சி.எஸ்.ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் செவிலியர் கல்லூரியின் முப்பெரும் விழா !

0

சி.எஸ்.ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் செவிலியர் கல்லூரியின் முப்பெரும் விழா அக்டோபர் மாதம் 19ம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் பேராசிரியர். முனைவர். கி. ஜோதி சோபியா மற்றும் தாளாளர் அருட்திரு. முனைவர். ஆ. யாக்கோபு ஆகியோர்  வழிகாட்டலின்படி மாலை 4 மணிக்கு கல்லுரியின் பட்டமளிப்பு விழாவும், செவிலியர் கல்விப்பணியில் 30 ஆண்டு நிறைவு பவள விழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது.

https://businesstrichy.com/the-royal-mahal/

விழாவிற்கு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பெரும் மதிப்பிற்குரிய பேராசிரியர். முனைவர்.K. நாராயணசாமி  தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்கள்.

முன்னதாக துணை வேந்தருக்கு கல்லூரியின் தாளாளர் அருட்திரு. முனைவர்.ஆ. யாக்கோபு  பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்கள். கல்லூரி முதல்வர் பேராசிரியர். முனைவர். கி. ஜோதி சோபியா , அனைவரையும் வாழ்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அதன் பின்னர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட  கல்லூரியில் முதல் பிரிவு மாணவர்   அமிர்சன் ஜேக்கப், CEO மற்றும் இயக்குனர், சஜினிபாரா மிஷன்  மதுரையின் முன்னோடி கல்லூரியாக, 1500 க்கும் மேற்பட்ட சிறந்த ஆற்றல் வாய்ந்த செவிலியர்களை உலகிற்கு அர்ப்பணித்து,  கல்விப் பணியில் 30 ஆண்டுகளைக் கடந்து பவள விழாவினைக் கொண்டாடும் கல்லூரியின் மாண்பினை பெருமையோடு எடுத்துரைத்தார்கள்.

பின்னர் விழாவின் தலைவர், மதுரை முகவை திருமண்டலத்தின் மேதகு பேராயர் அருட்பெருந்திரு. முனைவர். D. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன்  பட்டதாரிகளுக்கு இறைவாக்கின் மூலம் வாழ்த்தி ஆசீர்வதித்தார்கள். செவிலியர் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்ற 130 பட்டதாரிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர். முனைவர். மெர்லின் ஜெயபால் ஆண்டறிக்கை வாசிக்க, துறைத்தலைவர்கள் பேராசிரியர் முனைவர்.ஜெயா தங்கசெல்வி, பேராசிரியர் முனைவர். ஜான் சாம் அருண் பிரபு, பேராசிரியர் முனைவர். ஜான்சி ரேச்சல் ஆகியோரின் பேருதவியுடன் விழா வெற்றிகரமாக நடந்தேறியது.

மேலும் அன்று காலை 11மணிக்கு ஆண் செவிலியர்களுக்காக புதிதாகக் கட்டப்பட்டுள்ள ” ஜெயராஜ் செல்லதுரை ஆண்கள் விடுதி ” கட்டிடம் மதுரை முகவை திருமண்டலத்தின் மேதகு பேராயர் அருட்பெருந்திரு. முனைவர். D. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் மங்களப்படைப்பு செய்யப்பட்டது. விழாவின் சிறப்பு விருந்தினராக திரு. ஜெயபால், ஜெயராஜ் செல்லதுரை அறக்கட்டளை கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். திருமண்டலத்தின் அனைத்து அதிகாரிகள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் உற்சாகப் பங்கேற்பால் கல்லூரி வளாகம் களைகட்டியதுடன் முப்பெரும் விழா இனிதே நிறைவுற்றது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.