அங்குசம் செய்தி எதிரொலி : டாஸ்மாக் பாரின் கொல்லைப்புற கதவை மூடிய கொள்ளிடம் போலீசார் !

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

அங்குசம் செய்தி எதிரொலி : டாஸ்மாக் பாரின் கொல்லைப்புற கதவை மூடிய கொள்ளிடம் போலீசார் !

திருச்சி நெ.1 டோல்கேட் பகுதியில் மக்கள் குடியிருப்பு பகுதியில் நள்ளிரவிலும் குடிகாரர்களின் நடமாட்டம் இருப்பதையும்; குடியிருப்புப் பகுதியில் அமைந்திருக்கும் சம்பந்தபட்ட டாஸ்மாக் கடை பாரின் கொல்லைப்புற வழியை மூடவேண்டும்; பல்லடம் சம்பவம் போல அடுத்த ஒரு சம்பவம் நடைபெற்றுவிடக்கூடாது என்பதை சுட்டிக்காட்டியும் அங்குசம் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். இலால்குடி டி.எஸ்.பி. அஜய் தங்கம் அவர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். அவரும் தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.

செம்ம சூப்பரான திரைப்படம்..

கொள்ளிடம் எஸ்.ஐ. ரெஜி.
கொள்ளிடம் எஸ்.ஐ. ரெஜி.

இந்நிலையில், அதிரடியாக இன்று காலை சம்பவ இடத்திற்கே சென்று குடியிருப்பு வாசிகளிடம் விசாரணையை நடத்தியிருக்கிறார், கொள்ளிடம் போலீசு உதவி ஆய்வாளர் திருமதி ரெஜி அவர்கள். அவரது நேரடி விசாரணையில், அக்குடியிருப்பைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் தங்களது புகார்களை தெரிவித்துள்ளனர். நள்ளிரவு தாண்டியும் ஆட்கள் நடமாட்டம் இருப்பதையும், வீட்டின் கதவை திறக்க முடியாத அளவுக்கு வழியிலேயே குடிமகன்கள் மட்டையாகி கிடப்பது குறித்தும்; குறிப்பாக, கருப்பு சிகப்பு கொடி கட்டிய கார்கள் வரிசை கட்டி நிற்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

5

ஆர்.கே.வி.  நகர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் பாரின் பின்வாசல் அருகே அங்கன்வாடி மையம் மற்றும் தனியார் மருத்துவமனை ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் குடித்துவிட்டு காலி பாட்டில்களை அங்கன்வாடி மைய வளாகத்தில் சிலர் வீசி செல்வதையும் விசாரணைக்கு வந்த போலீசாரிடம் அப்பகுதி பொதுமக்கள் புகாராக தெரிவித்தனர்.

மூடப்பட்ட பின்புற பாதை
மூடப்பட்ட பின்புற பாதை

”ரிமாண்ட் டூட்டி முடிச்ச கையோட நைட்டு 2.30 மணிக்கு ஒரு முறை சம்பவ இடத்தை பார்வையிட்டுதான் வீட்டிற்கே சென்றேன். காலையில் நேரிலும் விசாரித்தேன். குடியிருப்புவாசிகள் தங்களது குறைகளை சொன்னார்கள். சம்பந்தபட்ட பார் நடத்துபவர்களிடம் பொதுமக்கள் புகார் குறித்து எடுத்து சொல்லி எச்சரித்திருக்கிறேன். அவர்கள் பாருக்கு தேவையான பொருட்களை உள்ளே கொண்டு போகவும் பாரில் சேரும் குப்பைகளை வெளியே எடுத்து செல்வதற்காக மட்டுமே இந்த வழியை பயன்படுத்திவருவதாக சொல்கிறார்கள். அதனையும்கூட, மெயின் ரோடு வழியாகவே செய்து கொள்ளுமாறும், குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருக்கிறேன். தொடர்ந்து கண்காணித்து கொள்கிறேன்.” என்றார் பொறுப்பாக.

7

ஏற்கெனவே, பலமுறை கலெக்டருக்கு மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அங்குசம் இதழில் செய்தி வெளியானதும் அதனைத் தொடர்ந்த போலீசாரின் துரித நடவடிக்கைக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

– வே.தினகரன்.

6
Leave A Reply

Your email address will not be published.