பிரணவ் ஜூவல்லரி மோசடி : வெளிச்சத்தைத் தேடி தீயில் வீழ்ந்து மடியும் ஈசலைப் போல!

0

அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே ... தொடர்பு எண் - 9488842025 அங்குசம் இதழ் டிசம்பர் 1-15 (2023) இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள்

பிரணவ் ஜூவல்லரி மோசடி : வெளிச்சத்தைத் தேடி தீயில் வீழ்ந்து மடியும் ஈசலைப் போல!

தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது அதுவும் பல ஆண்டுகளாக பாரம்பரியாக நடத்திவரும் முன்னணி நகைக்கடைகளை நம்பி முதலீடு செய்யலாம் என்ற பாமர மக்களிடமிருந்த நம்பிக்கையை சிதைத்திருக்கிறது, பிரணவ் ஜூவல்லரி மோசடி விவகாரம்.

2

ஆறே மாதத்தில் முடிவடையும் குறுகிய கால மாதாந்திர தவணைச் சீட்டு, பிக்சட் டெபாசிட் திட்டம்; மாதந்தோறும் 2% வட்டி கிடைக்கும் வகையிலான முதலீட்டுத் திட்டம்; முன்பணம் செலுத்தியதிலிருந்து பத்து மாத முடிவில் செய்கூலி சேதாரமின்றி தங்க நகை பெற்றுக் கொள்ளும் திட்டம்; பழைய நகைகளை கொடுத்துவிட்டு ஒரு வருடம் கழித்து அதே எடையில் செய்கூலி சேதாரம் இல்லாமல் புதிய டிசைன் நகைகளை பெறும் திட்டம் என ஏராளமான கவர்ச்சிகரமான திட்டங்களை காட்டி ஏமாற்றியிருக்கிறது, பிரணவ் ஜூவல்லரி.

பிரணவ் ஜீவல்லரி மதன் செல்வராஜ்
பிரணவ் ஜீவல்லரி மதன் செல்வராஜ்
3

தெய்வீக தங்கம் என்ற சென்டிமென்ட்டும், 0% செய்கூலி, சேதாரம் என்ற வியாபார உத்தியும் வெளிச்சத்தைத் தேடி வந்து நெருப்பில் விழும் ஈசலைப் போல கனிசமான பெண்களை பிரணவ் ஜூவல்லரி விரித்த வலையில் விழ வைத்திருக்கிறது. புதுடிசைனுக்கு ஆசைப்பட்டு, பீரோவில் பூட்டி வைத்திருந்த நகைகளையெல்லாம் அள்ளிச்சென்று பிரணவ் ஜூவல்லரியில் வந்து கொட்டியிருக்கிறார்கள்.

பிரணவ் - யூடிப் பேட்டி
பிரணவ் – யூடிப் பேட்டி
4

பாதுகாப்பாக தங்கத்தில் முதலீடு செய்யுங்கள் என்று விளம்பரப்படுத்தி பொதுமக்களிடமிருந்து வசூலித்த பணத்தை, மீண்டும் தங்கத்தில் முதலீடு செய்யாமல், ரியல் எஸ்டேட் பிசினஸில் போட்டது முதல் அகலக்கால் வைத்து ஆடம்பர செலவுகளை செய்தது வரையில் மடைமாற்றியதன் விளைவு வாக்கு கொடுத்தபடி தங்கத்தை திருப்பித் தரமுடியாமல் தலைமறைவாக ஓடி ஒளிய வேண்டிய நிலைக்கு ஆளாக்கிவிட்டது. மகளின் திருமணத் தேவைக் காக, எதிர்கால தேவைக் காக, என உடல் நோக குருவி போல, சிறுக சிறுக சேமித்த பணம் திரும்பக் கிடைக்குமா? என்ற கவலையோடு, கால் நோக அவர்களை அலைய வைத்துவிட்டது, பிரணவ் ஜூவல்லரி.

வீடியோ லிங்:

பிரணவ் ஜூவல்லரி மோசடி விவகாரம் குறித்து இவ்வழக்கின் விசாரணை அதிகாரியும் திருச்சி மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு டி.எஸ்.பி.யுமான திருமதி லில்லிகிரேஸ் அவர்களிடம் அங்குசம் சார்பில் பேசினோம்.

“பிரணவ் ஜூவல்லரியில் பிரச்சினை என்று அக்-17 அன்று எங்களது கவனத்திற்கு வந்த உடனேயே விசாரணையை தொடங்கிவிட்டோம். அதற்கடுத்த இரு நாட்களில் 15 இடங்களில் ரெய்டு நடவடிக்கையை மேற்கொண்டோம். எங்களது முதற்கட்ட விசாரணை மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையிலிருந்தும் பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் அவரது மனைவி கார்த்திகா, மேலாளர் நாராயணன் ஆகிய 3 பேர் மீது ஆசைவார்த்தை கூறி மோசடி செய்தல், ஏமாற்றுதல், கூட்டு சதி செய்தல் என்பன உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருக்கிறோம்.

டி.எஸ்.பி. லில்லிகிரேஸ்
டி.எஸ்.பி. லில்லிகிரேஸ்

இவ்வழக்கின் ஏ3-யான திருச்சி கிளையின் நிர்வாகி நாராயணனை கைது செய்திருக்கிறோம். தப்பியோடிய உரிமையாளர் மதன் மற்றும் கார்த்திகா இருவரையும் தனிப்படை அமைத்து தேடி வருவதோடு, அவர்கள் வெளிநாடு தப்பிச் செல்லாத வகையில் பாஸ்போர்ட்டை முடக்கியிருக்கிறோம்.

தமிழகம் முழுவதிலிருந்தும் இதுவரையில் 1500-க்கும் அதிகமான புகார்கள் வந்திருக்கின்றன. பொருளாதாரக் குற்றப்பிரிவின் ஐஜி மேம், ஏடிஜிபி, எஸ்பி உள்ளிட்ட உயர்அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி, பொதுமக்களின் அலைச்சலை தவிர்க்கும் பொருட்டு, பிரணவ் ஜூவல்லரியின் 8 கிளைகளில் எந்தக்கிளையில் பணம் கட்டி ஏமாந்திருந்தாலும், அவர்களுக்கு அருகாமையில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தி வருகிறோம்.” என்கிறார் அவர்.

வே.தினகரன்

வீடியோ லிங்:

Leave A Reply

Your email address will not be published.