திருச்சி ரயில் நிலையத்தில் அதிரடி காட்டி வரும் ஆர்.பி.எஃப்..

0

திருச்சி ரயில் நிலையத்தில் அதிரடி காட்டி வரும் ஆர்.பி.எஃப்..

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை (RPF)சார்பில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாகவும், பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வதையும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் விழிப்புணர்வு அளித்தும் ரயில் நிலையத்திற்கு முக கவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கு ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை மூத்த அதிகாரி ஒப்புதலின் பெயரிலும் அபராதம் விதிக்கப்பட உத்தர விடப்பட்டுள்ளது.

அந்த வகையில் முக கவசம் அணியாமல் ரயில் நிலையத்திற்குள் வருபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ரயில்வே நிர்வாகத்தின் மூலம் பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்வு அதிகரித்து பயணிகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ரயில்வே நிர்வாகம் எடுத்த தீவிர நடவடிக்கைகளில் தற்போது ஆர்.பி.எஃப் சார்பில் இதுபோன்ற அதிரடி நடவடிக்கை எடுத்து வருவது கொரோனா காலகட்டத்தில் பயணிகளில் சிலரின் அலட்சியப் போக்கினை கண்டித்து நடவடிக்கை மேற்கொள்ளும் விதம் இருந்து வருகின்றனர்.

மேலும் ரயில் நிலையத்தில் டீ, சாப்பாடு விற்கும் சிலர் முக கவசம் அணியாமல் இருந்ததன் விளைவாக ஆர்.பி.எஃப் மூத்த அதிகாரி சம்பந்தப்பட்டவர்கள் மீதும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.. ரயில்வே நிர்வாகத்தினருக்கும் மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகிறது..

ஜித்தன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.