விக்ரமின் ‘வீர தீர சூரன்’

0

 விக்ரமின் ‘வீர தீர சூரன்’

யக்குநர் எஸ். யு‌. அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் எண்டர்டெயினராக தயாராகும் இப்படத்தை ஹெச். ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

4 bismi svs

இப்படத்தின் தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய படக்குழுவினர், தற்போது படத்தின் நாயகனான சீயான் விக்ரமின் பிறந்த நாளை (ஏப்ரல் 17)முன்னிட்டு, ‘வீர தீர சூரன்’என்ற டைட்டிலையும், இந்தப் படத்தில் விக்ரம் ஏற்றிருக்கும் காளி எனும் கதாபாத்திரத்திற்கான சிறப்புக் காணொளியையும் வெளியிட்டுள்ளது.

மூன்று நிமிடங்கள் கொண்ட இந்த காணொளியில் விக்ரமின் தோற்றம்… அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் இந்த காணொளியும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

மதுரை மாறன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.