நியோமேக்ஸ் மோசடி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவேன் ! விசாரணை அதிகாரிகளை எச்சரித்த நீதிபதி !

0

மதுரையை தலைமையிடமாக கொண்டு நியோமேக்ஸ் என்ற நில நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் 60க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களை உருவாக்கி அதிக வட்டி தருவதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக, நெல்லை, பாளையங்கோட்டை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை கிட்டதட்ட 23 மாவட்டங்களில்   கிளைகளை நிர்வகித்து வந்த 17 நிர்வாகிகள் இது வரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சைமன் ராஜா, கபில், பத்மநாபன் , இசக்கி ஆகிய 5 நபருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது

இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த கவுதமி என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

கமலக்கண்ணன் - சிங்காரம்
கமலக்கண்ணன் – சிங்காரம்

அதில்என் கணவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். கும்பகோணத்தை சேர்ந்த தன்ராஜ் என்பவர் பழக்கம் ஆனார்..  அவர் நியோமேக்ஸ் நிறுவனம் மதுரை அலங்காநல்லூர் மலைப்பகுதியில் மிகப்பெரிய சுற்றுதலம் உருவாக்கி வருகிறது.  இதில் முதலீடு செய்தால் இரட்டி இலாபம் கிடைக்கும் என்றார்.  அதை நம்பி நியோமேக்ஸ் இயக்குநர்கள் வீரசக்தி, பாலசுப்ரமணியன்,மாதவன், கமலக்கண்ணன், ஆகியோரை சந்தித்து பேசி 2019ம் ஆண்டு 10 இலட்சம் முதலீடு செய்தேன்.  இதில் சென்னை மாண்டூரில் நிலம் வாங்கியதாகவும்,  எனக்கு மாதம் 15,000 வட்டியும் கொடுத்தனர்.

இதை தொடர்ந்து எங்கள் உறவினர்கள் பலரிடம் ஒரு கோடி 5 இலட்ச ரூபாய் நியோ மேக்ஸ்சில் முதலீடு செய்தேன். சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி வைத்து உள்ளோம். மத்திய அரசின் பெரிய திட்டங்கள் வர உள்ளது. எனவே இதில் இணைந்து அதிக லாபம் பெறலாம். என ஆசை வார்த்தை கூறினர். ஆனால் கூறியபடி பணமோ, நிலமோ வழங்கவில்லை. இவர்கள் முதலீட்டாளர்களின் பணத்தை கல்லூரிகள், வெளிநாடுகளில் முதலீடு செய்து உள்ளனர். ஆனால் தொடர்ந்த எங்களுக்கு வட்டியோ, பணமோ எதையும் கொடுக்கவில்லை,  திரும்ப கேட்ட போது எங்களை மிரட்ட ஆரம்பித்தனர்.  

இவர்கள் எங்களை போன்று ஆயிரக்கணக்கணோரிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்து உள்ளது. தற்போது மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி யில் ஈடுபட்டவர்களோடு, இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகள் சிலர், உறுதுணையாக உள்ளதாக சந்தேகம் எழுகிறது.

கம்பம் பகுதியில் நியோமேக்ஸ் ஏஜெண்ட் தற்கொலை
கம்பம் பகுதியில் நியோமேக்ஸ் ஏஜெண்ட் தற்கொலை

மேலும், முக்கிய குற்றவாளிகளை கைது செய்வதில், கால தாமதமாகிறது. எனவே, பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கே.கே ராமகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் , முக்கிய குற்றவாளிகளை இது வரை கைது செய்ய வில்லை. கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ஜாமினில் வெளி வந்து உள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி தொடர்பானது எனவே இந்த வழக்கை CBI விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றார்.

அரசு தரப்பில், ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் முக்கியமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். நேற்று 18.09.2023 2 பேர் கைது செய்யப்பட்டனர். விரைவில் மற்றவர்களையும் கைது செய்து விடுவோம்.

நியோமேக்ஸ்
நியோமேக்ஸ்

இது வரை 5000 சொத்து ஆவனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது, புதிய DSP நியமிக்கப்பட்டு உள்ளார். உரிய முடிவு எட்டப்படும் என வாதிட்டார்.

இதை தொடர்ந்து, நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவாக கைது செய்ய வேண்டும். தேவைப்பட்டால், இந்த வழக்கை விசாரிக்கும் பொருளாதார குற்றப்பிரிவு, விசாரணை அதிகாரிகள் தொலைபேசி தொடர்புகள் சோதனை செய்ய நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கில் பிரதான குற்றவாளிகளை இதுவரை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி , உரிய. நடவடிக்கை எடுத்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் இல்லையேல், சிபிஐ விசாரணைக்கு மாற்ற நேரிடும்? என கூறி  விசாரணையை செப்டம்பர் 27ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.