கோவில் நகரமாம் ஸ்ரீரங்கத்தை கொலை நகரமாக மாற்றி வரும் கேங்ஸ்டர்கள்…

0

கோவில் நகரமாம் ஸ்ரீரங்கத்தை கொலை நகரமாக மாற்றி வரும் கேங்ஸ்டர்கள்…

 

கடந்த 28.04.2020  ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் பிரபல ரவுடியும், அரசியல் பிரமுகருமான தலைவெட்டி சந்துரு தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது ஸ்ரீரங்கம் மேம்பாலத்தில் வைத்து பின்னே காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று சந்திர மோகன் தலையைத் துண்டித்து கொலை செய்தது.

இதையடுத்து சந்திரமோகன் விட்டுச்சென்ற இடத்தை பிடிப்பதற்கான போட்டி ஸ்ரீரங்கம் யங் கேங்ஸ்டர்களுக்குள் ஆசை வளர ஆரம்பிக்க தன்னை பெரிய ஆள் என்று ஸ்ரீரங்கம் பகுதியில் காண்பிப்பதற்காக என்னேரமும் பட்டா கத்தியுடன் வலம் வந்து கொண்டிருக்கிறதாம் ஒரு கேங்.

யார் அந்த அடுத்த கேங்க்ஸ்டர்?

சந்திர மோகனின்  நிழலாக நேரடியாக வலம்வந்து கொண்டிருந்த ஸ்ரீரங்கம் டிரைனேஜ் தெருவை சேர்ந்த மகேஸ்வரன், சந்திரமோகன் நடத்தும் கட்டப்பஞ்சாயத்தில் முழு மூச்சாக இருந்து அதனை முடிப்பதும், ஆள் பலத்தை கொடுப்பதுமாய் இருந்து,தற்போது சந்திரமோகன் இடத்திற்கு வர முழுமூச்சாக ரவுடிசத்தில் தனது சகோதரர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் இறங்கியுள்ளனர்.

திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் ஐபிஎஸ்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 9 மணி அளவில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாள பணிக்கு வந்திருந்த வடமாநில இளைஞர்களிடம் கஞ்சா போதையில் சண்டைபோட்டு பாட்டிலால் குத்தியுள்ளார். இதனால் வடமாநில இளைஞர் ஒருவர் பலத்த காயத்திற்கு உட்பட்டு மூன்று தையல் போட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது தொடர்பாக அப்போது ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பணியிலிருந்த போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையறிந்த அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.

இதுதொடர்பாக மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பேசிய போது.. இது போன்ற தகவல் இதுவரை எங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும் நாங்கள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ள இருக்கின்றோம்.. மாநகரில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றோம். அவர்களது குற்றச் செயல்கள் பெருகும் எனில் பொதுமக்கள் நலன் கருதி காவல்துறை தன் கடமையை செய்யும் என்றார்..

மேலும் இது தொடர்பாக திருச்சி மாவட்ட ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார்  பேசிய போது….

திருச்சி மாவட்ட ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார்

திருச்சி மாவட்டத்தில் உள்ள ரயில் நிறுத்தங்களில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருக்கு இச்சம்பவம் குறித்த தகவல் தெரிவித்து, விரைவில் கூடுதல் பாதுகாப்பு ரயில் நிலையங்களில் வழங்கிடவும், மேலும் இரவு நேரங்களில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் கோட்டை ரயில் நிலையம் போன்ற முக்கிய ரயில் நிறுத்தங்களில் இரவு நேரங்களில் தேவையில்லாமல் திரியும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை ரயில்வே காவல்துறை மூலம் எடுக்கப்படும் என்றார்.

திருச்சி மாநகர மாவட்டங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு காவல்துறை விரைவில் சன்மானம் வழங்கும் வகையில் திருச்சி மாவட்ட காவல்துறை தன் கடமையை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

 – ஜித்தன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.