ஓடும் ரயிலில் “சைக்கோ வெறிச்செயல்” !  பாதுகாப்பற்ற ரயில்வே நிர்வாகம் பொதுமக்கள் குற்றச்சாட்டு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஓடும் ரயிலில் கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட கொடூர சைக்கோ ஒருவன் போலீஸிடம் பிடிபட்டு மாவு கட்டு போட்டுள்ளார்கள்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் மங்கள சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 36 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் ,  திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள கந்தகம்பாளையத்தில் தனது கணவர் மற்றும் மகனுடன் தங்கி பனியன் கம்பெனியில் வேளை செய்து வருகிறார்.  இவர் தற்போது நான்கு  மாதம் கர்ப்பமாக  உள்ளார்.

இனிய ரமலான் வாழ்த்துகள்

ஜோலார்பேட்டை ரயில் நிலையம்
ஜோலார்பேட்டை ரயில் நிலையம்

இந்த நிலையில், சித்தூரில் வசிக்கும் தனது தாயாரைப் பார்ப்பதற்காக பிப்ரவரி 6-ம் தேதியன்று காலை 6.40 மணிக்கு திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து  சித்தூர் வழியாக செல்லும் கோவை – திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்களுக்கான பெட்டியில்  பயணம் செய்துள்ளார். அவருடன் ஜோலார்பேட்டை வரை சில பெண்களும் பயணித்துள்ளனா்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

அப்போது, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் கிளம்பும்போது  மகளிர் பெட்டியில் யாரும் இல்லாத நிலையில், அங்கிருந்த  ஒருவன்  அந்த கர்ப்பிணி பெண் மட்டும் பயணித்த பெட்டியில்  ஏறி  பயணித்துள்ளான். மேலும்  அந்தப் பெண்ணுக்கு தொடர் பாலியல் வன் கொடுமை செய்ததாக தெரிகிறது.

இந்த சம்பவம் பற்றி சம்மந்தபட்டவர் கூறும்போது

“காலை 10.45 மணியளவில் ஜோலார்பேட்டைக்கு ரயில் வந்தபோது என்னுடன் பயணம் செய்த பெண்கள் அனைவரும் இறங்கிவிட்டனர். ரயில் கிளம்பும் நேரத்தில் அந்த நபர் ஏறினார். இது பெண்கள் பெட்டி எனக் கூறிவிட்டு உடனே இறங்குமாறு கூறியும், “அந்த நபரோ, தெரியமல் ஏறிவிட்டேன் அடுத்து காட்பாடி ஸ்டேஷன் வரும்போது இறங்கி விடுகிறேன் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் என நல்லவன் போல் பேசி உள்ளான்  அதற்குள் ரயில் நகர்ந்துவிட்டது,”

ரயில் பெட்டியில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்த அந்த நபா் பெட்டியில் ஆட்கள் யாரும் இல்லை என்பதை அறிந்துக்கொண்டு  தன்னிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்தான். கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணிடம் இப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டாம் என சத்தம் போட்டேன். ரயிலை நிறுத்துவதற்காக செயினை இழுக்க முயன்றேன். அதற்குள் தலைமுடியைப் பிடித்து தரதரவென இழுத்து அடித்தான்”

பாதிக்கப்பட்ட பெண்
பாதிக்கப்பட்ட பெண்

அந்த நபரிடம் இருந்து தப்பிக்க கழிவறைக்குள் செல்ல  முயன்றேன்  தடுத்து என்னை ரயில் படிக்கட்டுக்கு அருகில் வைத்து அடித்தான். வலது கையை உடைத்தான். அவனிடம் இருந்து தப்பிக்க பத்து நிமிடம் வரை பேராடினேன். திடீரென எட்டி உதைத்தான். அதன் பிறகு என்ன நடந்தது எனத் தெரியவில்லை” என அவர் பேட்டியில் கூறினார்.

