அங்குசம் பார்வையில் ‘தினசரி’  

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு :’சிந்தியா புரொடக்‌ஷன் ஹவுஸ்’ சிந்தியா லூர்டே. டைரக்‌ஷன் : ஜி.சங்கர். இசை : ‘இசைஞானி; இளையராஜா. நடிகர்-நடிகைகள் : ஸ்ரீகாந்த், சிந்தியா லூர்டே, எம்.எஸ்.பாஸ்கர், மீரா கிருஷ்ணன், வினோதினி வைத்தியநாதன், ராதாரவி, பிரேம்ஜி, சாம்ஸ், சாந்தினி தமிழரசன், கே.பி.ஒய். சரத். ஒளிப்பதிவு : ராஜேஷ் யாதவ், இரண்டாவது யூனிட் இயக்குனர் : தினேஷ் தீனா, எடிட்டிங் : என்.பி.ஸ்ரீகாந்த், ஸ்டண்ட் : ஸ்டன்னர் ஸாம், ஆர்ட் டைரக்டர் : ஜான் பிரிட்டோ, நடனம் : தினேஷ் குமார், பி.ஆர்.ஓ. : இரா.குமரசேன்.

ஐடி கம்பெனியில் கைநிறைய சம்பளம் வாங்கும் ஸ்ரீகாந்துக்கு, தன்னைவிட அதிகம் சம்பளம் வாங்கும் பெண்ணைத் தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்பது தான் லட்சியம். இதற்காக ஏழெட்டுப் பெண்களைப் பார்த்தும் எதுவும் செட்டாகவில்லை. கடைசியாக அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து தாய்-தந்தையை இழந்த, வளர்ப்புத் தந்தையால் சென்னையில் செட்டிலாகிவிட்ட சிந்தியா லூர்டேவை பெண் பார்க்கப் போகிறார்கள் ஸ்ரீகாந்தின் அப்பா எம்.எஸ்.பாஸ்கர், அம்மா மீரா கிருஷ்ணன், அக்கா வினோதினி வைத்தியநாதன். ”கல்யாணம் ஆனதும் நான் வேலைக்குப் போகமாட்டேன்” என்பதை எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடுகிறார் சிந்தியா.

இனிய ரமலான் வாழ்த்துகள்

ஆனாலும் இந்த மண்ணை, இதன் கலாச்சாரத்தை, குடும்ப உறவுகளை நேசிக்கும் அந்தப் பெண்ணை இவர்களுக்குப் பிடித்துவிட, அமெரிக்கா ரிட்டர்ன் பொண்ணு, ஏகப்பட்ட சொத்து இருக்கு என்பதை மட்டும் சொல்லி ஸ்ரீகாந்துக்கு கல்யாணம் செய்கிறார்கள். ஃபர்ஸ்ட் நைட்டில் உண்மை தெரிந்து கொந்தளிக்கிறார், மனைவியை வெறுக்கிறார் ஸ்ரீகாந்த்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

சரி இதை வச்சுத்தான் கதையைக் கொண்டு போவார் டைரக்டர்னு நம்பி உட்காந்தோம். கொஞ்ச நேரத்துல பார்த்தா அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஃபைனான்ஸ் கம்பெனில 30 லட்சத்தை  டெபாசிட் பண்ணிட்டு ஸ்ரீகாந்த் லோல்படும் லைனுக்கு கதையின் ட்ராக் மாறுது. சரி, இதுலயாவது எதையாவது டைரக்டர் செய்வார்னு கொஞ்சம் நம்பி உட்கார்ந்தா.. இடைவேளைக்குப் பிறகு, ‘வருவான் வடிவேலன்’, பக்திப்பட ரேஞ்சுக்கு கொண்டு போய்… ‘அடங்கப்பா முருகா… ஆளவிடுறா சாமி”ங்கிற கண்டிஷனுக்கு நம்மளக் கொண்டு வந்துட்டார் டைரக்டர்.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

‘தினசரி’ திரைப்படம்ஸ்ரீகாந்த் நடிப்பைப் பத்தி இனிமே நாம புதுசா சொல்ல என்ன இருக்கு? சினிமாவுக்கு வந்தப்ப எப்படி இருந்தாரோ.. அப்படியே தான் இன்னமும் இருக்காரு. படத்தின் தயாரிப்பாளர் சிந்தியா லூர்டே தான் ஹீரோயின். ஏதோ ஆர்ட்டிஃபிஸியல் இண்டெலிஜெண்ட் டெக்னாலஜில உருவாக்கப்பட்ட ஹீரோயின் மாதிரி இருக்கார். இதுக்கு மேல அவரின் நடிப்பை நாம் விமர்சிக்க விரும்பவில்லை. ஏன்னா அமெரிக்காவிலிருந்து கோலிவுட்டுக்கு சிந்தியா வந்ததே, இசைஞானி இளையராஜா இசையில் ஒருபடம் பண்ண வேண்டும் என்பதற்காகத் தானாம்.

‘தினசரி’ திரைப்படம்அந்த ஆசை நிறைவேறியதாலோ என்னவோ, டைட்டில் போடும் முன்பே இசைஞானியின் ஓவியத்தை முழுத்திரையில் போடுகிறார். படம் முடிந்ததும் ‘இப்படம் இசைஞானிக்கு சமர்ப்பணம்’ என்று போட்டுவிட்டார். அதற்காக இசைஞானியும் ஏனோதானோவென வேலை பார்க்கவில்லை. இந்தக் கதைக்கு இது போதும் என நினைத்து அதற்கு இசையமைத்துள்ளார். சில காட்சிகளில் தனது பாடலையே பின்னணி இசையாக்கி சமாளித்திருக்கிறார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படத்தை கொஞ்சம் ரசனையோடு பார்க்க எம்.எஸ்.பாஸ்கர், மீராகிருஷ்ணன், வினோதி வைத்தியநாதன் ஆகிய மூவர் கூட்டணி உதவியிருக்கிறது. குறிப்பாக ஸ்ரீகாந்தின் அக்காவாக வரும் வினோதினிக்கு டைமிங் காமெடி நல்லாவே வந்திருக்கிறது.  அதை பயன்படுத்த தெரியவில்லை டைரக்டருக்கு. ஃபைனான்ஸ் சீட்டிங் பார்ட்டியாக ராதாரவி. கல்யாண புரோக்கராக சாம்ஸ் வருகிறார்கள்.

இந்த வார ரிலீஸ் கணக்கு நோட்டில் மட்டும் இருக்கு இந்த ‘தினசரி’

 

—   மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.