42 டயர்களை திருடிய மூவா் ! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு !
திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தப்புடையான்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 2023 ஆம் ஆண்டு மணப்பாறை கே.பெரியபட்டியைச் சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு சொந்தமான பஞ்சர் கடையிலிருந்து நான்கு சக்கர வாகனங்களின் 42 டயர்கள் திருடு போனது தொடர்பாக கடந்த 29.03.2023-ஆம் தேதி மணப்பாறை காவல் நிலைய குற்ற எண். 151/23 U/s 379 IPC ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் எதிரிகளான 1) போஸ் 40/23, த.பெ. ராபர்ட், வள்ளுவர் நகர். சங்கிலியாண்டபுரம், திருச்சி, 2) கார்த்திகேயன் 23/23. த.பெ. பிரபாகரன், சங்கிலியாண்டபுரம் மற்றும் 3) செபாஸ்டியன் 19/23, த.பெ. போஸ், சங்கிலியாண்டபுரம் ஆகிய மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு இவ்வழக்கின் விசாரணையானது மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் விஜயமணி ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் (21.08.2025) மணப்பாறை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி அசோக்குமார் அவர்களால் மேற்கூறிய இவ்வழக்கின் எதிரிகள் மூவரும் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டு தலா இரண்டுகள் ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூபாய். 1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.