சினிமாவில் நடித்த அரசியல் ‘தலை’கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சினிமாவில் நடித்த அரசியல் ‘தலை’கள் !

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தற்போதைய தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1988ஆம் ஆண்டில் ‘ஒரே இரத்தம்’ ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற இரு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், பொதிகை தொலைக்காட்சியில் ‘குறிஞ்சிமலர்’ என்னும் நெடுந் தொடரிலும் நடித்துள்ளார்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

  • முன்னாள் சட்டப்பேரவை துணைத்தலைவர், தற்போதைய திருச்சி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் 1982இல் ‘அக்னிப்பார்வை’ என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

  • விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் மற்றும் இந்திய நாடாளுமன்ற சிதம்பரம் மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன் 2007இல் ‘அன்புத்தோழி, 2011இல் ‘மின்சாரம்’ என்ற இரு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

  • திராவிட இயக்கப் பேச்சாளர் நாவுக்கரசர் என்று அழைக்கப்படுகின்ற நாஞ்சில் சம்பத் 2019ஆம் ஆண்டில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு மற்றும்LKG என்னும்இரு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

  • அரசியல் வானில் பல இயக்கங்களுக்குப் பறந்து செல்லும், சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் பழ. கருப்பையா அவர்கள் 2010இல் ‘அங்காடித் தெரு’ திரைப்படத்தில் அண்ணாச்சியாக நடித்துள்ளார். தொடர்ந்து ‘சர்க்கார், அக்ஷன்’ திரைப்படங்களில் முதல் அமைச்சர் வேடங்களில் நடித்துள்ளார்.

  • பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாசு 1990இல் வெளிவந்த ‘பாலம்’ என்ற திரைப்படத்தில் அரசியல்வாதியாக நடித்துள்ளார். 1995இல் வெளிவந்த ‘தொண்டன்’ படத்திலும் நடித்துள்ளார்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.