அரசியல் துரோகம் வீழ்ந்தது யாரு…?

-அங்குசம் டீம்

0

சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது, திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியாளர்கள், சுயேட்சையாக போட்டியிட்டு திமுகவிற்கு எதிராக களம் கண்டு, அதில் வெற்றியும் பெற்ற கதை தமிழகம் முழுக்க அரங்கேறியது அனைவரும் அறிந்ததே.

தொடர்ந்து நடைபெற்ற மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவி களுக்கான தேர்தலில், திமுக தலைமை கழகம் வேட்பாளர்களை அறிவித்தாலும், கூட்டணி கட்சியின ருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும் திமுக வேட்பாளர்கள் எதிராக போட்டி யிட்டு கூட்டணி தர்மத்தை மீறிய கதையும் பல இடங் களில் அரங் கேறியது. இதனால் பாதிக்கப்பட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவிக்க, “கூட்டணிக்காக ஒதுக்கப் பட்ட இடங்களில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு என்னை வந்து நேரில் சந்திக்கவும். மறுத்தால் கட்சியிலிருந்தே நீக்கப் படுவீர்கள்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விட வேண்டியதாகிப் போனது.

https://businesstrichy.com/the-royal-mahal/

பதவிக்கு ஆசைப்பட்டு தங்கள் கட்சி வேட்பாளர்களையே தோற்கடிப்பது, கூட்டணி கட்சி வேட்பாளர்களை தோற்கடிப்பது என தமிழகம் முழுவதும் அரங்கேறிய விஷயங்கள், திமுக தலைவரின் அணுகுமுறையால் ஓரளவு சரி செய்யப்பட்டது. ஆனால் திமுக மற்றும் திமுக அதிருப்தி வேட்பாளர்கள், எதிர்கட்சியான அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது தான் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

தமிழகத்தின் மத்திய மாவட்டமான திருச்சி மாவட்டத்தில், ஒரே உரையில் இரண்டு கத்திகளாக செயல்பட்டு வருவது, அமைச்சர்களான கே.என்.நேருவும், அன்பில் மகேஷ் பொய்யாமொழியும். முன்னவர் கட்சியில் மாநில முதன்மை செயலாளர். பின்னவர் திருச்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர். அத்தோடு உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய தோழர். இதனால் திருச்சி மாவட்ட திமுகவில் கே.என்.நேரு கோஷ்டி, அன்பில் மகேஷ் பொய்யா மொழி கோஷ்டி என இரண்டு கோஷ்டிகள் உண்டு. சரி.. சம்பவ களத்திற்கு வருவோம்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் ஒன்று மணப்பாறை நகராட்சி. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், திருச்சி, தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மணப்பாறை நகர் மன்ற வார்டுகளில், கே.என்.நேரு கோஷ்டி போட்டியிட, தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் விருப்ப மனு கொடுக்காமல் சென்னையில் உள்ள தலைமை கழகத்தில் விருப்ப மனு கொடுத்துள்ளனர் (கே.என்.நேருவின் ஆலோசனைப்படி). அம்மனுக்களும் அங்கிருந்து தெற்கு மாவட்டத் திமுக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவற்றில் சிலர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சம்பவம், (மாவட்ட அலுவலகத்திலோ, மாநில அலுவலகத்திலோ தராமல் நேரடியாக டில்லி தலைமைக்கு செல்லும் காங்கிரஸாருடனான பழக்க தோஷமோ..?) திமுகவில் நடைபெற்ற ஒரு ‘சுவாரஸ்யம்’ என்றே கூறலாம்.

தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நேர்காணலிலும் கலந்து கொள்ளாத கே.என்.நேருவின் ஆதரவாளர்களில் இருவர், வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர் என்பது மற்றொரு  சுவாரஸ்யம். மணப்பாறை நகராட்சியின் நகர்மன்றத்தில் மொத்தம் 27 உறுப்பினர்கள். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிமுகவினர் 11 இடங்களிலும், திமுக 8 இடங்களிலும், திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெறுகிறது. மீதமுள்ள 5 இடங்களில் வெற்றி பெற்றவர்கள் சுயேட்சைகள். இவர்கள் ஐவருமே திமுக அதிருப்தி வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்றால் அதைவிட குறிப்பிட வேண்டிய விஷயம் மூவர் திமுக வேட்பாளரையே எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்.  சுயேட்சையாக, திமுகவிற்கு எதிராக நின்று வெற்றி பெற்றவுடன் அவர்கள் முதல்வேளையாக கே.என்.நேருவை சந்தித்து, சால்வை அணிவித்து, வெற்றி சான்றிதழை அவரிடம் கொடுத்து ஆசி பெற்று, தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தமிழகம் முழுக்க திமுகவுக்கு எதிராக வேலைபார்த்த அதிருப்தி திமுகவினர் மீது நடவடிக்கை எடுத்த திமுக தலைமை கட்சிக்கு எதிராக செயல்பட்ட தெற்கு மாவட்ட திமுகவினர் மீது மட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதிமுக 11, திமுக கூட்டணி 11 என்ற நிலையில், சுயேட்சைகளின் ஆதரவினால் நகர்மன்றத்தில் திமுகவின் பலம் 16 ஆக உயர்ந்தது. அடுத்து மார்ச் 4ம் தேதி நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல். திமுக சார்பில் தலைவர் வேட்பாளராக 25வது வார்டு உறுப்பினர், கீதா ஆ. மைக்கேல்ராஜையும், துணைத் தலைவராக 8வது வார்டு உறுப்பினர், சி.சுமதியையும் அறிவித்தது தலைமை.

