சமூக பணியில் அங்குசம் அறக்கட்டளை !
சமூக பணியில் அங்குசம் அறக்கட்டளை !
”கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் பெற்றோர்கள் தவித்துவந்த நிலையில், பள்ளிக்கூடத்தில் சக மாணவர்கள் மத்தியில் மாணவர் ஒருவர் தனித்து நிறுத்தப்படும் தகவல்” அங்குசம் சமூகநல அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் கவனத்திற்கு வந்தது.
விசாரணையில், திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதன் பள்ளியில் 10-வது படித்துவரும் மகன் குருபிரகாஷ் என்பதும்;
அவரது தந்தை கார் ஓட்டுநர் பாஸ்கர் என்பதும்; கல்விகட்டணம் செலுத்தமுடியாத அளவிற்கு கடன் உள்ளிட்ட பிரச்சினைகளில் அக்குடும்பம் சிக்கித்தவிப்பதும் தெரியவர, அந்த மாணவருக்கான கல்வி கட்டணம் அங்குசம் சமூகநல அறக்கட்டளையின் சார்பில் செலுத்தப்பட்டுள்ளது. அங்குசம் சமூகநல அறக்கட்டளை ஓசையின்றி தனது சமூகப்பணிகளை தொடர்ந்து வருகிறது. வாய்ப்பும் விருப்பமும் உள்ளவர்கள் அங்குசம் சமூகநல அறக்கட்டளையுடன் இணைந்து பங்களிக்குமாறு வேண்டுகிறோம்.