அதிமுகவின் 10 ஆண்டுகால சாதனைகள் வெற்றியைத் தேடி தரும் – மதுரை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் !

அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களை கூறி வாக்கு கேட்போம், குறிப்பாக மதுரைக்கு 8000 கோடியில் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் கூறி மக்களிடம் வாக்கு கேட்போம்.

0

அதிமுகவின் 10 ஆண்டுகால சாதனைகள் வெற்றியைத் தேடி தரும் – மதுரை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் !

4 bismi svs

துரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் சரவணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு மாற்றாக அவருடைய மனைவி கனிமொழி மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார், நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

2 dhanalakshmi joseph


முன்னதாக கே.கே.நகரில் உள்ள எம்ஜிஆர் – ஜெயலலிதா அருங்காட்சியகம் எதிரே உள்ள பூங்கா முருகன் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் சரவணன் கூறுகையில், “மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது, அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களை கூறி வாக்கு கேட்போம், குறிப்பாக மதுரைக்கு 8000 கோடியில் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் கூறி மக்களிடம் வாக்கு கேட்போம். அதிமுகவின் 10 ஆண்டுகால சாதனைகளை எங்களுக்கு வெற்றியை தேடி தரும். திமுகவின் 33 மாத கால ஆட்சியில் கொடுக்கப்பட்ட பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மக்களை சந்திப்பதே இல்லை. மாறாக சு.வெங்கடேசன் ஒரு ட்விட்டர் அரசியல்வாதியாக மட்டுமே செயல்பட்டு வருகிறார். அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஸ்டிக்கர் ஒட்ட பார்க்கிறார்கள் இவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என கூறினார்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.