திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் ?
இந்நிலையில் தேர்தல் பணிகள் முறையாக நடைபெறவும், கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் ஆலோசிக்க திருவாரூரில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
தேர்தல் நேரத்தில் அரசியல்கட்சியினர் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
திருவாரூர் தொகுதியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் அங்கு பிரச்சாரம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவாரூர் இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 11மணிக்கு துவங்கியது. தேர்தல் நடத்தும் அதிகாரியான திருவாரூர் வருவாய் கோட்டாச்சியர் முருகதாஸ் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். இதை தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் முதல் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இவர் 27-வது முறையாக தேர்தலில் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்துள்ளார் .
இதேபோல் தேர்தல் மன்னன் என அழைக்கப்படும் சுயேச்சை வேட்பாளர் பத்மராஜன் தேர்தல் அதிகாரி முருகதாஸிடம் வேட்புமனுதாக்கல் செய்தார். இவர் 199-வது முறையாக தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மேலும் முக.அழகிரியின் ஆதரவாளர் ஒருவர் உட்பட 6 பேர் வேட்பு மனுக்களை வாங்கி சென்றுள்ளனர்.
திருவாரூர் தொகுதியில் இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. இதையொட்டி, தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இரு கட்சிகளும் அ.தி.மு.க. சார்பில் குடவாசல்ராஜேந்திரன், ரவிசந்திரன் உள்ளிட்ட பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு கடைசியாக ரவிசந்திரன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கிறார்கள், இவர் கருணாநிதியை எதிர்ந்து நின்று தோல்வியை தழுவியவர் என்பதாலும் இந்த முறை மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்கிறார்கள்.
தி.மு.க. தரப்பில் வேட்பாளராக ஸ்டாலின் , செல்வி, உதயாநிதி,டி.ஆர்.பாலு என்று பல்வேறு பெயர்களை கட்சிகாரர்கள் பரிசீலனை செய்தாலும் ஸ்டாலின் தரப்பில் கலைவாணன் வேட்பாளராக அறிவிக்கிறார்கள்
தினகரன் அமுமுக கட்சியின் சார்பில் மா.செ. எஸ்.காமராஜ், வழக்கறிஞர் சீனிவாசன் ஆகியோர் பெயர்கள் பரீசலனை செய்யப்பட்டு எஸ்.காமராஜ்க்கு என்பரை வேட்பாளராக அறிவிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
பெரிய கட்சிகள் அறிவிக்கும் 3 வேட்பாளர்களுமே ஒரு சமூகத்தை சேர்ந்தவர் என்பவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
பிஜேபி சார்பில் நேரடியாக களத்தில் இறங்காமல் மு.க. அழகிரியை சுயேச்சையாக முன்னோக்கி தள்ளும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது.