ராமஜெயத்தை கொல்ல துடித்த ரவுடிகள்!

0

ராமஜெயத்தை கொல்ல துடித்த ரவுடிகள்!

ராமஜெயத்தின் கை,கால்கள் கம்பிகளை எடுத்து ராமஜெயத்தின் கை, கால்களைக் கட்டி, டேப் வைத்து சுற்றி வேனின் இருக்கும் ஸ்கிரீன் துணியைக் கிழித்து வாயில் திணித்து இருந்தார்கள். தலையின் பின்பக்கம் கனமான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கிடந்தார்.

2 dhanalakshmi joseph

இந்தக் கொலை இலங்கையில் உள்ள மட்டக்களப்பு பகுதியில் நடக்கும் கொலைகளின் பாணி என்றும், மலேசியா ஸ்டைல் என்றும் காவல்துறை கூறியது. மேலும், போலீஸார், ராமஜெயம் கொலை செய்யப்பட்ட 2012 மார்ச் 29-ம் தேதி திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு சென்றவர்கள், வந்தவர்களின் பட்டியலை ஆராய்ந்தது. ராமஜெயம் கொலை வழக்கில் விழுந்த ஓட்டைகளை விரிவாகப் பார்க்கலாம். அதற்கு முன்பாக ராமஜெயம் குறித்து தெரிந்துகொள்ளும் பல விசயங்கள் உள்ளது அவற்றை தொடராக பார்த்து வருகின்றோம்.

ராமஜெயம் உயிரோடு இருந்தவரை அவரை ஸ்கெட்ச் போட்ட பலரை தன் வயப்படுத்துவதில் கில்லாடி. இதனால், திருச்சி மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதிலும் உள்ள ரவுடிகள் ராமஜெயத்துடன் நல்ல லிங்க்கில் இருந்தார்கள்.
சவால் விட்ட ரவுடிகள்.

- Advertisement -

- Advertisement -

திருச்சியைக் கலக்கியவர் முட்டை ரவி. டெல்டா மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த ரவியின் தந்தை பொன்மலை ஏரியாவில் முட்டை மொத்த வியாபாரம் செய்துவந்தார். ப்ளஸ் டூ முடித்தபின் படிப்பின் மீது நாட்டம் இல்லாத காரணத்தால் ஏரியா பசங்களோடு ”கட்டைபேட்” என்கிற விளையாட்டை நார்த் ”டி” மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தவன் கபடி சிவா என்பவரோடு அறிமுகமாகிறான் ரவி. ஊர் ஊராகக் கபடி வீரராக வலம்வந்த ரவிக்கு, மாடு பிடியிலும் ஆர்வம் கூடுகிறது.

சின்னச் சின்னப் பந்தயங்களில் ஏற்படும் வாய் தகராறுகளுக்காக அடிதடியில் இறங்க.. பிறகு அதுவே ரவிக்கு தொழிலாகிப்போனது. கபடி சிவாவே ஒரு கட்டத்தில் முட்டை ரவியைவிட்டு விலகிச்செல்ல, முட்டை ரவி தனக்கென ஒரு கோஷ்டியை அமைத்துக்கொண்டான்.

இந்நிலையில் ரவுடி மணிபாரதியிடம் இருந்த மணச்சநல்லூர் மாதவனும் மணச்சநல்லூர் குணாவும் முட்டை ரவி கோஷ்டியில் இணைந்தனர். பண பலமும் சாதி பலமும்கொண்ட முட்டை ரவியின் நட்பு அவர்களுக்குப் பல்வேறு விதத்திலும் உதவியாக இருந்தது. முட்டை ரவி சொல்லும் அனைத்து அசைன்மென்ட்டுகளையும் இருவரும் கூட்டாக செய்ய ஆரம்பித்தனர். அந்த வரிசையில் சாமி ரவி, சுந்தரபாண்டியன் என முட்டைரவியின் கூட்டாளிகள் கூடிக்கொண்டே போனார்கள். இப்படி முட்டை ரவி வளர்ந்தாலும், போலீஸாரிடம் முட்டை ரவி குறித்த விவரங்களோ புகைப்படமோ இல்லை.

ந்நிலையில் முட்டை ரவிக்கு எதிராகப் பொன்மலை ஏரியாவில் ரவுடியாக வலம்வந்த ரோக், முட்டை ரவிக்கு எதிராகக் கம்பு சுற்ற ஆரம்பித்தார். இதில் கடுப்பான முட்டை ரவி ரோக்கின் அண்ணன் சுந்தரை ஓட ஓட விரட்டி வெட்டினான்.

4 bismi svs

அதன்பின்னர் முட்டை ரவிக்குக் காவல் துறை அதிகாரிகளின் நட்பு கூடியது. அப்படியே அரசியல் தொடர்புகளும் அதிகரிக்க, பணம் பார்க்க நினைத்த முட்டை ரவி, திருச்சி மாநகராட்சியில் இருந்த சைக்கிள் ஸ்டாண்டுகள், கட்டணக் கழிப்பிடங்கள், கோயில்களில் உள்ள பூக்கடைகள் உள்ளிட்டவற்றை தன்னுடைய சகாக்களை ஏலம் எடுக்கவைத்தது, பணம் பெருக்கினார்.

