இன்று… அச்சுத்தொழில்…  நாளை… வங்கித்துறை..அரசுத்துணையுடன் ஆப்பு வைக்க தயாராகும் பன்னாட்டு நிறுவனங்கள்

-செந்தில் திரவியம்

0

இன்று… அச்சுத்தொழில்…  நாளை… வங்கித்துறை..அரசுத்துணையுடன் ஆப்பு வைக்க தயாராகும் பன்னாட்டு நிறுவனங்கள்

அச்சுத்துறையில் பயன்படுத்தப்படும் கோரல்டிரா, அடோப் போட்டோ ஷாப், பேஜ் மேக்கர் மற்றும் இல்லஸ்ட்ரேட்டர் போன்ற மென்பொருட்களின் லைசன்ஸ் கட்டணம் கூடுதலாக இருக்கு என்று தொழில் துவங்குபவர்கள் பெரும்பாலும் லீகலாக வாங்கி பயன்படுத்த மாட்டார்கள். அதற்குத் தீர்வாக பைரேட்டட் மென் பொருட்கள் மார்க்கட்டில் குறைந்த விலைக்குக் கிடைக்கும். பெரும்பாலும் இந்த திருட்டு மென்பொருட்களைத்தான் பெருவாரியான அச்சு நிறுவனங்கள் பயன்படுத்தும்.

ஆனால் திடீரென்று அந்தந்த மென்பொருள் நிறுவனத்தில் இருந்து நமக்கு போன் கால் வர ஆரம்பிக்கும்.  நீங்கள் பயன்படுத்தும் எங்களுடைய மென் பொருளை பாதிக் கட்டணம் கொடுங்கள் நாங்கள் அதை லீகல் சாப்ட்வேராக மாற்றித் தருகிறோம் என்பார்கள். நாம் அதுவரை சட்டத்துக்கு புறம்பாக பயன்படுத்தியதற்கு அபராதம் ஜெயில் என்று எதுவும் தேவையில்லை என்பார்கள்.  அப்போதும் மாற்றிக் கொள்ளவில்லை என்றால் திடீரென்று ஒரு நாள் உள்ளூர் சைபர் கிரைம் போலீசுடன் வந்து லட்சக்கணக்கில் அபராதம் விதிப்பார்கள். கட்டாவிட்டால் சிறை தண்டனை கூட உண்டு. நாம் பயன்படுத்தும் மென்பொருளை அப்போதும் கூட முழு லைசன்ஸ் கட்டணம் செலுத்தி லீகல் சாப்ட்வேராக மாற்றிக்கச் சொல்லி கேட்பார்கள். சம்மதித்தால் சிறை அபராதம் கிடையாது.

இதெல்லாம் அதிகாரத்தில் இருப்பவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் தில்லுமுல்லு.

மைக்ரோ சாப்ட் நிறுவனத்தில் வேலை செய்யும் நண்பர் சொல்லுவார். பைரேட் சாப்ட் வேர்களை மார்க்கட்டில் உலாவ விடுவதே அந்தந்த நிறுவனங்கள் தான். இது ஒரு எளிய மார்க்கெட்டிங் வழி என்பார்.

அடுத்த கட்டமாக பேங்கிங் செக்ட்டாரிலும் அதே போன்ற ஒரு அணுகு முறையை பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் கூட்டுடன் கூகிள் பே, போன் பே, பேடிஎம் போன்ற

ஆப் பயன்பாட்டிற்கும், காலம் முழுவதும்

நம்மை அடிமையாக்கி விட்டு பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப் போகிறோம் என்கிறார்கள்.

-செந்தில் திரவியம்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.