மெஜாரிட்டி திமுக என்பதால் அதிமுகவிற்கு அங்கு வேலை இல்லை. ஆனாலும்  அதிமுக சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவதென அதிமுகவின் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் முடிவெடுக்கிறார். அதேவேளையில் மணப்பாறை நகரச் செயலாளர் பவுன்ராஜ், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் என இருவருமே போட்டியை தவிர்க்கலாம்.. ஏன் இந்த வெட்டி வேலை என எதிர்ப்பு தெரிவிக்க, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அதிமுக வேட்பாளராக 18வது வார்டு உறுப்பினர் பா.சுதா என்பவரை களம் இறக்குகிறார் ப.குமார். அத்துடன் திமுகவினருக்கு ஆதரவாக பேசியதாக கூறி ஒன்றிய செயலாளர் வெங்கடேசனை பதவியிலிருந்து தூக்கிவிட்டார் ப.குமார்.

வாக்கு பதிவு முடிந்து முடிவு அறிவிக்கப் படுகிறது. திமுக வேட்பாளர் கீதா மைக்கேல்ராஜ் 12 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைய, எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பா.சுதா 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார். நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு..! எப்படி இது நடந்தது என திமுகவினரிடையே பெரும் குழப்பம். அதிமுகவிற்கு ஆதரவாக வாக்களித்த அந்த ‘கறுப்பாடு’ எது என ஒவ்வொருவருக்குள்ளும் விவாதம். திமுக, திமுக அதிருப்தி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் என 16 பேருமே ‘கல்பிரிட்’டாக அனைவரின் கண்களிலும் தெரிகிறார்கள்.  அடுத்து துணைத் தலைவர் தேர்தல். அப்போதும், அந்த 16 பேரும், ஒரே இடத்தில், ஓரே அணியாக, திமுக வேட்பாளருக்கு ஆதரவானவர்களாக வரிசைகட்டி நிற்கிறார்கள். இதைக் கண்ட திமுகவினர் அனைவருக்குமே தலை கிறுகிறுத்துப் போனது. துணைத் தலைவரும் தோற்றுவிட்டால். என்ன செய்வது என்று தெரியாமல், தேர்தலையே புறக்கணிப்பதாக அறிவித்தது மணப்பாறை திமுக.

மாமன்றத்தில் மொத்த எண்ணிக்கையில் 50 சதவீத உறுப்பினராவது வாக்களிக்க முன்வர வேண்டும். மொத்தமுள்ள 27 பேர்களில் அதிமுகவைச் சேர்ந்த 11 பேர் மட்டுமே இருந்ததால், துணைத் தலைவர் தேர்தலை மறுதேதியின்றி தள்ளிவைப்பதாக ஆணையர் சியாமளா அறிவித்துவிட்டார்.

அதிமுகவிற்கு வாக்களித்த அந்த 4 பேரு யாரு..? என்னடா இது ஆளுங்கட்சியான திமுகவிற்கு வந்த சோதனை.. என்ற கவலைதோய்ந்த முகத்துடன் திமுகவினர் கலைந்து சென்றனர். மெஜாரிட்டி இன்றி 11 பேர் பலத்துடன் வெற்றி பெற்றுத் தந்த ப.குமாரின் முகத்தில் சந்தோஷம் இன்றி சந்தேக ரேகைகள். என்னவாம்?  “நாம 8 பேரை ‘கவனிச்சோம்’ தலைவர் வேட்பாளர் 19 வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால் 15 வாக்குகள் தான் பெற்றார். நமக்கு ஆதரவாக ஓட்டு போடாத அந்த 4 பேரு யாரு..?

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.