தமிழ்நாடு சட்டமன்றத்தில் திரை நட்சத்திரங்கள்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ்நாடு சட்டமன்றத்தில் திரை நட்சத்திரங்கள்!

    •  நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன் : 1962ஆம் ஆண்டு தேனி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980இல் ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன்
நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன்
    •  நடிகர் எம்.ஜி.ஆர் : 1962ஆம் ஆண்டு திமுகவின் சார்பில் சட்டமன்ற மேலவை உறுப்பினராக (MLC) இருந்தார். 1967ஆம் ஆண்டு சென்னை பரங்கிமலை தொகுதியில் திமுகவின் சார்பில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். 1971 (பரங்கிமலை). 1977 (அருப்புக்கோட்டை), 1980 (மதுரை மேற்கு), 1984 (ஆண்டிப்பட்டி) ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1977 முதல் 1987ஆம் ஆண்டு வரை தொடர்ந்து முதல் அமைச்சராக இருந்தார்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

 நடிகர் எம்.ஜி.ஆர் :
நடிகர் எம்.ஜி.ஆர் :
    • நடிகர் ஐசரி வேலன் : 1977ஆம் ஆண்டு அதிமுக சார்பில் சென்னை இராதாகிருஷ்ணன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    •  நடிகை ஜெ.ஜெயலலிதா : 1989ஆம் ஆண்டு போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுகவின் சார்பில் சேவல் சின்னத்தில் வெற்றி பெற்றார். 1991 (பர்கூர், காங்கேயம்), 2002(ஆண்டிப்பட்டி), 2006 (ஆண்டிப்பட்டி), 2011 (ஸ்ரீரங்கம்), 2015, 2016 (சென்னை ஆர்கே நகர்) தேர்தல்களில் வெற்றி பெற்றார். மேலும் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகவும் இருந்தார்.
நடிகை ஜெ.ஜெயலலிதா
நடிகை ஜெ.ஜெயலலிதா
    •  நடிகர் டி.ராஜேந்தர் : 1996ஆம் ஆண்டு திமுகவின் சார்பில் சென்னை பூங்கா நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
நடிகை ஜெ.ஜெயலலிதா
நடிகை ஜெ.ஜெயலலிதா
    •  நடிகர் இராதாரவி : 2001ஆம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 நடிகர் இராதாரவி
 நடிகர் இராதாரவி

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

    •  நடிகர் நெப்போலியன் : (இயற்பெயர் குமரேசன்) 2001ஆம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 நடிகர் நெப்போலியன்
 நடிகர் நெப்போலியன்
    •  நடிகர் விஜயகாந்த் : 2006ஆம் ஆண்டு தேமுதிக சார்பில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011ஆம் ஆண்டு ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
 நடிகர் விஜயகாந்த்
 நடிகர் விஜயகாந்த்
    •  நடிகர் சரத்குமார் : 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு சமத்து மக்கள் கட்சி சார்பில் வெற்றி பெற்றார்.
நடிகர் சரத்குமார்
நடிகர் சரத்குமார்
    •  நடிகர் வாகை சந்திரசேகர் : 2016ஆம் ஆண்டு திமுக சார்பில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
நடிகர் வாகை சந்திரசேகர்
நடிகர் வாகை சந்திரசேகர்
    •  நடிகர் கருணாஸ் : முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சித் தொடங்கி, அதிமுகவுடன் கூட்டணி வைத்து, 2016ஆம் ஆண்டு திருவாடானை தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்றார்.
நடிகர் கருணாஸ்
நடிகர் கருணாஸ்
நடிகர் உதயநிதி
நடிகர் உதயநிதி

 

  •  நடிகர் உதயநிதி : 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது தமிழ்நாடு அரசின் விளையாட்டு துறை அமைச்சராவும் உள்ளார்.

வீடியோ லிங்

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.