ஆட்சி மாற்றத்திற்கான மதுரை மாநாடு ? எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு இல்லாத வரவேற்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஆட்சி மாற்றத்திற்கான மாநாடு?

ஆகஸ்டு 20 அன்று மதுரையில் நடைபெறவிருக்கும் “அ.தி.மு.க. வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு” பணிகள் பரபரக்கின்றன. அ.தி.மு.க.வின் எழுச்சி மாநாடு என்பதைவிட, எடப்பாடி யாரின் எழுச்சி மாநாடு என்பதாகவே தொண்டர்கள் பார்க்கிறார்கள். தோராயமாக, 25 இலட்சம் பேர் பங்கேற்கும் வகையில், மதுரை விமான நிலையம் அருகே, 5 இலட்சம் சதுர அடி விஸ்தீரனத்தில் மாநாடு பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 13 இடங்களில் 300 ஏக்கரில் வாகனம் நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்திருக் கிறார்கள். 35 ஏக்கரில் சமையலறை, உணவு விநியோக மையங்கள் என முன்தயாரிப்பு பணிகளை பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. ”தேசிய அளவிலான மாநாட்டுக்கு கூட இந்த அளவு பெரிய பந்தல் இதற்கு முன் அமைக்கப்படவில்லை. அதேபோல், பல லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படுவதும் சாதனையாகவே இருக்கும்.” என பெருமையாக பத்திரிகையாளர்களிடையே தெரிவித்திருக்கிறார், ஆர்.பி.உதயகுமார்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

வீடியோ லிங்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இந்த மாநாடு தொடர்பான பணிகள் அனைத்தையும், குறிப்பாக மாநாட்டு திடல் திட்டமிடல் தொடர்பான பணிகளை இன்ச் பை இன்ச்சாக கண்காணித்து தனது நேரடி பொறுப் பிலேயே வைத்திருக்கிறாராம் எடப்பாடியார். ”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று பதவி பிரமாணம் எடுத்த நாள் முதல் விலைவாசி விண்ணை முட்டுகிறது. மின்சார கட்டணம், சொத்து வரி, பால்விலை உயர்ந்துவிட்டது. நாடாளுமன்ற கூட்டத்தில் பாரதப் பிரதமர் கட்ச தீவை தாரை வார்த்தது தி.மு.க. தான் என்று தி.மு.க.வின் துரோகத்தை அம்பலப்படுத்தி விட்டார்.

அதனைத் தொடர்ந்து மணிப்பூர் சம்பவத்தை குறித்து கனிமொழி பேசிய போது, அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 1989ம் ஆண்டு சட்டமன்றத்தில் புரட்சித்தலைவி அம்மாவை சேலை பிடித்து அவமானப்படுத்திய சம்பவத்தை நினைவு கூர்ந்து , அம்மாவின் தைரியத்தை டெல்லியில் நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தைரியமாக எடுத்துரைத்தார். முதலமைச்சர் நான் டெல்டாகாரன் என்று கூறி வருகிறார். ஆனால் அங்கு பயிர்கள் வாடி வருகின்றன அதைப் பார்க்க கூட முதலமைச்சருக்கு நேரமில்லை. எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சி மலரும் வகையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான கால்கோள்விழாவாக மாநாடு அமையும். எட்டாவது அதிசயமாக இந்த மாநாடு வரலாற்றில் இடம்பெறும்.” என குதூகலிப்போடு சொல்கிறார்கள் அதிமுகவின் தொண்டர்கள்.

இலட்சங்களில் ‘டார்கெட் ‘… கோடிகளில் ‘கரன்சி ‘…

மதுரை மாநாட்டுக்கு 7 இலட்சம் பேரை திரட்ட வேண்டும் என்று எடப்பாடி டார்கெட் வைத்திருக்கிறாராம். திருச்சி தொடங்கி நாகர்கோவில் வரையில் மாவட்டத்துக்கு 5000 பேர் டார்கெட். இதில் குறைந்தபட்சம் 4000 பேரையாவது அழைத்து வரவேண்டுமென்று மாவட்ட செயலாளர்களுக்கு கறார் உத்தரவாம். அதற்கு தகுந்தார் போல் வைட்டமின் ”ப” தண்ணீராக ஓடுக்கிறது என்கிறார்கள். மாநாட்டில் பங்கேற்கும் 7 இலட்சம் பேருக்கும் மூன்று வேளை உணவுக்கான ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கிறதாம். மதுரையில் மாநாடு நடைபெறும் அதே நாளில், சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறாராம் ஓ.பி.எஸ்.

“தொண்டனும் இங்கே தலைவனே!”

அதிமுக எழுச்சி மாநாட்டுக்கான பணிகள் ஒருபக்கம் விறுவிறுக்க; மாநாடு தொடர்பான விளம்பரங்களில் அனைவரும் ஒரு கனம் திரும்பிப் பார்க்கும்படியாக தனிமுத்திரை பதித்திருக்கிறார், டாக்டர் சரவணன். அவரது விளம்பரங்களின் அடிநாதமே, அம்மாவின் சீரிய வரிகளான, ”தொண்டனும் இங்கே தலைவனே!” என்பதுதான். காலர் டியூன், வேன் மூலம் எல்.இ.டி. பிரம்மாண்ட திரை விளம்பரம், சுவர் விளம்பரம் என 20 நாளுக்கு முன்பிருந்தே களைகட்டியிருக்கிறது.ஜெ.நியூஸில் எடப்பாடி வாழ்க்கை வரலாற்று தொகுப்பு, எஃப்.எம்., லோக்கல் டி.வி.சேனல் விளம்பரம் என எதையும் விட்டுவைக்கவில்லை.

