அங்குசம் பார்வையில் ‘ ரெபெல் ’

எதோ ஒண்ணு இந்தப் படத்துல இருக்குன்னு நம்பித் தான் நாமும் தியேட்டருக்குப் போனோம்.   வெள்ளையர்கள் ஆட்சி…… என ஆரம்பிக்கிறார்கள் ...

0

அங்குசம் பார்வையில் ‘ ரெபெல் ’

தயாரிப்பு: ‘ஸ்டுடியோ க்ரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா, இணைத் தயாரிப்பு: நேஹா ஞானவேல் ராஜா. வெளியீடு: சக்தி ஃபிலிம் ஃபேக்டரி. டைரக்‌ஷன்: நிகேஷ். நடிகர்—நடிகைகள்: ஜி.வி.பிரகாஷ் குமார், மமிதாபைஜு, கருணாஸ், கல்லூரி வினோத், ஆதித்யா பாஸ்கர், சுப்பிரமணிய சிவா, ஆண்டனி. இசை: ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு: அருண் ராதாகிருஷ்ணன், எடிட்டிங்: வெற்றி கிருஷ்ணன். பி.ஆர்.ஓ.யுவராஜ்.

2 dhanalakshmi joseph

கம்யூனிசத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான போர் தான் இந்த ‘ரெபெல்’.

இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய டைரக்டர் பா.ரஞ்சித் உட்பட அனைவருமே டைரக்டர் நிகேஷின் முதல் முயற்சியையும் ஜி.வி.பிரகாஷின் துணிச்சலையும் ரொம்பவே பாராட்டி சிலாகித்தனர்.

- Advertisement -

- Advertisement -

சரி தான் இருக்கு … எதோ ஒண்ணு இந்தப் படத்துல இருக்குன்னு நம்பித் தான் நாமும் தியேட்டருக்குப் போனோம்.   வெள்ளையர்கள் ஆட்சி … என ஆரம்பிக்கிறார்கள். கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் சேர்த்த கதை சொல்கிறார்கள். கன்னியாகுமரி பறிபோன கடுப்பில் மூணாரைத் தரமறுக்கிறது கேரளா என்கிறார்கள். ஆனால் அங்கு தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளுக்கு கல்வி தருவதாக ஏமாற்றியது கேரள அரசு என்கிறார்கள்.  இதெல்லாமே 1956—வரை நடந்ததாகச் சொல்கிறார்கள்.  என்னங்க சொல்கிறார்கள், என்கிறார்கள்னு எழுதிக்கிட்டிருக்கீகன்னு நீங்க நினைக்கலாம்.

நாம என்னங்க பண்ண முடியும் டைரக்டர் சொன்னதைத் தானங்க எழுத முடியும். 1980—ல் கதையை ஆரம்பிக்கிறார் டைரக்டர்.  மூணார் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளாக இருக்கும் சுப்பிரமணிய சிவா—ஆதிரா லட்சுமியின் மகனான ஜி.வி.பிரகாஷும் அவரைப் போலவே ஏழ்மையில் இருக்கும் தொழிலாளர்களின் மகன்களும் கேரளாவின் பாலக்காடு சித்தூர் அரசுக் கல்லூரிக்கு படிக்கப் போகின்றனர்.

4 bismi svs

அந்தக் கல்லூரியில் கம்யூனிஸ்ட் மாணவர்களும் அதற்கு எதிரான மாணவர்களும் எதிரெதிரே முட்டிக் கொண்டு நிற்கின்றனர். இரண்டு கோஷ்டிக்கும் அங்குள்ள அரசியல் கட்சிகள் ஆதரவளிக்கின்றன. அவர்களுக்குள் மோதிக் கொண்டாலும் தமிழ் மாணவர்கள் என்றால் வேட்டியை உருவி கேவலமாக நடத்துகிறார்கள்.  மாணவர் பேரவைத் தேர்தல் வருகிறது. வேட்டியை உருவிய கடுப்பு, தமிழ் மாணவியை மேடையிலேயே அசிங்கப்படுத்திய கடுப்பில் பேரவைத் தேர்தல் களத்தில் தமிழ் மாணவர்கள் அமைப்பு சார்பில் களத்தில் குதிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். வெற்றி பெற்றது யார் என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘ரெபெல். க்ளைமாக்ஸ் என்ன க்ளைமாக்ஸ்.. படு அபத்தமான க்ளைமாக்ஸ் தான்.

சீன்கள் எல்லாமே ஒழுங்கில்லாத கட்டமைப்புக்குள் சிக்கிவிட்டதால் எந்த சீனும் நமக்குள் சின்ன தாக்கத்தையோ, சலனத்தையோ ஏற்படுத்தவில்லை. கேரளாவின் அரசியல் எப்படி இருக்கும், சிவப்புச் சிந்தாந்தம்னா என்ன என்பதை பேராசியராக வரும் கருணாஸ் விளக்கும் சீன்  செம க்ளாப்ஸ் அள்ளியிருக்க வேண்டும். ஆனால் மேலே நாம் சொன்ன ஒழுங்கில்லாத கட்டமைப்பு சீன்களால் எல்லாமே வீணாகிவிட்டன.

“ஜிந்தாபாத்…ஜிந்தாபாத்…” என அடிக்கடி முழங்குகிறார்கள். கேரள மாணவர்கள் கோஷ்டி கல்லூரி முழுவதும் திமுதிமுவென ஓடுகிறார்கள், அவனை விட்டனாபாருன்னு தலையை சிலுப்பியபடி உறுமுகிறார்கள், பெட்ரோல் குண்டு வீசுகிறார்கள், சரக்கடிக்கிறார்கள். அவ்வளவு தான் மேட்டர் ஓவர். அதிலும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக வரும் நடிகர், எம்.எல்.ஏ.வாக வரும் நடிகர், இவர்களின் நடிப்பு பெருங்கொடுமை.

காலேஜ்னா கேரள மாணவி இல்லாம எப்படின்னு மமிதா பைஜுவை ( இதான் தமிழில் இவருக்கு முதல் படம். ஆனாலும் ’மஞ்ஞுமல் பாய்ஸ்’ மானாவரி ஹிட்டடித்துவிட்டது) கமிட் பண்ணியிருப்பார்கள் போல. கிளாஸ் ரூமுக்கு எப்படிப் போகணும்னு ஜி.வி.பிரகாஷுக்கு வழி காட்டுகிறார். பேரவைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் சார்பில் நிற்கிறார். ’சரி நான் கிளம்புறேன்”ன்னு கிளம்பிவிடுகிறார்.

இதுல என்ன வேடிக்கைன்னா இசைஞானியின் ஐந்து பாடல்களை அங்கங்கே சொருகி, சமாளிக்க முயற்சி பண்ணியிருக்கிறார்கள். அதுவும் டோட்டல் வேஸ்டாகிப் போச்சு.

மொத்தத்தில் ‘ரெபெல்’ மிகச் சிறிய சைக்கிள் ‘பெல்’ சவுண்ட் தான்.

மதுரை மாறன்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.