மஞ்சளை முன்னிறுத்திக் காவியை வீழ்த்துவோம் -தயாநிதி மாறன் கருத்து!

0

தந்தையைப் போல் மஞ்சளை விரும்பும் முதல்வர் என்ற தலைப்பில் அங்குசம் செய்தி விரிவாகச் செய்தி வெளியிட்டிருந்தது, இதில் முன்னாள் முதல்வர் கலைஞரை பின்பற்றி தற்போதைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மஞ்சளை வைத்து அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார் என்பது குறித்து செய்தியில் விளக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் நேற்று சென்னை தேனாம்பேட்டை தாமஸ் சாலையில் உள்ள ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பங்கேற்று பொது மக்களுக்கு பாய், குடம் மற்றும் மஞ்சள் நிறப் பையில் ஆடைகளை வைத்து சுமார் ஆயிரம் பேருக்கு வழங்கினார்.

தந்தையைப்போல் மஞ்சளை விரும்பும் முதல்வர் ! https://angusam.com/yellow-colour-politics/

தொடர்ந்து தயாநிதி மாறன் பேசியது: வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை திமுக வழங்கி வருகிறது.

அரசு விளம்பரங்களில் மஞ்சள்
நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிளாஸ்டிக் ஒழிப்பை முன்னிலைப்படுத்தியே மஞ்சள் நிற பையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறார். என்னுடைய மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் நலத்திட்ட உதவி நிகழ்ச்சிகளில் , பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கு மஞ்சள் பை பயன்படுத்தப்பட்டது. மஞ்சள் நிறத்தை தேர்ந்தெடுத்ததற்கு காரணம், தமிழ்நாட்டின் பாரம்பரிய நிறமே மஞ்சளாக இருப்பது தான். எனவே மஞ்சள் நிறத்தை வைத்து காவியை ஒழிப்போம். இன்று பேசினார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.