தேனி பெரியகுளத்தில் பேருந்து நிலையத்தில் மதுபான பார் திறக்க மக்கள் எதிர்ப்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகே பொது மக்களுக்கு இடையூறாக திறக்கும் மதுபான பார் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் சுற்று பகுதி பொது மக்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் பிள்ளைகள் பயிலும் பள்ளிக்கூடம், வழிபாட்டு தலங்கள் நூலகம் மருத்துவமனை என நிறைந்த பகுதியாக உள்ளது.

Srirangam MLA palaniyandi birthday

இந்த இடத்தில் ஜாலி மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான பார் திறக்க கடந்த இரண்டு வருடங்களாக முயற்சி நடைபெற்று வருகிறது. பொது மக்கள் போராட்டம் காரணமாக அப்போதைய காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், மதுபான பார் கடையை திறக்க அனுமதி வழங்கவில்லை.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இது குறித்து மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் 2023 -இல் வழக்கு தொடரப்பட்டு தற்போது வரை அந்த மதுபான பார் கடையை திறக்க நீதிமன்றம் தடை விதித்தது இன்று வரை நீடித்து உள்ளது.

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

ஆனால், ஜாலி மனமகிழ் மன்றம் மது பான பாரை திறக்க விரோதமாக நீதிமன்றத்தில் தனது உறுப்பினர்களுக்கு மட்டும் மது விற்க அனுமதி வேண்டும் என கூறி பொய்யான காரணங்களைக் கூறி மதுபான பார் நிர்வாகம் அனுமதி பெற்றதாக ஒரு தகவல் உலாவி வருகிறது.

அந்த மதுபான பார் கடையை அந்த இடத்தில் திறந்தால் மிக பெரிய அளவில் பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள். அந்த இடமும் மிகப் பெரிய பிரச்சினைக்குரிய இடமாக மாறும். அபாயம் உள்ளதால் தான் இரண்டு வருடங்களாக அந்த இடத்தில் மதுபான பார் கடையை திறக்கக்கூடாது என அனைத்து கட்சிகளும் பொது மக்களும் போராடி வருகின்றனர்.

பொது மக்களுக்கு அபாயம் விளைவிக்கும் வகையில் அந்த மதுபான பார் கடை திகழும் என்பதால்தான் இதுவரை அந்தக் கடையை திறக்கக்கூடாது என நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், சட்ட விரோதமாக பொய்யான காரணங்களைக் கூறி மதுபான பார் கடையை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால் சம்பந்தப்பட்ட மது பான பார் கடை குறித்து பொது மக்களின் போராட்டங்களுக்கு மதிப்பளித்து அந்த கடையை எந்த விதத்திலும் திறக்க அனுமதிக்க கூடாது    என்று பொதுமக்கள் என்று கோரிக்கை எடுத்து வருகின்றனர்.

 

—    ஜெய்ஸ்ரீராம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.