டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி கைது ! பாஜகவின் ” சீப்பு ” அரசியல் !

தனக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றினைந்து கூட்டணியை கூட்டி விட்டனர் என்கிற பா.ஜ.கவின் தோல்வி பயம் தான் காரணம். அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை இது.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அமலாக்கத் துறை நடவடிக்கை டெல்லி முதல் அமைச்சர் கைது ஏன் ?

டந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபானக் கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேஷன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேஷன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார்.

Sri Kumaran Mini HAll Trichy

இந்தக் குற்றச்சாட்டில், மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த முறைகேடுகள் குறித்து அரசின் தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆளுநர் சக்சேனா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேட்டுக் கொண்டார். அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்குத் துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார்.

கைது நடவடிக்கையை எதிர்த்து நடத்திய ஆர்ப்பாட்டம்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Flats in Trichy for Sale

மறுபுறம் அமலாக்கத்துறையும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. விசாரணைக்காகக் கெஜ்ரிவாலுக்குப் பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஒரே ஒரு சம்மனுக்குக் கூடப் பதிலளிக்கவில்லை. நேரில் ஆஜரானால் கைது உறுதி என்பது தெரிந்த விஷயம்தான். எனவே, ஆஜராவதைத் தவிர்த்து வந்தார். அதே நேரம், அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தையும் நாடியிருந்தார். அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால், நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனையடுத்து இன்று புதிய மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “விளைவு ஏற்படுத்தக்கூடிய வகையிலான கட்டாய நடவடிக்கை ஏதும் தனக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். நான் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினால், தன்னைக் கைது செய்யமாட்டோம் என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உறுதி அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.

சிறையில் இருந்தபடியே, தனது அரசு செயல்படும் என்பதாக அறிவித்திருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.

ஆனால் கெஜ்ரிவாலின் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனையடுத்துக் கையில் கைது வாரண்ட்டுடன் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கைது நடவடிக்கை மீது தற்போது உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்துள்ளார். தனது முறையீட்டை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் எனக் கெஜ்ரிவால் தரப்பு கோரிக்கை வைத்திருக்கிறது. உச்சநீதிமன்றம் மேற்கண்ட வழக்கை எப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் விசாரணை டெல்லி முதல் அமைச்சர் கெஜ்ரிவாலுக்குச் சாதகமாக இருக்குமா? பாதகமாக இருக்குமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.

ஆதவன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.