திருச்சி கல்லூரிக்குள் கொரோனா… மாணவர்களின் கதி என்ன?

0

திருச்சி கல்லூரிக்குள் கொரோனா… மாணவர்களின் கதி என்ன?

கொரோனா ஊரடங்குக்கு பிறகு தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை கொஞ்சம் மாற்றம் கண்டு வருகிறது.

ஆனால் மக்களிடையே கொரோனா குறித்த அச்சம் மட்டும் கொஞ்சம் கூட குறையவில்லை ஏனென்றால் உலக நாடுகளையே புரட்டிப்போட்டு பல உயிர்களை பரித்த கொரானா இன்னும் எத்தனை உயிர்களை பறிக்க இருக்கிறதோ என்ற அச்சத்தில் வேலைக்கு செல்வோர் முதல் படித்து கொண்டிருப்போர் வரை  இருக்கிறது .

இந்நிலையில் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் கல்லூரிக்கு நேரில் வந்து செய்முறை தேர்வு முதல் அனைத்து தேர்வுகளும் எழுத வேண்டும் என்று எடுத்த விபரீத முடிவு இன்னும் பேராபத்துக்களை நோக்கி கொண்டு சென்றுள்ளது.

திருச்சி புத்தூரில் இயங்கி வரும் பிரபல கல்லூரி ஒன்றில்  22/12/2020 செய்முறை தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் கல்லூரி வந்துள்ளனர். மாணவர்களின் தேர்வு அறையில் ஆய்வு பணியில் இருந்த பேராசிரியர் ஒருவருக்கும் அதே கல்லூரியை சேர்ந்த மொழியியல் பிரிவை சேர்ந்த 2 பேராசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்பது அன்று மாலைதான் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியவந்துள்ளது.

ஆதலால் கல்லூரி நிர்வாகம் பேராசிரியர்களுக்கு தனிமையில் இருக்க வேண்டி விடுப்பு கொடுத்துள்ளது.

மேலும் அன்று தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கும் தொற்று பரவி இருக்குமோ என்று பல பேராசிரியர்கள் அச்சத்திலேயே கல்லூரி வந்து போய்க்கொண்டு இருக்கின்றனராம்

ஜித்தன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.