சமையல்.... தயார்...
சமையல்…. தயார்…

அனைத்து வடிவங்களிலும் விளம்பரபடுத்தி வருகிறார், டாக்டர் சரவணன். மாநாட்டு திடலில் காலடி எடுத்து வைக்கும் முன்பாக, வானிலிருந்து மலர் தூவுவதற்கென்றே மும்பையில் 9 இலட்சம் செலவில் ஹெலிகாப்டருக்கெல்லாம் சொல்லி வைத்துவிட்டார். விமான நிலையத்தை ஒட்டிய பகுதியில் மாநாடு நடைபெறுவதால், காக்கா, குருவியைத் தாண்டி ட்ரோன் கேமராகூட பறக்கக்கூடாதுனு கவர்மெண்ட் தரப்பில் கறார் காட்டவும் அந்த திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்று கடுமையாக முயற்சி நடந்து கொண்டே இருக்கிறது..  வரவேற்று பூ தூவுவதிலிருந்து, தலைவனை பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் வரையில் பாதுகாப்புக்கு பவுன்சர்கள் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பது வரையில் அமர்க்களப்படுத்தி வருகிறார், டாக்டர் சரவணன்.

சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

20ம் தேதி மதுரை வலையங்குளத்தில் அதிமுகவின் எழுச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அதிமுக மாநாட்டில் தொண்டர்கள் பங்கேற்க வசதியாக சென்னையிலிருந்து சிறப்பு ரயில்,  சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் மூலம் அதிமுக தொண்டர்கள் பயணம் அதிமுக தொண்டர்களுடன் சென்னையில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டது சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு  சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் அந்த சிறப்பு ரயில் மூலம் 1,100 அதிமுக தொண்டர்கள் மதுரை வந்து இறங்கினர்.

வீடியோ லிங்

இந்த சிறப்பு ரயிலின் ஜன்னல் முழுவதும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு அழைக்கிறோம் என்று வசனங்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது ஒவ்வொரு பெட்டிக்கும் ஒவ்வொரு செக்யூரிட்டி அமர்த்தப்பட்டு தொண்டர்களை பாதுகாப்பான முறையில் மதுரைக்கு அழைத்துச் வந்தனர்.  சென்னையில் இருந்து 50 ஆயிரம் பேர் செல்வதற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அரசியல் திருப்புமுனைகளுக்கு பெயர் பெற்ற மதுரையில் நடப்பதால், அடுத்தாண்டு நடக்கும் எம்.பி தேர்தலில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் நிர்வாகிகள், தொண்டர்கள் களப்பணியாற்றி வருகின்றனர்.

அ.தி.மு.க.,வின் பொன்விழா ஆண்டை குறிப்பிடும் வகையில் மாநாடு பந்தல் முன் அமைக்கப்பட்டுள்ள 51 அடி உயர கம்பத்தில் காலை 8:45 மணிக்கு பொதுச்செயலாளர் பழனிசாமி கட்சி கொடியேற்றுகிறார். பின்னர் தொண்டர் படையில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

அதிமுக மதுரை மாநாடு
அதிமுக மதுரை மாநாடு

இதைதொடர்ந்து மாநாடு பந்தலை திறந்துவைத்து, ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சியின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியை திறந்து வைக்கிறார். இதைதொடர்ந்து இசை நிகழ்ச்சிகள், கவியரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

மாலை 4 மணிக்கு மீண்டும் எடப்பாடி பழனிசாமி மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்தூவி வரவேற்க திட்டமிடப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தங்கி இருக்கும் ஓட்டலில் இருந்து அவர் வெளியே புறப்பட்டு மாநாட்டு பந்தலுக்கு வரும் வரையில் அவரது காருக்கு மேலே ஹெலிகாப்டர் பறந்தவாறு மலர்களை தூவியவாறு வந்து கொண்டே இருக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்த போது கூட இதுபோன்ற வரவேற்பு கொடுக்கப்பட்டதில்லை. மாலை 5:00 மணிக்கு மாநாடு பந்தலுக்கு பழனிசாமி வருகிறார். மூத்த நிர்வாகிகளை கவுரவித்து பொற்கிழி வழங்குகிறார்.

வீடியோ லிங்

பின்னர் முக்கிய நிர்வாகிகள் சிலர் பேசியபின், மாலை 6:00 மணியளவில் பழனிசாமி எழுச்சி உரையாற்றுகிறார். வெளியூர்களில் இருந்து வரும் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளின் பாதுகாப்பு கருதி இரவு 7:30 மணிக்குள் மாநாடு நிகழ்ச்சிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி மாநாடு நடக்கும் இடம் அருகே பரம்புபட்டியில் அவர் ஓய்வெடுக்க விருந்தினர் விடுதி தங்கி மாநாடு கடைசிநேர ஏற்பாடுகள் குறித்து திட்டமிடுகிறார்.   மாநாட்டுக்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர்களான செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் முன்னின்று செய்து வருகின்றனர்.

-ஷாகுல், படங்கள்: ஆனந்த்

இதையும் சேர்த்து படிங்கள்… 

மறுக்கமுடியாத… எடப்பாடி ஆட்சி சாதனைகள் !

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.