திருச்சி துறையூர் – ”உங்கள் வெற்றி எங்கள் நோக்கம்” என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பழங்குடியின இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி பதிவு நிகழ்வு ”உங்கள் வெற்றி எங்கள் நோக்கம்” என்ற தலைப்பின் கீழ் பழங்குடியினர் நல இயக்குநரகத்தால் திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டத்திலுள்ள பாலக்கரை பிரசன்ன மஹால் மண்டபத்தில் 20.01.2025 (திங்கள்கிழமை) அன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் https://bit.ly/VettriNichayamskill என்ற விண்ணப்பப் படிவ லிங்கை பயன்படுத்தி பதிவு செய்யுமாறும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை படித்துள்ள பழங்குடியின இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும், இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் தங்களது கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டையுடன் முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.