தாம்பரத்தில் சிக்கிய 4 கோடி : போட்டுக்கொடுத்த  கருப்பு “ஆடு” யார் ? !

2019 லோக்சபா தேர்தலில் வேலூரில் பணம் கைப்பற்றப்பட்ட காரணத்தால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டதைப்போல, தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட 4 கோடி ரூபாய் காரணமாக நெல்லை தொகுதிக்கான தேர்தல் நடைபெறுமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

0

தாம்பரத்தில் சிக்கிய 4 கோடி : போட்டுக்கொடுத்த  கருப்பு “ஆடு” யார் ? !

தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட 4 கோடி ரூபாய் காரணமாக நெல்லை தொகுதியில் தேர்தல் நடைபெறுமா ? அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து தினமும் இரவு 8.10 மணி அளவில் நெல்லை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் புறப்படும். இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்நிலையில், நேற்று முதல்நாள் இந்த ரயிலில் நெல்லைக்கு பல கோடி ரூபாய் பணத்தை கொண்டு செல்ல சிலர் திட்டமிட்டுள்ளதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தாம்பரத்தில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் குளிர் சாதன பெட்டியில் நடத்திய அதிரடி சோதனையில் ரூபாய் 4 கோடி அளவிலான பணம் கட்டுக்கட்டாக சிக்கியது.  6 பைகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

- Advertisement -

பணத்துடன் பிடிபட்ட 3 பேரையும் தாம்பரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்ட பணம் என பிடிப்பட்ட மூவரும்  கூறியதாக தகவல் வெளியாகி உள்ளன.

புரசைவாக்கம் தனியார் விடுதியின் மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ் உள்ளிட்ட 3 பேர் இதில் கைது செய்யப்பட்டனர். நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டல் பணியாளர்கள் பணத்தை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரெய்டு:

தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பிடிபட்ட விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ப்ளூ டைமண்ட் ஹோட்டலுக்கு மத்திய சென்னை தொகுதி தேர்தல் நுண் பார்வையாளர் சாகுல் ஹமீது நேரில் சென்று விசாரணை செய்து  ரெய்டும் நடத்தியுள்ளனர்.  பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர் கணேஷ் மணியின் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில், ₹2 லட்சம் ரொக்கம், 100 வேஷ்டிகள், 44 நைட்டிகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் சிக்கி உள்ளது.

நயினார் விளக்கம் :

4 bismi svs

”இந்த நிலையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிக்கப்பட்ட 4 கோடி ரூபாய்க்கும் எனக்கும் தொடர்பு இல்லை. யார் புகார் கொடுத்தாலும் எனக்கு கவலை இல்லை. அந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. என் பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்றும் நான் பிரபலமாக இருப்பதால் இப்படி சிலர் செய்கின்றனர்” என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ரத்தா..?

இதே போல நெல்லை மக்களவை தொகுதியின் வேட்பாளர்கள் 14 பேருக்கு தேர்தல் செலவின பார்வையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை இன்று மாலை 5 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், சமர்ப்பிக்காத நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

கணக்கு தாக்கல் செய்ய தவறினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களின் அனுமதி ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணம் பறிமுதல் செய்யப்பட்டது, வேட்பாளர்களுக்கு தேர்தல் பார்வையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது போன்ற சம்பவம் மக்களிடம் கடந்த 2019-ஆம் ஆண்டில் வேலூரில் தேர்தல் நிறுத்தப்பட்டதை போல, இப்போது நெல்லையில் தேர்தல் நடக்குமா.? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உளவுத்துறை:

இந்த பண விஷயம் முதலில் உளவுத்துறைக்குத்தான் கிடைத்துள்ளதாம். உளவுத்துறை தகவலை தேர்தல் ஆணையத்திடம் பகிர இந்த சோதனை நடந்து உள்ளது. அதன் மூலம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை சொன்ன கருப்பு ஆடு ?

திமுகதான் என்று பாஜகவில் சிலர் கூறுகின்றனர். ஆனால், சிலரோ பாஜகவில் இருக்கும் மூத்த தலைவர் ஒருவர்தான் (தங்கமானவர்) இந்த விவகாரத்தில் கருப்பு ஆடு. விஷயத்தை பகிர்ந்தது அவர்தான் என்றும் கூறி வருகிறார்கள், நயினார் ஆதரவாளர்கள். மற்றொரு பிரிவினர்  தலைவரான மேற்கு மண்டல வேட்பாளர் ஒருவர்தான் என்றும்  பட்டிமன்றமே நடக்கிறது.

2019 லோக்சபா தேர்தலில் வேலூரில் பணம் கைப்பற்றப்பட்ட காரணத்தால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டதைப்போல, தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட 4 கோடி ரூபாய் காரணமாக நெல்லை தொகுதிக்கான தேர்தல் நடைபெறுமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேஎம்ஜி

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.