திருச்சி பச்சமலை நச்சிலிப்பட்டியில் தொடரும் கட்டப்பஞ்சாயத்து…. பாதிக்கப்படும் மலைவாழ் மக்கள்..! வீடியோ வாக்குமூலம் !

-ஜோஸ்

0

திருச்சி பச்சமலை நச்சிலிப்பட்டி  தொடரும் கட்டப்பஞ்சாயத்து பாதிக்கப்படும் மலைவாழ் மக்கள்..! வீடியோ வாக்கு மூலம் 

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இடம் பச்சமலை. இங்குள்ள தென்புற நாடு ஊராட்சியில் மொத்தமுள்ள 16 கிராமங்களில், ‘நச்சிலிப்பட்டி’ எனும் மலைக்கிராமம் உள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த 8 குடும்பங்களை, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கு.சிவக்குமார் என்பவர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததோடு, மீண்டும் ஊருக்குள் அனுமதிக்க லட்சக்கணக்கில் பணம் கேட்கிறார் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து பாதிக்கப்பட்ட க.பாஸ்கரனை சந்தித்து பேசினோம்.

https://businesstrichy.com/the-royal-mahal/

வீடியோ லிங்

 

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

நடந்த சம்பவம் குறித்து அவர் நம்மிடம் கூறுகையில்,

“நான் ரயில்வே ஊழியர். திருச்சியில் வசித்து வருகிறேன். கடந்த 2011ல் தென்புற நாடு ஊராட்சி மன்ற தலைவராக அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிவக்குமார், அவரது பதவிக் காலத்தில், பணிகள் ஏதும் நடக்காமல் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதை அறிந்த எனது தாய்மாமா குமாரசாமி சிவக்குமாரிடம் கேள்வி கேட்டதால் உண்டான ஆத்திரத்தில் தன் ஆதரவாளர்களுடன் குமாரசாமியை கடுமையாக தாக்கியுள்ளார்.

சிகிச்சை பெற்ற வந்த குமாரசாமியை அவரது தம்பி, மாமன், மச்சான், உறவினர்கள் மருத்துவமனை சென்று பார்த்ததை அறிந்த சிவக்குமார் மற்றும் தங்கராசு, நடராஜன், கலியபெருமாள், பாப்பு ஆகியோர் அந்த 8 குடும்பத்தையும்  ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாகவும், யாரும் இவர்களுடன் பேசக்கூடாது, தண்ணீர் கொடுக்கக் கூடாது, கோவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது எனவும், அப்படி ஊரோடு சேர வேண்டும் என்றால் குடும்பத்திற்கு தலா ஒரு லட்ச ரூபாய் அபராதம் தந்து விட்டு தான் ஊருடன் சேர வேண்டும். மீறினால் யாரும் உயிருடன் இருக்க முடியாது என கொலை மிரட்டல் விடுத்தனர்.

வீடியோ லிங்

இதையடுத்து ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட 8 குடும்பங்களில் 4 குடும்பத்தினர் அபராதமாக குடும்பத்திற்கு 60 ஆயிரம், 70 ஆயிரம், 80 ஆயிரம் என பணம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை 22ம் தேதி சிவக்குமார் என்னை செல்போனில் அழைத்து, ‘ஊருக்குள் உங்களை அனுமதிப்பது குறித்து பஞ்சாயத்து நடக்கிறது. அதனால் ஊருக்கு கிளம்பி வா’ என என்னை வரச் சொன்னார்கள்.

இதையடுத்து நான் என் அண்ணன் முருகேசனுடன் ஒரு காரில் அங்கு சென்றோம். பஞ்சாயத்தில், நாங்கள் 1 லட்சம் அபராதம் கட்டினால் ஊருக்குள் அனுமதிப்போம் என்றார்கள். நான் தர முடியாது என்று கூறியதால் என்னையும், முருகேசனையும் தாக்கவும், இதைக் கண்ட, நாங்கள் வந்த காரின் ஓட்டுநர் சரவணன் என்பவர் நடந்த சம்பவத்தை செல்போனில் படம் எடுக்க, அதைக் கண்ட சிவக்குமார் ஆட்கள் டிரைவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து செல்போனை உடைத்ததுடன், டிரைவரை விடுவிக்க 1 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் அனைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மிரட்டத் தொடங்கினர். அப்போதைக்கு எங்களிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை கொடுத்து டிரைவரை மீட்டு அழைத்து வந்தோம்.

 

 

 

 

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஆகஸ்ட் 25-செப் 9, 2022 அங்குசம் இதழில் வெளிவந்தது.

 

வீடியோ லிங்

சிவக்குமார் மற்றும் அவருடன் சேர்ந்தவர்கள், ஊருக்குள் இது போல் ஏதாவது ஒரு காரணம் சொல்லி கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருகின்றனர். நச்சிலிப்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவரிடம் 60 ஆயிரம், முருகேசன் 90 ஆயிரம், மோகன் ரூ.47,000, டி.கணேசன் ரூ.30,000, செல்லையன் ரூ.60,000 என பலரிடமும் பல்வேறு காரணங்களுக்காக அபராதம் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்து வருகின்றனர். பணம் கொடுத்தவர்கள் அனைவரும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வைத்திருந்த கொஞ்ச நஞ்ச நிலங்களையும் விற்று தான் அபராதம் கட்டியுள்ளனர்.

இந்த கட்டப்பஞ்சாயத்து குறித்து யாராவது காவல்நிலையத்தில் புகார் கொடுத்து போலீஸார் வந்து விசாரித்தால், அது போன்ற எந்த கட்டப்பஞ்சாயத்தும் இங்கு நடக்கவில்லை என சொல்ல வேண்டும். மீறி யாராவது தவறாக பேசினால் அவர்களையும் ஊரைவிட்டு ஒதுக்கிவிடுவோம் என மிரட்டுகிறார்கள். நான் (பாஸ்கர்), எனது தாய்மாமன் குமார சாமி உள்ளிட்ட 4 குடும்பங்கள் தற்போது ஊருக்குள் செல்ல முடியாது, நல்லது கெட்ட தில் கலந்து கொள்ள முடியாது சூழலில் உள்ளோம். ஆகவே நச்சிலிப்பட்டி பகுதியில் வேரூன்றி விட்ட கட்டப்பஞ்சாயத்து முறையை தடுத்து நிறுத்தி, எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.

வீடியோ 

காவல்துறையினர் பஞ்சாயத்து நடந்ததற்கான வீடியோ ஆதாரங்கள் இருந்தால் கொடுங்கள், நடவடிக்கை எடுக்கிறோம் என்கிறார்கள்.

இந்த புகார் குறித்து நாம் சிவகுமாரிடம் கேட்ட போது, “அது மாதிரியான சம்ப வங்கள் நடக்கவே இல்லை, என் மீது அபாண்டமாக குற்றம்சாட்டுகின்றனர். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகத் தான் இருக்கிறோம்” என முடித்துக் கொண்டார்.

கட்டப்பஞ்சாயத்து முறை அறவே ஒழிக்கப்பட வேண்டும் என அரசு ஒருமித்த நிலைப்பாட்டை கொண்டுள்ள நிலையில் மலைவாழ் பழங்குடியின மக்களிடையே ஊர்க் கட்டுப்பாடு என்ற பெயரில் அராஜகமும், கட்டாய அபராத வசூலும், கட்டப்பஞ்சாயத்தும் செய்து வருவதை தடுத்து நிறுத்திட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மலைவாழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

-ஜோஸ்

வீடியோ 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.