தடுப்பூசி போடாததற்கு எம்எல்ஏ சொன்ன காரணம் ; பிரஸ் மீட் ஷாக் !

0

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் எம்எல்ஏ ஒருவர் வெற்றி சான்றிதழை வாங்கி விட்டு சென்னை சென்று ஆசி பெற்று மீண்டும் திருச்சி வந்துள்ளார். வந்த இளம் எம்எல்ஏ தனக்கு சொந்தமான இடத்தில் பிரஸ்மீட் வைத்து உள்ளார்.

அந்த பிரஸ் மீட்டில் 19 செய்தி நிறுவனங்களை சேர்ந்த செய்தியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதைப்பார்த்து இத்தனை பத்திரிக்கையாளர்கள் திருச்சியில் இருக்கிறீர்களா என்று வியந்துயுள்ளார்.

இந்த நிலையில் பிரஸ் மீட் தொடங்கியது,
பத்திரிக்கையாளர்கள் ; வெற்றி பெற்றுள்ள நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ?

இளம் எம்.எல்.ஏ : இளைஞரான நான் கண்டிப்பாக என் தொகுதிக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன், தொகுதி மக்களினுடைய குறைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய கண்டிப்பாக நான் உழைப்பேன்.

பத்திரிக்கையாளர்கள் : கொரோனா தடுப்பு பணியில் உங்களுடைய நடவடிக்கை எவ்வாறு இருக்கும் ?

இளம் எம். எல்.ஏ : தலைவர் தளபதி கூறியதுபோல அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தடுப்பு பணியில் நாங்கள் அனைவரும் தளபதியின் ஆணைக்கிணங்க தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.

பத்திரிக்கையாளர்கள் : நீங்கள் தடுப்பூசி போட்டு விட்டீர்களா ?

இளம் எம். எல்.ஏ : இன்னும் இல்லை, இனிமேல் தான் போடணும்

பத்திரிக்கையாளர்கள் : ஏன் இதுவரை, நீங்கள் தடுப்பூசி போடவில்லை ?

இளம் எம்.எல்.ஏ : தடுப்பூசி போட்டால் டிரிங்க்ஸ் அருந்த முடியாது, அதனால் தான் நான் போடவில்லைடவில்லைை.

இதைக்கேட்ட பத்திரிக்கையாளர்கள் அதிர்ந்து சிரித்தும் சென்றனர்..

இந்த எம்.எல்.ஏ கல்வி நிறுவனம், மருத்துவ கல்லூரி என பல நிறுவனங்கள் வைத்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.