தொழில் அதிபரை திருச்சிக்கு கடத்தி வந்து மிரட்டிய ஓ.பி.எஸ். சகோதரர் ஓ.ராஜா !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

தொழில் அதிபரை திருச்சிக்கு கடத்தி வந்து மிரட்டிய ஓ.பி.எஸ். சகோதரர் ஓ.ராஜா !

 

தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜா தோட்டத்தில் வேலை செய்தவர் மர்ம மரணம், போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக ஆவின் தலைவர் பதவி,  என தொடர்ச்சியாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். இந்த முறை கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

ரோஸி வித்யாலயா பள்ளி

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

காரைக்குடியில் ஆள்கடத்தல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் துணை முதலமைச்சராக இருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா மற்றும் அவரது மகன் அமர் உள்ளிட்டோர் மீது ஆள்கடத்தல், கொலைமிரட்டல் வழக்கு பதிவு செய்யுமாறு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

3

காரைக்குடி கல்லூரி சாலையில் கிரீன்வே டிரேடர்ஸ் என்ற பெயரில் பழனி என்பவர் வெளிநாட்டு பர்னிச்சர் பொருட்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இவரிடம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவரது சகோதரர் ராஜா, அவரது மகன் அமர் ஆகியோர் நடத்தி வரும் பள்ளிக்கு ஜூலை 13, 2019 அன்று 2 .10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சோபா செட் ஆர்டர் செய்துள்ளனர்.

 

அதற்கான பணத்தை கேட்டபோது ஓ.பி.எஸ்-ன் சகோதரர் ராஜாவும் அவரது மகனும் தராமல் இழுத்தடித்துள்ளனர். மேலும், கடையின் உரிமையாளர் பழனியை கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி காலை 9.00 கடத்தி திருச்சிக்கு அழைத்துச் சென்று அபிராமி ஹோட்டலில் அறை எண் 201 இல் வைத்திருப்பதாகவும், வெற்று முத்திரை ஆவணங்களில் கையெழுத்திட மிரட்டியுள்ளனர்.

 

4

அவர் மறுத்தபோது, ​​அவரை தேனி மாவட்டத்தில் பெரியகுளத்தில் ராஜாவுக்குச் சொந்தமான ரோஸி வித்யாலயா என்ற பள்ளிக்கு அழைத்துச் சென்று, கத்திமுனையில் காகிதங்களில் கையெழுத்திடச் செய்தார். பின்னர் அவர்கள் அவரை பெரியாகுளம் பிரதான சாலையில் இறக்கிவிட்டு சென்றனர்.

 

அங்கிருந்து தப்பித்து வந்த பழனி, துணை முதலமைச்சரின் சகோதரர் ராஜா மற்றும் அவரது மகன் மீது ஆள்கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காரைக்குடி டிஎஸ்பி அருணிடம் புகார் அளித்துள்ளார்.  மேலும் 2.10 கோடி ரூபாய் பணம் கேட்டு துன்புறுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து போலிசார் தற்போது திருச்சிக்கு ஓட்டலுக்கு கடத்தி வந்து மிரட்டியது குறித்து விசாரணையை துவங்கியுள்ளனர்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.