தேவையற்ற பேச்சால் வீண் பழி…?
மே 2021 முடிந்ததிலிருந்தே ஹேட்டர்களின் வாய்களில் அரைபட்டுக் கொண்டிருந்தவர்கள் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் – மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியம். இவர்களுக்கெல்லாம் சீனியர் ஒருவர் இருக்கிறார் அவர் செந்தில்பாலாஜி. மற்ற இருவராவது மே 2021 இறுதியிலிருந்துதான் அரை பட ஆரம்பித் தனர். இவரோ இவர் இன்ன துறை அமைச்சர் என்று அறிவித்த மாத்திரத்தில் அரைபட ஆரம்பித்தார் !
நம்பாதவர்கள் அவரவர் டைம்லைன் OTT பார்த்தாலே தெரியும். இந்தப்பட்டியலில் இறுதியாய் வந்தவர் சேகர்பாபு. மா. சுப் ர மணியம், ஜெயா நியமித்த இராதாகிருஷ்ணனோடு நெடுங்காலம் வலம் வந்ததை திமுகவினராலேயே செமிக்க இயலவில்லை. லேசான முணுமுணுப்பைச் செய்தனர் ! உமா, உ.பிக்களாய் வலம் வந்த சில அரசு மருத்துவர்கள், ரீமாசென் முறைப்பையன் உட்பட பலர் அவருடைய கபசுரக் குடிநீர், நிலவேம்புச்சாறு, யோகா, சித்தா ஆதரவைக் கடுமையாக எதிர்த்தார்கள். இரவிசங்கர்ல்லாம் சவுக்கு சங்கரை விஞ்சி சதிராடினார் ! கெதக் என்றிருந்தது.
ஸ்டாலினின் 51% ஆட்சி நாட்கள் முடிந்த பின்பே எதையும் விமர்சிப்பது, அதுவரை முட்டுக்கொடுப்பது என்றிருந்த என்னைப் போன்றோர்க்கு அது எரிச்சலையும் தந்தது ! இருந்தும் இயன்றவரை அவர்களை ஆற்றுப் படுத்திக் கொண்டே இருந்தோம். ஒருசிலர் அவர்களுடைய இன்பாக்ஸ் சென்று கட்டுப் படுத்தவும் செய்தனர் ! அவர்களும் பல்லைக் கடித்துக் கொண்டு, சீற்றங்களை விழுங்கினார்கள் !
நொடிக்கு நொடி பல்டி அடித்துக் கொண் டிருந்த செங்கோட்டையனைப் பற்றிய மீம்கள் என்னிடம் பல இருந்தன. அதை விஞ்சி மகேஷ் செயலாற்றிய போது கொஞ்சம் சலிப்பு வந்தது. இருந்தும், மூடர் கூடத்தின் பத்து வருட ஆட்சி, இப்படி அடிப்படையை சிதிலப்படுத்தியிருக்கலாம், விரைவில் சீராகும் என முட்டுக் கொடுத்தோம்.உணவுத்திருவிழாவில் மாட்டுக்கறி உணவு விற்பனைக்கு யாருமே முன்வரவில்லை என சுப்ரமணியம் சொன்னதைக் கூட எங்களில் பாதிபேர் மனதார நம்பினோம். அவர் எரிச்சலுற்றதைக் கூட கலகம் என்று ஒருபடி மேல்சென்று உங்கள் பாஷையில் முட்டி நின்றோம். என்ன முட்டினாலும் அடிப்படையில் கணிப்பறிவு இல்லாவிட்டால், அந்த முட்டுக்களைத் தள்ளி நொறுங்கி விழுவார் கள் என்பதற்கு முழுச்சான்றாய் மகேஷ் பரிமளிக்கிறார் !
