புதுவயல் அருகே இளம்பெண் உடல் கண்டெடுப்பு !
புதுவயல் அருகே இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுப்பு.
போலீசார் விசாரணை.
புதுக்கோட்டை மாவட்டம் கல்லூர் அருகே சுதந்திர புரத்தை சேர்ந்தவர் உதயசூரியன்.இவரது மகள் சுகன்யா (28)நேற்றைய முன் தினம் பக்கத்து கிராமத்திற்கு கோயில் திருவிழா காண சென்றுள்ளார்.இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.
ஆனால் சுகன்யாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இன்று காலை,சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள முந்திரி காட்டில் ஒரு பெண் சடலம் கிடப்பதாக சாக்கோட்டை காவல் துறையினருக்கு தகவல் வந்தது.தகவலை அடுத்து சம்பவம் இடம் வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சடலமாக கிடந்தது.
காணாமல் போன சுகன்யா என தெரியவந்தது. இதனிடையே தகவலறிந்த சுகன்யாவின் உறவினர்கள், சுகன்யா சில நபர்களால்
பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக கூறி காரைக்குடி- அறந்தாங்கி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டு வருபவர்களுடன் போலீஸார்
சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பாலாஜி