சந்துக்கடைகளால் சீரழியும்… இளைஞர் சமுதாயம்..! வசூல் லிஸ்ட் சரிதானா ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சந்துக்கடைகளால் சீரழியும்… இளைஞர் சமுதாயம்..! வசூல் லிஸ்ட் சரிதானா ! 

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் பகுதிகளில் டாஸ்மாக்கை தாண்டி சந்துக் கடைகள் மூலம் கள்ளத்தனமாக டாஸ்மாக் சரக்கு விற்பதால் பார் ஏலம் எடுத்த ஆளுங்கட்சி நபர்கள் பாதிக்கப்படுவதோடு, கள்ளச்சரக்கால் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் விசாரித்தோம்.

Sri Kumaran Mini HAll Trichy

“உப்பிலியபுரம் ஒன்றியத்தில் B-மேட்டூர், கோட்டப்பாளையம், உப்பிலியபுரத்தில்-, வைரிசெட்டிபாளையம், புடலாத்தி, எரகுடி, சோபனபுரம் என மொத்தம் 8 இடங்களில் பார் நடக்கிறது. பார் எடுத்தால் கோடீஸ்வரர் ஆகலாம் என ஆசைப்பட்ட ஏலதாரர்கள் கமிஷன் தரவே கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது என புலம்பினார் ஒரு பார் ஏலதாரர்.. கொஞ்சம் விவரமாக கூறச் சொல்லி கேட்டோம்.

Flats in Trichy for Sale

ஒவ்வொரு பாரும், அரசிற்கு மாதம்தோறும் கட்சி நிதி 60 ஆயிரம், உப்பிலியபுரம் போலீசுக்கு 10 ஆயிரம், இன்ஸ்பெக்டருக்கு 5 ஆயிரம், மது விலக்கு டிஎஸ்பி-க்கு 3 ஆயிரம், மது விலக்கு பிரிவிற்கு 7 ஆயிரம், சிஐயூ என சொல்லப்படும் போலி மதுபானப் பிரிவு போலீசுக்கு ரூ.1,200 எனவும் இதையெல்லாம் தாண்டி அவ்வப்போது பார் இருக்கின்ற பகுதிகளில் வேறு பிரச்சனைகளுக்காக வந்து செல்லும் போலீசார் மதுவும், பணமும் கேட்டு தொல்லை கொடுப்பது, அவர்களையும் சமாளித்து அனுப்புவது என மொத்தத்தில் இந்த பொழப்பு தேவையா என புலம்பித் தீர்க்கும் நிலையில் தான் நாங்கள் இருக்கிறோம்.” என்றவர் தொடர்ந்து கூறுகையில், “மாதாமாதம் கடன்பட்டாவது கட்டியே ஆகவேண்டிய நிலையிலும், ‘நம் கட்சிக்காரர்கள் தானே’ என கட்சி நிதியை குறைத்து வாங்காமல் தடாலடியாக கட்சி நிர்வாகிகள் வசூல் செய்து வருவதால் என்ன செய்வது, யாரை சமாளிப்பது  என தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறோம்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இது ஒருபுறமிருக்க உப்பிலியபுரம் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள அதிகாரி ஒருவரே சந்துக் கடைகள் நடத்துவதற்கு அனுமதி கொடுத்து அதன் மூலம் பெரிய அளவில் கல்லா கட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.  சுற்றுலாத்தளமான புளியஞ்சோலை, நெட்டவேலம்பட்டி, பச்சபெருமாள்பட்டி, முருங்கப்பட்டி, நாகநல்லூர், கொப்பம் பட்டி உள்ளிட்ட சுமார் 18 ஊர்களில் இவரது ஆலோசனைப்படி அமோகமாக சந்துக்கடைகள் மூலம் கள்ளத்தனமாக சரக்கு விற்பனை நடைபெற்று வருவதாகவும் தெரிய வருகிறது.  பார் எடுத்தவர்கள் கடை திறப்பதற்கு முன் சரக்கு விற்பது அதிகாரிகளுக்கு தெரிந்தே நடந்தாலும், கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட சந்துக்கடைகளை போலீஸ் அதிகாரி ஒருவரே நடத்தச் சொல்லி காசு பார்ப்பதும், இதில் மாதம் 1ம் தேதி ஆகிவிட்டால் பார் எடுத்த நபர்களுக்கு போன் செய்து, ‘ஏன் இன்னும் ஸ்டேஷனுக்கு பணம் வரவில்லை’ என மிரட்டுகிறாராம்.  கள்ளத்தனமாக சரக்கு விற்கும் சந்துக் கடைகளில் டாஸ்மாக் விடுமுறை நாட்களில் அதிக அளவு போலி கலப்பட மதுவும் விற்பனை செய்வதாகவும், அத்தகைய கலப்பட சரக்குகளை கொப்பம்பட்டியைச் சேர்ந்த, பெட்டிக்கடை தங்கராஜ் என்ற நபர் தயார் செய்து அனைத்து பகுதிகளுக்கும் விற்று, பல லட்சங் களுக்கு அதிபதியாகி வீடு, நிலம், காடு என ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கிவிட்டாராம். இவரிடம் ஒரு பெரிய தொகையை கறந்து வருகிறார் அந்தக் காவல் அதிகாரி.  இதனால் பாதிப்படைந்த பார் உரிமையாளர்கள் புகார் தெரிவித்தும் அந்த போலீஸ் அதிகாரி தன்னுடைய, மணிபர்ஸை நிரப்புவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து கொண்டு, சந்துக்கடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறாராம்.

இதற்கிடையில் உப்பிலியபுரம் கிராமப் பகுதிகளில் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் உப்பிலியபுரம் போலீஸ் ஸ்டேஷனில் எந்த புகாரும் வந்தாலும் பணம் வாங்காமல் விசாரிக்க மாட்டாராம் அந்த “சந்துக்கடை புகழ்” போலீஸ் அதிகாரி.  மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்குமா..?

– ஜோஸ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.