பத்திரிகையாளர் கவிதாவின் ‘ தாத்தா ’ – குறும்படம் !

குறும்படங்களைத் தொடர்ந்து பெரும்படம் தயாரிக்க, சக பத்திரிகையாளனாக சகோதரி கவிதாவை வாழ்த்துவோம்.

0

 பத்திரிகையாளர் கவிதாவின் ‘ தாத்தா ’ – குறும்படம் !

பிரபல தினசரி பத்திரிகை ஒன்றின் சினிமா நிருபராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிபவர் கவிதா. அந்தப் பத்திரிகையின் யூடியூப் சேனலுக்காக சினிமா பிரபலங்கள் முக்கால்வாசிப் பேரை பேட்டி கண்டவர். தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவியாக மூன்றாவது முறை பொறுப்பு வகிப்பவர். முக்கியமான சினிமா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி முகமும் இவருக்கு உண்டு.

2 dhanalakshmi joseph

இத்தனை வருட பத்திரிகை அனுபவத்தின் துணையுடன் ‘இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய கவிதா, நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ‘சாக்லேட்’, என்ற குறும்படத்தையும்  ‘கொலை விளையும் நிலம்’ என்ற ஆவணப்படத்தையும் தயாரித்துள்ளார். இதில் ‘கொலை விளையும் நிலத்துக்கு’ச் சொந்தக்காரர், அதாவது இயக்குனர், பிரபல வாரப்பத்திரிகை ஒன்றில் நிருபராக இருந்த ராஜீவ்காந்தி.

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் 16 நிமிடங்கள் ஓடும் ‘தாத்தா’ என்ற குறும்படத்தை கவிதா தயாரித்துள்ளார். நரேஷ் என்பவர் இயக்கிய இக்குறும்படம் ’ஷார்ட் ஃபிலிக்ஸ்’ யூடியூப் தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த ‘தாத்தா’வின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இருவராங்களுக்கு முன்பு ‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி வெளியிட்டார்.

- Advertisement -

- Advertisement -

4 bismi svs

இப்போது மார்ச் 22 அன்று, குறும்படத்தின் டீசரை கதையின் நாயகனாகிவிட்ட சூரி, தனது எக்ஸ் தளத்தில் ரிலீஸ் பண்ணியுள்ளார். இக்குறும்படத்தின் டைட்டில் கேரக்டரில் சீனியர் நடிகர் ஜனகராஜ் நடித்துள்ளார். மற்ற கேரக்டர்களில்  ரேவதி பாட்டி, ரிஷி, ‘கயல்’ தேவராஜ், பிரபாகர், ஷ்யாம், முருகன் மந்திரம், தீபா பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகள் ஆமினா ரஃபீக் இக்குறும்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

கேமராமேனாக வினோத், காஸ்ட்யூம் டிசைனராக வாசுகி பாஸ்கர், ஆர்ட் டைரக்டராக சமர் ஆகியோர் பணிபுரிந்துள்ள இந்த ‘தாத்தா’வுக்கு பார்வையாளர்களின் அன்பு, ஆதரவு, பாசம்  என பெரிதும் நம்புகிறார் கவிதா.

குறும்படங்களைத் தொடர்ந்து பெரும்படம் தயாரிக்க, சக பத்திரிகையாளனாக சகோதரி கவிதாவை வாழ்த்துவோம்.

மதுரை மாறன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.