அவன்  கீழே தள்ளிவிட்டதில் வேலூர் மாவட்டம் லத்தேரி என்ற ரயில் நிலையத்தில் கர்ப்பிணி பெண் விழுந்திருக்கிறார். தலை, கை, கால் என பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சேர்த்துள்ளார்கள் .

தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் வயிற்றில் வளர்ந்த சிசு உயீர் இழந்துவிட்டதாக நேற்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளிக்கு மாவு கட்டு

கைது செய்ய முற்படும்போது ஹேமராஜ் போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓடியதில்  அவனுக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால்  திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அவன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

சைக்கோ ஹேமராஜ் என்வனின் குற்றமும்  பிண்ணனியும்! 

இவனது சொந்த ஊர் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகேயுள்ள கீழ் ஆலத்தூர் அடுத்த பூஞ்சோலை என்ற கிராமத்தை சேர்ந்தவன்.

இவன் தொழில், பெண்கள் பயணிக்கும் ஆளில்லா பெட்டியை நோட்டமிட்டு தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதுதான் என்றும் “அவன் ஒரு சைக்கோ”  என தற்போது  தெரியவந்துள்ளது.

சைக்கோ ஹேமராஜ்
சைக்கோ ஹேமராஜ்

கடந்த 2022-ஆம் ஆண்டு, சென்னையில் நடந்த அக்னி பாத் வீரர்கள் தேர்வுக்காக சென்று திரும்பிய ஹேமராஜ், காட்பாடி ரயில் நிலையத்தில்  சென்னை – வேலூர் கண்டோன்மெண்ட் வரை செல்லும் மின்சார ரயிலில் இளம்பெண் ஒருவர் மட்டும் பயணித்த ஓடும் ரயில் பெட்டியில் ஏறி கத்தியை காட்டி செல்போனை பறித்துள்ளான்,  அந்த பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட்ட  வழக்கில் ஆர்பிஎப் போலீசார் “ஹேமராஜ்” என்பவனை குண்டர் சட்டத்தில் கைது செய்து 11 மாதம் சிறையில் அடைத்தனர்.

அதேபோல், 2024-ஆம் ஆண்டு, காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்து அந்தப் பெண்ணை தனியாக அழைத்து சென்று கொலை செய்துள்ளான். குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, அந்த வழக்கிலும் குண்டர் சட்டத்தில் மூன்று மாதம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

பொதுமக்கள்  குற்றச்சாட்டு

மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பெட்டியில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம், பெண்களுக்கு உள்ள பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கிறது .

இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு, பெண்கள் பயணிக்கும் ரயில் பெட்டிகளுக்கு தூப்பாக்கி ஏந்திய, “இரயில்வே பாதுகாப்பு காவல்துறையினர்”  அதிகளவில் பணியில் ஈடுபடுத்த வேண்டும். மகளிர் பெட்டியை ரயிலின் நடுப்பகுதியில் இணைக்க வேண்டும்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தொடர்ந்து ரயில் தொடர்பான குற்றச் செயலில் செயல்பட்டு வரும் “சைக்கோ ஹேமராஜ்க்கு”  மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

ஹேமராஜ் ஜோலார்பேட்டை ரயில்வே சந்திப்பில் இருந்து தான் ரயில்  ஏறி உள்ளான் , இங்கு முறையான நடைபாதை டிக்கெட் எடுக்கப்பட்டுள்ளார்களா  அல்லது சந்தேகிக்கப்படும் நபர்கள் நடைமேடையில் சுற்றி திரிகிறார்களா என காவல்துறையினர் கண்காணித்து இருக்க வேண்டு என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

ஏற்கனவே இரண்டு பெண்களிடம் அத்தூமீறி கைதாகி சிறை சென்று வந்த “சைக்கோ ஹேமராஜ்”  சர்வ சாதாரணமாக நடைமேடையில் உலாவி வந்து நோட்டமிட்டு பெண்கள் பெட்டியில் ஏறி மீண்டும் பாலியல் வன்கொடுமை செயலில் ஈடுபட்டிருப்பது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

 

–  மணிகண்டன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.