அங்குசம் பார்வையில் ‘தலைமைச் செயலகம் ‘

0

அங்குசம் பார்வையில் ‘தலைமைச் செயலகம் ‘ தயாரிப்பு: ‘ ராடன் மீடியா ஒர்க்ஸ் ‘ ராதிகா சரத்குமார் & ஆர்.சரத்குமார். டைரக்டர்: வசந்தபாலன். ரிலீஸ்: ஜி-5 ஒரிஜினல் ( ஓடிடி) ஆர்ட்டிஸ்ட்: கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ரம்யா நம்பீசன், பரத், சந்தான பாரதி, ஆதித்யா மேனன், கவிதா பாரதி, கனி குஸ்ருதி, ஒய்.ஜி.மகேந்திரா. டெக்னீஷியன்கள் –ஒளிப்பதிவு: ‘வைட் ஆங்கிள் ‘ ரவிசங்கர், இசை: ஜிப்ரான் & சைமன் கே.கிங், எடிட்டிங்: ரவிக்குமார், ஆர்ட் டைரக்டர்: சசிகுமார், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர்: பூஜா சரத்குமார், பிஆர்ஓ: சதீஷ் ( எய்ம்)

தலைமை செயலகம் வெப் சீரியஸ்
தலைமை செயலகம் வெப் சீரியஸ்
கலைஞர் பிறந்தநாள்

கலைஞர் பிறந்தநாள்

எட்டு எபிசோட் துகள் கொண்ட வெப் சீரிஸ் தான் இந்த ‘தலைமைச் செயலகம் ‘. ‘மக்களின் மீதுள்ள காதல் தான் உண்மையான நீதி’ என்பதை எட்டு எபிசோடிலும் நேர்மைத் திறனுடன் பதிவு செய்துள்ளார் டைரக்டர் வசந்தபாலன். தமிழ்நாடு முதலமைச்சராக இருப்பவர் அருணாசலம் ( கிஷோர்). அவருக்கு ஆலோசகராக இருப்பவர் துர்கா ( ஸ்ரேயா ரெட்டி). அருணாசலத்தின் மகள் அமைச்சர் அமுதவல்லி ( ரம்யா நம்பீசன்).

ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் முதல்வருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வரும் நேரம். தனது அப்பா தண்டைனையிலிருந்து டெல்லி அரசியல் புரோக்கர் ஒருவர் மூலம் காய் நகர்த்துகிறார் மகள் அமுதவல்லி. நீதிபதியை விலைக்கு வாங்கும் வேலையும் நடக்கிறது. இதையெல்லாம் எதிர்க்கிறார் துர்கா. இன்னொரு பக்கம் வழக்கை காரணம் காட்டி முதல்வரை மிரட்டுகிறது ஒன்றிய அரசு. ஒரு கட்டத்தில் கட்சியையே அடமானம் வைக்க கட்டாயப்படுத்துகிறது. இதையெல்லாம் சமாளித்து ஊழல் வழக்கில் இருந்து முதல்வர் விடுதலை ஆனாரா என்பதை எட்டாவது எபிசோட் சொல்கிறது.

- Advertisement -

தலைமை செயலகம் வெப் சீரியஸ்
தலைமை செயலகம் வெப் சீரியஸ்

ஜெயலலிதாவின் அஇஅதிமுகவில் சசிகலா தலைமையிலான கொள்ளைக் கும்பல் தமிழ்நாட்டை சூறையாடிய கொடுமையை சூசகமாக அல்ல, நேரடியாகவே போட்டுத் தாக்கிவிட்டார் வசந்த பாலன். அஇஅதிமுக என்பதை அகில இந்திய எழுச்சி தமிழக முன்னேற்றக் கழகம் என மாற்றிவிட்டார்.

4 bismi svs

மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தக் கதையை ராதிகாவிடமும் சரத்குமாரின்மும் வசந்த பாலன் சொன்ன போது, அவர்கள் பிஜேபியிடம் அவர்களின் கட்சியான அஇசமக.வை விற்பனை செய்யவில்லை. அதனால் இதை வெப் சீரிஸாக எடுக்க ஒத்துக் கொண்டிருப்பார்கள். எல்லாம் எடுத்து முடித்து படத்தைப் போட்டுப் பார்க்கும் நேரத்தில் தான் பின்னிரவு இரண்டு மணிக்கு சரத்குமாருக்கு எழுச்சி ஏற்பட்டு, அதை ராதிகா விடம் ‘டிஸ்கஸ்’ கட்சியை சேல்ஸ் பண்ணிவிட்டார்கள்.

ஆனால் வசந்தபாலனோ பக்கா ப்ளானோடு, ஜார்கண்டில் பழங்குடி மக்களை விரட்டியடிக்க நினைத்த சுரங்க மாஃபியாக்கள், அந்த மண்ணையும் மக்களையும் காத்து நிற்கும் நக்சல்களின் போராட்ட வெற்றி, கம்பீரமாக பறக்கும் செங்கொடி இதை முதல் எபிசோடிலேயே அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார் டைரக்டர் வசந்தபாலன். இந்த வெப் சீரிஸில் அவர் சொல்லும் அதிமுக்கியமான, இந்தியாவிற்கு இப்போது அவசியமான சேதியே..

தலைமை செயலகம் வெப் சீரியஸ்
தலைமை செயலகம் வெப் சீரியஸ்

மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்காரிய தத்துவம் தான் சிறந்தது என்பது தான். “ஜனநாயகத்திற்கு எதிரி ஊழல் என்பார்கள். பிறகு அந்த ஊழலை ஆதரிப்பார்கள். அவர்களின் தெளிவான நோக்கமே ஜனநாயகத்தை அழித்து பாசிசத்தை ஆட்சியில் அமர்த்துவது தான்” இந்த வசனம் ஒன்றே வசந்த பாலனின் அரசியல் அறத்திற்கு சாட்சி.

தலைமை செயலகம் வெப் சீரியஸ்
தலைமை செயலகம் வெப் சீரியஸ்

இப்போது இந்தியாவை அழித்துக் கொண்டிருக்கும் சர்வாதிகார நாசகார கும்பலுக்கு சவுக்கடி காட்சி. முதல்வராக நடித்த கிஷோரும் பத்திரிகையாளராக நடித்த ஸ்ரேயா ரெட்டியும் நடிப்பில் முதல் இடத்திற்கு போட்டி போட்டுள்ளார்கள். பர்த், தர்ஷா குப்தா எபிசோட் தான் கொஞ்சம் டல்லடிக்குது. அதே போல் ஸ்ரேயாவின் மகள் மாயா கேரக்டர் படு எரிச்சல்.

செகண்ட் பிளேஸில் டாப் ஸ்கோரர் சிபிஐ ஆபீசராக வரும் ஆதித்யா மேனன் தான். ஜார்க்கண்ட், ஹைதராபாத், மேற்கு வங்காளம் என சுற்றிச் சுழன்று உழைத்திருக்கிறார் கேமரா மேன் வைட் ஆங்கிள் ரவிசங்கர். ஜிப்ரானும் சைமன் கிங்கும் படத்தின் அரசியல் டெம்ப்ளேட் டெம்போ குறையாமல் இருக்க பின்னணி இசையால் நிரப்பி ஜமாய்த்திருக்கிறார்கள்.. கண்டிப்பாக இந்த வெப் சீரிஸில் நாட்டுக்குத் தேவையான நல்லது மட்டும் தான் இருக்கு.

– மதுரை மாறன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.