மாணவர்களோடு மாணவராக மாறிய எஸ்.பி ஆல்பர்ட் ஜான்,IPS !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

காவல்துறை நடவடிக்கைகள் ; பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ! எஸ்பிக்கு , குவியும் பாராட்டு!!  பொதுவாகவே காவல்நிலையம் என்றாலே பலருக்கும் பயம் தான் வரும். சிறு குழந்தைகள் மத்தியில் காவல்நிலையம் என்றால் தப்பு செய்பவர்கள் போகும் இடம் என்று தான் தெரியும். என்னதான் காவல்துற உங்கள் நண்பன் என்று சொல்லினாலும் பலரும் போலீசாரையும், போலீஸ் ஸ்டேஷனையும் பார்த்து நடுங்க தான் செய்கிறார்கள். இந்த நிலையை போக்கவே திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி மாணவர்கள் மத்தியில் ஒரு புதிய முயற்சியை எடுத்து அனைவரின் கவனத்தை பெற்றுள்ளார்.

ஆல்பர்ட் ஜான் IPS
ஆல்பர்ட் ஜான் IPS

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

மடவாளம் அரசு பள்ளி மாணவர்களுக்கு திருப்பத்தூர் காவல்துறை நடவடிக்கைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தை மடவாளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இம்மாணவர்களுக்கு காவல்துறையின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளை  மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் அனைத்து பிரிவுகளை பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது

நீங்கள் வேலை பெறுவது எளிது...

இணையவழி குற்றப்பிரிவு,  குழந்தைகள் குற்ற  தடுப்பு பிரிவு, தனிப்பிரிவு , காவல் கட்டுப்பாட்டு அறை , மாவட்ட குற்ற ஆவண காப்பகப்பிரிவு ,மாவட்ட குற்றப்பிரிவு ,சைபர் செல், மற்றும் ஆகிய பிரிவுகளின் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்களை அறிமுகம் படுத்தியும்  அப்பிரிவுகளை  பற்றியும் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் ஆய்வாளர் காவல் நிலைய செயல்பாடுகள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர் காவலர்கள்

3
ஆல்பர்ட் ஜான்,IPS.
ஆல்பர்ட் ஜான்,IPS.

இறுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS.,யிடம் அங்குசம் செய்திக்காக கூறுகையில் காவல்துறையின் அனைத்து நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளைப் பற்றியும் இணையவழி பிரச்சனைகள், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகளை அதை எவ்வாறு தடுக்கலாம் எனவும் பெண்கள் உதவி எண்-181, குழந்தைகள் உதவி எண்-1098,  சைபர் கிரைம் உதவி எண்-1930, KAVAL UDHAVI APP குறித்த முக்கியத்துவங்களை மாணவர்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தேன் இந்த முயற்சி தமிழ்நாட்டில் இதுவே முதல்முறை என்றார்

4

இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ், அப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சுமார் 40 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

– மணிகண்டன்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.