அதோடு, முட்டை ரவி செய்த கொலைகளின் எண்ணிக்கை 12 ஆகவும் கட்டப்பஞ்சாயத்து மற்றும் அடிதடி வழக்குகள் கூடிக்கொண்டே போனது. ஒருகட்டத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்த முட்டை ரவி, தன்னை தன் சாதி காக்கும் எனக்கருதி மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அந்த இயக்கத்தில், இளைஞர் அணி பதவி வழங்கப்பட்டது. கூடவே, டெல்டா மாவட்டத்தில் பலம் வாய்ந்த பிரமுகராக இருந்த பூண்டி கலைச்செல்வனின் பக்க பலம் கிடைக்க, முட்டை ரவி அசைக்கமுடியாத சக்தியானான். கூடவே, ராமஜெயத்துடன் நெருக்கமாக இருந்து கொண்டு அவருடைய பெயரை பயன்படுத்தி பஞ்சாயத்து செய்ய ஆரம்பித்தான்.

இப்படி இருக்க, ரௌடிகள் எண்ணிக்கை குறைக்க நினைத்த காவல்துறை, இனியும் முட்டை ரவியை விட்டு வைக்கக் கூடாது என நினைத்தனர். அப்போது தி.மு.க ஆளும் கட்சியாக இருந்ததால், காவல்துறையால், முட்டை ரவியை நெருங்க முடியவில்லை. இந்நிலையில்தான் ராமஜெயத்துக்கும், முட்டை ரவிக்கும் ஒரு பிரச்சினையில் மோதல் ஏற்பட, கோபம் அடைந்த முட்டை ரவி, ராமஜெயத்தை எச்சரித்தார் என்கிறது காவல்துறை.

இதில் கடுப்பான ராமஜெயம், தனக்கு நெருக்கமான போலீஸார் மூலம் முட்டை ரவியை என்கவுன்ட்டர் செய்ய உத்தரவிட்டதாகவும். அட்ய்ஹன் விளைவாக 2006-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளில், முட்டை ரவி என்கவுன்ட்டரில் போட்டுத்தள்ளப்பட்டதாக முட்டைரவியின் ஆதரவாளர்கள் கோபம் ராமஜெயம் பக்கம் திரும்பியது.

முட்டை ரவியின் என்கவுண்டர் குறித்து தெரிந்ததும், தன்னுடைய படைகளுடன் 25-க்கும் மேற்பட்ட கார்களில் வந்த பூண்டி கலைச்செல்வன், அஞ்சலி செலுத்திவிட்டு காவல்துறையினரைப் பார்த்து ஆக்ரோஷமாக திட்டினார். ஆனால் அடுத்த சில மாதங்களில் பூண்டி கலைச்செல்வன், மணல் மேடு சங்கரின் கூட்டாளிகளான குரங்கு செந்தில், காக்குவீரன், கிருஷ்ணகுமார் ஆகியோரால் படுகொலை செய்யப்பட்டதுதான் பரிதாபம்.

இப்படி பலம்வாய்ந்த முட்டைரவியின் கொலைக்கு பின்புலமாக ராமஜெயம் இருந்ததாகக் கருதிய முட்டை ரவியின் ஆதரவாளர்களான ரவுடி மண்ணச்சநல்லூர் குணா, சாமி ரவி ஆகியோர், முட்டை ரவியின் மரணத்துக்குக் காரணமான ராமஜெயத்தைப் போடச் சவால் விட்டதாக அப்போது பரபர தகவல்கள் உலா வந்தது.
அதில் குணா, ‘ராமஜெயத்தைக் கொலை செய்ய ஒரு வி.ஐ.பி. என்னை அணுகினார்’என்று சொன்னதாகவும், ராமஜெயம் கொலை செய்யப்பட்ட போது குணா சிறையில் இருந்தான். ஆனாலும், காவல்துறை குணாவையும், சாமி ரவியையும் தொடர்ந்து காவல்துறை கண்காணிக்க ஆரம்பித்தார்கள்.

ராமஜெயத்தின் நிறைவேறாத ஆசை
கே.என் நேரு அமைச்சராக வலம்வந்தார். அண்ணனுக்கு நிழலாக ராமஜெயம் வலம்வந்தார். அனைத்தும் அவர்தான். எப்படியாவது, தீவிர அரசியலில் குதிக்க வேண்டும், அதற்குத் தேர்தலில் நின்று ஜெயித்துவிட வேண்டும் என்பது ராமஜெயத்தின் ஆசை. அதற்கு எம்.பி. ஆகிவிட வேண்டும் என ஆசைப்பட்டார். அதை நடிகர் நெப்போலியன் எப்படி சாதுரியமாக தட்டிப் பரித்தார் என்பதும், ராமஜெயத்தின் அண்ணன் நேரு போட்ட சபதம் குறித்தும் வரும் இதழ்களில் பார்ப்போம்.

-ப.பிரியதர்சன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.