சீனியர் எம்.எல்.ஏ. – சீனியர் அமைச்சர் – சுழன்றடிக்கும் சர்ச்சை ! முற்றுப்புள்ளி எப்போது ?

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

சீனியர் எம்.எல்.ஏ. – சீனியர் அமைச்சர் – சுழன்றடிக்கும் சர்ச்சை ! முற்றுப்புள்ளி எப்போது?

திருச்சி – இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்துகொள்வதாக விரக்தியில் தலைமைக்கு கடிதம் அனுப்பியதாகவும், அவரை சமாதானப்படுத்த அவசரமாக திருச்சி கிளம்பி வந்த அமைச்சர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள 5 எம்.எல்.ஏ.க்களையும் சந்தித்து சமாதானம் செய்ததாகவும் செய்தி ஒன்று  பரபரப்பாக வெளியானது.

செம்ம சூப்பரான திரைப்படம்..

மிகச் சமீபத்தில் தான், ”அரசு விழாவில் ஏரியா சீனியர் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆப்சென்ட்! அமைச்சருடன் மனவருத்தமா?” என்ற தலைப்பில் அங்குசத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அமைச்சர் கே.என். நேருவின் சொந்த ஊரான காணக்கிளியநல்லூரில் நடைபெற்ற அரசு விழாவில், தொகுதி எம்.எல்.ஏ.வான சௌந்தரபாண்டியன் கலந்துகொள்ளாமல் புறக்கணித்திருந்தார். அமைச்சர் கே.என்.நேருவுக்கும், எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியனுக்கும் தொடர்ச்சியாகவே, பல்வேறு மனவருத்தங்கள் இருந்து வந்ததாகவும்; கட்சியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் கழக உடன்பிறப்புக்கள் கருத்துக்கள் தெரிவித்திருந்தனர்.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

இந்த பின்னணியிலிருந்துதான், அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. கட்சி‌ நடத்திய நீட் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்திலும் எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன் கலந்துகொள்ளாதது பல்வேறு யூகங்களுக்கு இடமளிப்பதாகவே இருக்கிறது.

வழக்கம்போலவே, இந்தமுறையும் வெளிப்படையாக கருத்துக்கூற மறுத்துவிட்டார், எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன். சென்றமுறையாவது நமது அழைப்பை ஏற்று பேசினார். இம்முறை, வாட்சப்பில் “தவறானதுங்க” என்ற ஒற்றை வார்த்தையோடு முடித்துக்கொண்டார்.

5

”இது முதல்முறை இல்லை. ஏற்கெனவே, கட்சிக்கு புகாராக பல விசயங்களை பட்டியலிட்டு அனுப்பியிருந்தார். மேலிடம் வரையில் கம்ப்ளைண்ட் செஞ்சும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் போனதால்தான், விரக்தியின் உச்சத்திற்கே போயிட்டார். போனமுறைகூட, இலால்குடி தொகுதியில நேருவின் மகன் அருண்நேருவை நிப்பாட்டனும்னு முயற்சி செஞ்சாங்க. அப்பவே, கடுப்பாகி கட்சியில இருந்தே விலகிக்கிறேனு சொல்லவும்தான், எம்.எல்.ஏ. சீட்டே கிடைச்சுச்சு. அப்போ ஸ்டாலின் அதிகாரத்தில இல்லை. எம்.எல்.ஏ.வை கூப்பிட்டு பேசினாரு. இப்போ, அவரும் கண்டுக்கலைனு ரொம்பவே வருத்தத்துலதான் இருக்காரு.

7

அதற்கப்புறம், இந்த பூசல் இன்னும் பெருசாதான் ஆச்சு. காண்ட்ராக்ட் ஒதுக்கிறதுல தலையீடு. எம்.எல்.ஏ. ரெக்கமெண்டேசனுக்கு எந்த பவரும் இல்லாமல் போனது. கட்சிக்குள்ளயும் அமைச்சருக்கு வேண்டிய ஆளுங்களா பார்த்து ஒன்றிய, மாவட்ட அளவில போஸ்டிங் போட்டுக்கிட்டாங்க. இவருக்கு எதிரா கொம்பு சீவிவிடுற வேலையை பார்த்தாங்க. நேத்து வந்தவங்க எல்லாம், சீனியரான எம்.எல்.ஏ.வ சீண்டினா அவருக்கு மட்டும் கோபம் வராதா? சம்பாதிக்கவே விட மாட்றீங்க. அப்புறம் செலவே பண்ண மாட்றாருனு குறை சொன்னா எப்படி?” என தனிப்பட்ட முறையில் தனது ஆதங்கத்தை கொட்டினார், முடிநரைத்த மூத்த உடன்பிறப்பு ஒருவர்.

வேலை விசயமா, ரெக்கமண்டேசன் வேணும்னு கட்சிக் காரன் கேட்டாலும், ”கொடுக்கிறது பெரிய விசயமில்லை. கொடுத்தாலும் அது உனக்கு பிரயோஜனம்படாது. பத்தோட பதினொன்னாதான் தூக்கிப்போடுவானுங்க. முடிஞ்சா மந்திரிய பாருனு” பட்டுனு சொல்லிடுவாராம்.
மாவட்டத்தின் ஐந்து எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து சமாதானம் பேசினாரா, அமைச்சர்? என்ற கேள்வியோடு எம்.எல்.ஏ. உதவியாளர் ஒருவரிடம் பேசினோம். ”அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே.

நேற்றுகூட அமைச்சருடன் ஒரு விழாவில் எங்க எம்.எல்.ஏ.வும் ஒன்றாகத்தான் கலந்துகொண்டார்கள். அறிவாலயம் பக்கம் போயிருந்தா, நீங்களே நியூஸ் போட்டிருக்க மாட்டீங்களா?” என நம்மையே மடக்கினார், அவர்.
”அஞ்சு விரலும் ஒன்னா இருக்கிறது இல்ல. அதுமாதிரிதான் கட்சினா, இப்படி அப்படித்தான் இருக்கும். எல்லாம் அனுசரித்துதான் போகனும்” என்றார், அருகிலிருந்த உடன்பிறப்பு ஒருவர்.

“ஸ்டாலின்தான் வாராரு… விடியல் தரப்போறாரு…”னு வீதி தோறும் முழங்கிய கழக உடன்பிறப்புக்களுக்கு மட்டும் ”விடியல்” தராமலா போய்விடப்போகிறார் கழக தலைவர்?

ஆனால், ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். “நெருப்பில்லாமல், புகையாது சார்!”

– ஆதிரன்.

6
Leave A Reply

Your email address will not be published.