சந்தோஷத்தில் சாந்தினி தமிழரசன் !
சந்தோஷத்தில் சாந்தினி தமிழரசன் !
கே.பாக்யராஜ் கதை—திரைக்கதை எழுதி 2010—ல் ரிலீசான ‘சித்து +2’ வில் சாந்தனு பாக்யராஜுக்கு ஜோடி போட்டு, கோலிவுட்டில் அறிமுகமானவர் சாந்தினி தமிழரசன். சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சாந்தினி, தெலுங்கு+ தமிழ் மிக்சிங் ஃபேமிலியைச் சேர்ந்தவர்.
இந்த பன்னிரெண்டு வருடங்களில் 30—க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும் சோலோ ஹீரோயினாக சாந்தினியால் ஜொலிக்க முடியவில்லை. ஆனாலும் கிடைத்த வாய்ப்புகளையும் விடவில்லை. டான்ஸ் மாஸ்டர் நந்தா என்பவரை 2018–ல் திருமணம் செய்து கொண்டாலும் சினிமா சான்ஸுகளையும் மிஸ் பண்ண விரும்பவில்லை சாந்தினி.
அவ்வப்போது செம ஹாட் ஸ்டில்களை ரிலீஸ் பண்ணிவரும் சாந்தினிக்கு, சமீபத்தில் ரிலீசான ‘குடிமகான்’ படம் நல்ல நடுத்தர குடும்பத்தலைவிக்கு கேரக்டருக்கு சூப்பர் சாய்ஸ் சாந்தினி தான் என்ற பெயரை வாங்கிக் கொடுத்திருப்பதால் செம சந்தோஷத்தில் இருக்காராம் சாந்தினி தமிழரசன்.
–மதுரை மாறன்