திருச்சி அதிமுக கூட்டத்தில் பரபரப்பு, பத்திரிகையாளர் மீது தாக்குதல் !

0

திருச்சி அதிமுக கூட்டத்தில் பரபரப்பு, பத்திரிகையாளர் மீது தாக்குதல் !

அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநாட்டை போல் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டது. இதுகுறித்து செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் பெருமளவில் அங்கு வந்திருந்தனர்.

இந்த நிலையில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது பத்திரிக்கையாளர் ஒருவரை அதிமுகவினர் அழைத்துச் சென்றனர். அவரிடம் உங்கள் பத்திரிக்கையில் வைத்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டதா, என்ற கேள்வி எழுப்பிக் கொண்டிருக்க கூடிய வேளையில், அழைத்துச் சென்ற அதிமுக நிர்வாகிகளுக்கும் பத்திரிகையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதை அங்கு நின்று கொண்டிருந்த ஏ.என்.ஐ ரிப்போர்ட்டர் புகைப்படம் எடுக்க முயற்சித்திருக்கிறார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த அதிமுக நிர்வாகிகள் புகைப்படம் எடுத்த பத்திரிக்கையாளரின் தொலைபேசியை பறிக்க முயற்சிக்கின்றனர். இதனால் பத்திரிக்கையாளர் க்கும் அதிமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அதிமுகவினர் பத்திரிக்கையாளரை தாக்கினர். தாக்குதல் சம்பவத்தை தாக்குதலுக்குள்ளான பத்திரிக்கையாளர், சக பத்திரிகையாளர்களிடம் இதை தெரிவிக்க சக பத்திரிகையாளர்கள் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மேடையின் அருகே சென்று “எதற்காக பத்திரிக்கையாளரை தாக்கினார்கள், மேலும் தாக்குதலை கண்டிப்பதாகவும்” சத்தம் எழுப்பினர்.

இதனால் அரங்கமே அதிர்ந்தது. என்ன நடக்கிறது என்று புரியாமல் மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அனைவரையும் அமைதி காக்குமாறு கூறினார்.

இதை பார்த்து  பத்திரிக்கையாளர்கள் அருகில் வந்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன் ஜவகர், பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டு, இனி இது போல் நடக்காது அனைவரும் அமைதி காக்கவும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த சமயத்தில் வெளியே  பத்திரிகையாளரை தாக்கிய அந்த நபர், மீண்டும் அரங்கிற்கு வந்தார். அரங்கிற்குள் மீண்டும் பத்திரிக்கையாளர்களை தாக்க முயற்சிக்கிறார். இதனால் பத்திரிகையாளர்கள் அவரை நோக்கி கூச்சலிட்டவாரு, தாக்க வந்த நபரை புகைப்படம் எடுக்கின்றனர். இதனை பார்த்த வெல்லமண்டி நடராஜன் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து, தாக்கிய நபரை பார்த்து அவனை அழைத்துச் செல்லுங்கள் என்று கூறி, பத்திரிக்கையாளர்களிடம் மன்னித்து விடுங்கள் என்று என்று மன்னிப்பு கேட்கிறார். இதன் இடையே அங்கு இருந்த சில இளம் அதிமுக நிர்வாகிகள் பத்திரிக்கையாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கதவை அடைத்தனர். இதனால் பத்திரிக்கையாளர்கள் கதவைத் திறக்கச் சொல்லி செய்தி செய்தி சேகரிப்பதை நிறுத்தி வெளியே வந்தனர்.

அதன் பிறகு தான் அங்கு என்ன நடந்தது என்று அனைவரும் தெரியவந்தது. கூட்ட அரங்கிற்குள் புரட்சித்தலைவரின் கடைக்கோடி தொண்டன் ஜே.டி. டேனியல் என்ற பெயரில் சர்ச்சைக்குள்ளான நோட்டீசை அரங்கிற்கு வினியோகித்து இருக்கின்றனர். இதை தாமதமாக பார்த்த சில அதிமுக நிர்வாகிகள் நோட்டீசை பத்திரிக்கைகள் வைத்து வினியோகித்ததாக எண்ணி இருக்கின்றனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் பேப்பர் கொடுத்துக்கொண்டிருந்த பத்திரிக்கையாளர் ஒருவரை பிடித்து உன்னுடைய பத்திரிக்கையில் வைத்துதான் நோட்டிஸ் வினியோகிக்கப்பட்டது, என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதை புகைப்படம் எடுக்க முயன்ற மற்றொரு பத்திரிகையாளரை தாக்கி இருக்கின்றனர்.
இதனால் 15 நிமிடம் கூட்ட அரங்கு பதற்றத்தோடு காணப்பட்டது. மேலும் பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டதை கண்டித்து சக பத்திரிகை யாளர்கள் செய்தி சேகரிப்பதை பாதியிலேயே நிறுத்திவிட்டு அரங்கை விட்டு வெளியே சென்றனர். மேலும் பத்திரிக்கையாளர் தாக்கப்படும்போது உதவி ஆணையர் வேடிக்கை பார்த்துக்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சென்றதாக பத்திரிக்கையாளர்கள் குற்றம் சாட்டினார்.

நடந்த சம்பவத்திற்கு திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் மற்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.மேலும் சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட காவல் ஆணையர் லோகநாதனிடம் தாக்கிய அதிமுக நிர்வாகிகள் மீதும், வேடிக்கை பார்க்க காவல்துறையின் மீதும் சக பத்திரிக்கையாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.