தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் போட்டியின்றி தேர்வு!

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் போட்டியின்றி தேர்வு!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் 15 வார்டுகள் உள்ளன. இவற்றில் திமுக வார்டு உறுப்பினர்கள் 11 பேர். அதிமுக உறுப்பினர்கள் 3 பேர், பிஜேபி உறுப்பினர் 1 என 15 உறுப்பினர்கள் உள்ளனர். ஏற்கனவே அதிமுக ஒன்றிய குழு தலைவராக இருந்த லதாரங்கசாமி மீது ஊழல் புகார்கள் எழுந்ததால், அவர் மீது கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

4


இதில் பிஜேபி உட்பட 12 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அதிமுக ஒன்றிய குழு தலைவர் லதாரங்கசாமி பதவி இழந்தார். திமுகவின் பலம் அதிகமாக இருந்த நிலையில் 5 மாதத்திற்கு பிறகு, இன்று காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் தேர்வு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று நடைபெற்றது.
தேர்தல் அலுவலராக கரூர் மாவட்ட தணிக்கை உதவி இயக்குனர் இந்திராணி தேர்தலை நடத்தினார்.

இதில் திமுக வை சேர்ந்த 2 வது வார்டு உறுப்பினர் கூடலூரை சேர்ந்த சுகந்திசசிகுமார் போட்டியின்றி ஒன்றிய குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். புதியதாக ஒன்றிய குழு தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட சுகந்தி சசிகுமாரை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் சால்வை அணிவித்து வாழ்த்தினார். அதைத்தொடர்ந்து திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் புதிய ஒன்றிய குழு தலைவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

5
Leave A Reply

Your email address will not be published.