அந்த நாலு பேருக்கு நன்றிங்க… டிஎம்எஸ்

0

மண்ணின் மைந்தர் டிஎம்எஸ்க்கு மதுரையில் சிலை வைக்க பச்சைக்கொடி காட்டிய முதல்வர் ஸ்டாலின் என்ற தலைப்பில் 2023 மார்ச் 15ம் தேதி நமது “அங்குசம் இதழில்” டிஎம்எஸ்ஐ பற்றி அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள், டாக்டர் சரவணன் மற்றும் மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் ஆகியோர் பேட்டி அளித்திருந்தனர்.

அதே போல 2023 ஏப்ரல் 1-5ம் தேதி இதழில் மதுரையை கலக்கிய டிஎம்எஸ்-ன் 100வது பிறந்தநாள் இன்னிசை நிகழ்ச்சி என்ற தலைப்பில் செய்தி, படங்களுடன் வெளியிட்டு அங்குசம் இதழ் சிறப்பு சேர்த்தது. இந்நிகழ்ச்சியை சுப்பிரமணியன் நடத்தினார். இதில் அமெரிக்காவிலிருந்து பாடகர் ஒருவர் வந்து பாட்டுப் பாடி அசத்தினார்.

தமிழக சட்டசபை மானியக் கோரிக்கையில் ரூ.50 லட்சத்தில் டி.எம்.சௌந்தரராஜனுக்கு அவரது நூற்றாண்டு விழாவையொட்டி திருவுருவச்சிலை மதுரையில் அமைக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார். இது அவரது ரசிகர்கள், குடும்பத்தினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.