ஒரு வருடமாய் ஆவேசப் போர் புரிந்துக் கொண்டிருக்கிறோம், எங்களால் அவர்கள் ஆங்காங்கே புதைத்து வைத்திருக்கும் கண்ணி வெடிகளை (தடைகளை) அகற்ற வியலவில்லை. அந்தளவு அனைத்துத் துறைகளிலும் ஊடுருவி, ஒன்றியமயமாக அல்லது சங்கிமயமாக்கி வைத்துள்ளனர். நம் போராட்டம் நெடியதாக இருக்கும். சலிப்போ, களைப்போ இல்லாமல் முன்னேறினால் மட்டுமே திராவிடப் பொருளாதார அரசாக நாம் வெல்ல முடியும் என்றிருந்தார் ஆசான் ஜெயரஞ்சன். இவ்வளவு வெளிப்படையாக அவரும், இன்னும் பல பெரியவர்களும் பேசிக்க்கொண்டிருக்கும் சூழலில், முக்கியமான ஒரு பதவிக்கு யாரேனும் கொடுஞ்சங்கியை நியமிப்பார்களா? அல்லது அதற்கு உடந்தையாய் இருப்பார்களா ? அல்லது அதிலென்ன தப்பு என ஆதரிப்பார்களா ?? அத்தனையையும் கல்வி அமைச்சர் மகேஷ் செய்திருக்கிறார். (இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த நியமன உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று பளீர் செய்தி வந்துள்ளது)
‘படித்தவன் சூதும் வாதும் செய்தால்’.. என்கிற முதுமொழிக்கேற்ப அவன் தானும் கெட்டு, தன் துறையையும் கெடுத்துவிட்டே போவான். ரங்கராஜ் பாண்டே என்பவர் பொட்டாசியம் சயனைடிற்கு நிகரான நஞ்சு. நீங்கள் அருகில் சென்று முகர்ந்தால் கூட கோமா நிச்சயம். அவருடைய கூட்டாளி மட்டும் எப்படி நஞ்சில்லாமல் இருக்க முடியும் ? பார்க்க நீறுபூத்த கங்கு போல தென்படுவார்கள். அதற்காக அதை எடுத்து நம் கல்லாப்பெட்டிக்குள் போட்டு பூட்டி வைக்க முடியுமா ? முதலில் நோட்டுக்களை அமைதியாக பஸ்பம் செய்து பின் கொளுந்து விட்டு எரியும். அணைத்தவனையும் எரித்து அணைத்தவனை ஆதரித்தமைக்காக நம்மையும் எரித்தடங்கும் ! தேசியத்தின் புதிய கல்விக் கொள்கை மிக ஆபத்தான ஓர் ஆயுதம். அதை ரசித்து பிரயோகிக்கத் துடிக்கும் ஒருவரை, கல்வித் தொலைக்காட்சிக்கு CEO ஆக்குவது ஆகப்பெரும் மூடத்தனம்.
கள்ளக்குறிச்சி RSS சப்போர் ட்டர் பள்ளி நிர்வாகத்திற்காக இவர் அவ்வளவு வெளிப்படையாக பேட்டிகளைத் தர எந்த அவசிய முமில்லை. பொதுமக்கள் யார் மீது கோபமாக இருக்கிறார்கள் என்பதை சற்றும் மண்டைக்குள் ஏற்றாமல் சவுக்கு சங்கரைப் போல் செயல்பட்டார் ! இதைச் சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. அதிமுக ஆட்சியில் இப்படி நிகழ்ந்திருந்தாலும், பார்வை & செவித்திறனற்ற ர.ர.க்களுக்காக, நாங்கள்தான் துள்ளிக் குதித்து எதிர்த்திருப்போம் ! ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் முழுமையாகி விட்டது. ராஜகண்ணப்பன் என்கிற சாதி அகந்தை கொண்டவரின் பதவி மட்டும் பறிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில செயலற்றவர்களை / கணிப்புத் திறன் இல்லாதவர்களை பலி போடலாம் ! அந்த இடங்களுக்கு மேலும் சில திறமையானவர்களை நியமிக்கலாம் ! சென்னை நகரத் தந்தையாக இருந்த போது சுப்ரமணியம் ஆற்றிய தொண்டுகள், கொண்டு வந்த திட்டங்கள் மகத்தானவை. அதனால் அவர் இந்தப் பதவிக்கு வந்தபோது உடன்பிறப்புகள் மிகவும் மகிழ்ந்தனர். கொரோனாவால் தன் மகனை இழந்த அவர், கொரோனா ஒழிப்பு போரில் முன்னின்று பல அரிய செயல்களைச் செய்தார். தடுப்பூசிகளை வீணாக்காமல் அது அனைவருக்கும் கிட்டச் செய்தார். ஆனாலும் ஏனோ சில சங்கிவயச் சூழலில் அவர் மீதான கசப்பு மிஞ்சியிருக்கிறது. அதை அவரே விரைந்து நீக்கிக் கொள்தல் நலம் !
-ராஜா ராஜேந்திரன்