பெருமைக்கு மும்மொழிக் கொள்கை. செய்வது எல்லாம்…. !
ஓரிரு ஆண்டுகளுக்கு முன் மும்மொழிக்கு எதிராக இருமொழிக் கொள்கை பற்றி நாமெல்லாம் விவாதித்து கொண்டிருந்தபோது, நாம் சிந்திக்காத ஒரு கோணத்தில் மாண்புமிகு அமைச்சர் Palanivel Thiaga Rajan அவர்கள் தன் பாணியில் ஒரு உண்மையை போட்டுடைத்தார்.
அதாவது மும்மொழிக் கொள்கையை பின்பற்றும் இந்தி பேசும் மாநிலங்கள் vs நம் தமிழ்நாடு (அல்லது பிற மொழி பேசும் இந்தி மொழி dialect இல்லாத மாநிலங்களில்) போன்ற இரு மொழிக் கொள்கையை பின்பற்றும் மாநிலங்களில் மாணவர்கள் கற்பதில் தொடங்கி, தேர்வுகள் வரை அனைத்திலும் அவர்களின் Level playing குறித்து விளக்கினார்.

அதாவது நாம் இருமொழிக் கொள்கை என சொல்லிக்கொண்டு 2 மொழிகளை கற்கிறோம், தேர்வு எழுதுகிறோம், அலுவலில் பயன்படுத்துகிறோம், மெனக் கெடுகிறோம். ஆனால் அவர்கள் இந்தி மட்டுமே கற்கிறார்கள், பேசுகிறார்கள், எழுதுகிறார்கள், அலுவலில் பயன்படுத்துகிறார்கள். இந்தியிலும் கூட மொழிப்பாடங்களில் Academic level-ல் மிகவும் குறைவாகவே தேர்ச்சி பெறுகிறார்கள். பெரிதாக மெனக்கெடுவதே இல்லை என போட்டுடைத்தார். அதற்கான ஆதாரங்கள் நிறைய அப்போதே வந்தது.
இதோ! மற்றுமொரு ஆதாரம்! பணம் கொடுத்து போலி IELTS மதிப்பெண் சான்றிதழ் பெற்ற 950 குஜராத்திகள் மாட்டிக்கொண்டனர்.
மாட்டியுள்ள அனைவரும் குஜராத்திகள். நம் தமிழ்நாட்டில் இதெல்லாம் சாத்தியமா? என்றால் இல்லை. அவங்களும் குஜராத்தி + இந்தி 2 மொழி கற்கிறார்கள் என நீங்க கணக்கு சொன்னால்..காலா காலத்துக்கும் நம்ம பிள்ளைங்கதான் 2 மொழி படிச்சுட்டு ஒத்தை(1) மொழி கத்துக்குற அந்த பிள்ளையோட போட்டி போட வேண்டி வரும்.
பெருமைக்கு மும்மொழிக் கொள்கை. செய்வது மொள்ளமாறித்தனம்.
– தம்பி பிரபு