல மெல்ல விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியல் வருகை குறித்து விஜய் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது செயல்பாடுகள் அவர் அரசியலுக்கு விரைவில் வர உள்ளார் என்பதையே காட்டுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தினர் மூலம் டெல்டா பகுதியில் விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா ? என்று பெரிய சர்வே எடுத்திருக்கிறார்கள். இதில் 70 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து இருப்பது விஜய் தரப்பில் இன்னும் பெரிய உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இப்போது விஜய் தொடங்க இருக்கும் கட்சிக்கான சட்ட திட்ட விதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்காக திமுக அதிமுக ஆகிய தமிழ்நாட்டின் இரண்டு வெற்றிகரமான கட்சிகளின் சட்ட திட்ட விதிகளை வைத்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள் விஜய்யின் குழுவினர். திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் உட் கட்டமைப்பு, நிர்வாக படிநிலை ஆகியவற்றை தழுவி விஜய்யின் புதிய கட்சிக்கான சட்டத் திட்டங்கள் உருவாக்கப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.

இந்நிலையில், நடிகர் விஜய் வரும் செப்டம்பர் 17ம் தேதியன்று, அதாவது பெரியார் பிறந்தநாளில், புதிய கட்சி துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. லியோ’வின் இசைவெளியீட்டை முதலில் மலேசியாவில் நடத்தத் திட்டமிட்டனர். ஆனால் ‘வேலாயுதம்’ படத்தின் விழாவைப் போல மதுரையில் பிரமாண்டமாக நடத்தலாமா என்றும் யோசித்தனர். அது கட்சி மாநாடு போலப் பெயரெடுத்து விடக்கூடாது என்பதால், சென்னையிலேயே விழாவை நடத்திவிடத் தீர்மானித்துள்ளனர்.

நடிகர் விஜய்க்கு கைமாறுதா விஜய் டிவி?

விஜய் டிவியை விற்பனை செய்வதாக டிஸ்னி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதையடுத்து விஜய் டிவியை வாங்குவதற்கு மூன்று முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டியில் இறங்கியுள்ளனர். உலகில் முன்னணி நிறுவனங்களான ஜியோ, டாடா, சோனி இந்த மூன்று நிறுவனங்களும் விஜய் டிவியை வாங்குவதற்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த மூன்று நிறுவனங்களில் அதிக விலை கொடுத்து யார் வாங்கப் போகிறார்கள் என்பது கூடிய விரைவில் தெரியவரும். இதற்கு இடையில் நடிகர் விஜய் தன் பெயரில் இருக்கும் விஜய் டிவியை வாங்க போகிறார் என்கிற பேச்சு இணையம் முழுவதும் பரவி கிடக்கிறது.. ஆனால் இது திட்டமிட்ட வதந்தி என்றும் ஒரு பக்கம் பேச்சு அடிப்படுகிறது. அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னமே ஓரு தொலைக்காட்சி தனக்கு இருக்கு வேண்டும் என்று விஜய் நட்பு வட்டம் விரும்புகிறது என்கிறார்கள். ஜோசியமும், ஜாதகமும்… நேரம் குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்கிறார்கள்..

விஜய்யின் ஆடுபுலி ஆட்டம், அரசியல் பாதைக்கா அல்லது லியோ பட புரோமோசனா ?

வீடியோ லிங்

– நமது நிருபர்

Leave A Reply

Your email address will not be published.