இரண்டாம் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் நர்ஸ் தற்கொலை ? வாலிபர் கைது !

மன உளைச்சலுக்கு ஆளான மதுபிரியா திடீரென ஓடிச்சென்று அருகில் இருந்த கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டதாகவும்: ஆனால் அவரை காப்பாற்றாமல் சரத்குமார் அங்கிருந்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

0

இரண்டாம் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் நர்ஸ் தற்கொலை ? வாலிபர் கைது !

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் மதுபிரியா(30). இவர் நிம்மியம்பட்டு பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக செவிலியராக  பணிபுரிந்து வந்துள்ளார்.

இவருக்கும் தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவருக்கும் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

மதுபிரியா
4 bismi svs

மதுபிரியா ஆலங்காயம் பகுதியில் உள்ள தன் தாய் வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை நிம்மியம்பட்டு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த சரத்குமார் (34) என்பவரை பிடித்து விசாரித்ததில்  சம்பவத்தன்று சரத்குமார் மதுபிரியாவை வற்புறுத்தி அருகே உள்ள மராட்டிபாளையம் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்று அந்தப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் அருகே இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, சரத்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மதுபிரியாவை வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது, இதில் மன உளைச்சலுக்கு ஆளான மதுபிரியா திடீரென ஓடிச்சென்று அருகில் இருந்த கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டதாகவும்: ஆனால் அவரை காப்பாற்றாமல் சரத்குமார் அங்கிருந்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

சரத்குமார்

மதுபிரியாவுக்கு திருமணம் ஆகி 3  ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பின்னர், போலீசார் வழக்குப் பதிவு செய்து, நர்ஸ் தற்கொலைக்கு காரணமாக இருந்த சரத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மணிகண்டன்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.