அரசு பேருந்துகளில் “தமிழ்நாடு” எங்கே?

- இப்ராகிம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழகத்தில் திமுக ஆட்சியின் போது தனியார் பேருந்து போக்குவரத்து அரசுடைமையாக்கப்பட்டு கடந்த 1972ம் ஆண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தொடங்கப்பட்டு நகரப் பேருந்துகள், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பேருந்துகள், மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பேருந்துகள் என பேருந்து போக்குவரத்து விரிவாக்கம் செய்யப்பட்டது.

போக்குவரத்து கழகம் அதனுடைய நிர்வாக வசதிக்காக 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சென்னை, சேலம், கோயம்புத்தூர், விழுப்புரம், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி ஆகிய மண்டலங்களாகவும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் என தனியாகவும் பிரிக்கப்பட்டு உள்ளது.  பிறகு 1990ஆம் ஆண்டு பிற மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள்  திருவள்ளுவர் போக்குவரத்து கழகம் என பெயரிடப்பட்டு செயல்படத் தொடங்கியது. சென்னையில் இயங்கிய மாநகர பேருந்துகள், பல்லவன் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரிலும், பிற மாவட்டங்களில் சேரன், சோழன், பாண்டியன் எனவும் பின்னாளில் அதுவே தந்தை பெரியார், பட்டுக்கோட்டை அழகிரி, தீரன் சின்னமலை, மருதுபாண்டியர், வீரன் அழகுமுத்துக்கோன், ஜீவா என சுதந்திரப் போராட்ட வீரர்கள் பெயர்களில் பேருந்துகள் இயக்கப்பட்டன.

Sri Kumaran Mini HAll Trichy

மேலும் விரைவு போக்குவரத்துக் கழகமான திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம், ஜெ.ஜெ.போக்குவரத்துக் கழகம், ராஜீவ் காந்தி போக்குவரத்துக் கழகம் என்றும் பெயர் மாற்றப்பட்டு இயக்கப்பட்டன. ஆனால் பின்னாளில் பேருந்துகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய சமூக ரீதியான  சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இயங்கும் பேருந்துகளுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் என்றும் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் என்றும் பெயரிடப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், “தமிழக அரசாணையில், ‘தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்’ என குறிப்பிட்டிருக்க பேருந்துகளில் ஏன் வெறும் அரசு போக்குவரத்துக் கழகம் என எழுதப்பட்டிருக்கிறது என்ற கேள்வியுடன் நம்மிடம் பேசினார் தமிழ்ப்புலிகள் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ரமணா. “தமிழ்நாடு அரசின் பேருந்துகள் அனைத்திலுமே “அரசு போக்குவரத்து கழகம்” என்று மட்டுமே இருக்கிறது. ‘தமிழ்நாடு’ என்ற வார்த்தை இடம் பெறவில்லை. இது குறித்து மண்டல அலுவலகங்களில் கேட்டால் சரியான பதில் இல்லை.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Flats in Trichy for Sale

இதை கண்டித்து பலமுறை போராட்டம் நடத்தி இருக்கிறது தமிழ் புலிகள் கட்சி. போராட்டம் நடத்திய எங்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மற்ற மாநிலங்களில் அந்த மாநிலத்தின் பெயரை முதலாக கொண்டு அரசு போக்குவரத்து கழகம் என்று இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அரசின் பணத்தால் செயல்படும் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற வார்த்தை இடம் பெறாமல் இருப்பது உண்மையில் கண்டிக்கத்தக்க விஷயம்.  எடப்பாடி அரசு பதவியேற்ற பிறகு தான் இது தொடர்கதையாக மாறியது.  இதுகுறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவிலும் புகார் அளித்துள்ளேன்.  ஆனால் அதற்கு இன்று வரை சரியான பதில் இல்லை” என்றார். பிற மாநிலத்திற்கு நம் பேருந்துகள் செல்லும் போது,  ‘தமிழ்நாடு’ என்ற பெயருடன்

பேருந்து சென்றால் தானே பெருமைக்குரிய விஷயமாக இருக்கும். KARNATAKA STATE TRANSPORT CORPORATION (KSRTC), ANDHRA STATE TRANSPORT CORPORATION(ASRTC) என வெளிமாநிலப் பேருந்துகளில் பெயர் எழுதுவது போல் ஏன் தமிழகத்தில், ‘தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்’ என முழுமையாக எழுதுவதில்லை என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.  ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம்’ என முழுமையாக பெயர் எழுதிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

இதுகுறித்து திருச்சி மண்டல கமர்சியல் மேனேஜரை தொடர்பு கொண்டு நாம் கேட்ட போது, “இது அரசின் கொள்கை விஷயம். தனிப்பட்ட காரணங்கள் கிடையாது. பெயர், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்” தான். ஆனால், பேருந்தில் என்ன எழுத வேண்டும் என் தலைமையிலிருந்து உத்தரவிடுகிறார்களோ அதை தான் நாங்கள் எழுதுகிறோம். மற்றபடி இதில் சொல்வதற்கு எங்களிடம் வேறு ஒன்றுமில்லை” என்று கூறி போனை வைத்து விட்டார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.