திருச்சி மாநகராட்சியில் அதிக வாக்கு, குறைந்த வாக்கு விழுந்த வார்டுகள் முழு விவரம் !
திருச்சி மாநகராட்சியில்
அதிக வாக்கு,
குறைந்த வாக்கு விழுந்த
வார்டுகள் முழு விவரம் !
திருச்சி மாநகராட்சியில் 7 இலட்சத்து 79 ஆயிரத்து 65 8 பேர் மொத்த வாக்காளர்கள்… இதில் 4 இலட்சத்து 45 ஆயிரத்து 299 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். மீதம்… 3 இலட்சத்து 34 ஆயிரத்து 359 பேர் வாக்களிக்கவில்லை.
திருச்சி குறைந்தபட்சமாக 64 வது வார்டில் 39.92 சதவீதம் பேர்… 64வது வார்டில் 11,858 பேர் மொத்த வாக்காளர்கள். இதில் 4,734 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
இந்த வார்டில் திமுக சார்பில் மலர்விழியும், அதிமுக சார்பில் சுப்புலெட்சுமி, பிஜேபி சார்பில் கிரிஜாவும், ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதிகப்பட்டசமா 29வது வார்டில் 66.62 சதவீதம் பேர்.. 29வது வார்டில் 13,391 பேர் மொத்த வாக்காளர்கள் இதில் 8,922 பேர் வாக்களித்துள்ளனர்.
இதில் திமுக சார்பில் கமால் முஸ்தபா, அதிமுக சார்பில் நாகூர்கனி, சுயேச்சை வேட்பாளர் இப்ராகிம் பிச்சை ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் இப்ராகிம் பிச்சை தொடர்ந்து இந்த வார்டில் சுயேச்சையாக வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.
திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் பதிவான வாக்குகள், ஜமால் முகமது கல்லூரியில் வைத்து எண்ணப்படுகிறது.
திருச்சி மாநகராட்சியை பொறுத்த வரையில் 4 கோட்டங்கள் உள்ளன. தேர்தலுக்காக ஒரு கோட்டத்திற்கு தலா 2 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வீதம் 8 பேர் நியமிக்கப்பட்டனர். இதில் 7 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு 8 வார்டுகளும், ஒருவருக்கு மட்டும் 9 வார்டுகள் ஒதுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வாக்குகள் 8 அறைகளில் நடைபெறுகிறது.
இதன் அடிப்படையில் ஒரு அறையில் மட்டும் 9 மேஜைகளும், மற்ற 7 அறைகளில் 8 மேஜைகளும் மொத்தம் 65 மேஜைகள் போடப்பட்டுள்ளது. ஒரு வார்டுக்கு 2 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனால் 3 மணி நேரத்திற்குள் முடிவுகள் தெரிந்து விடும்.