அங்குசம் பார்வையில் ” கார்டியன் “ !

அறிவுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகள் இருந்தாலும் ஆவிகள், பேய்கள் பழி தீர்க்கும் கதையில் அதெல்லாம் பார்க்கக் கூடாது என்ற கட்டாயவிதி இருப்பதால் ...

0

அங்குசம் பார்வையில் கார்டியன் !

யாரிப்பு: ’ஃபிலிம் ஒர்க்ஸ்’ விஜய் சந்தர். டைரக்‌ஷன்: சபரி & குரு சரவணன், கதை—திரைக்கதை—வசனம்: குரு சரவணன். ஆர்ட்டிஸ்ட்ஸ்: ஹன்சிகா மோத்வானி, பிரதீப் ராயன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, ஷோபனா பிரனேஷ், தியா ( அறிமுகம்), அபிஷேக் வினோத், மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை, பேபி கர்ஷிதா. டெக்னீஷியன்கள்: இசை: சாம் சி.எஸ்., ஒளிப்பதிவு: கே.ஏ.சக்திவேல், எடிட்டிங்: எம்.தியாகராஜன், ஆர்ட் டைரக்டர்: லால்குடி என்.இளையராஜா, ஸ்டண்ட் : டான் அசோக், காஸ்ட்யூம் டிசைனர்: அர்ச்சா மேத்தா, நிர்வாகத் தயாரிப்பாளர்: நவீன் பிரபாகர். பி.ஆர்.ஓ. ரியாஸ் கே.அஹமது & யுவராஜ்.

https://businesstrichy.com/the-royal-mahal/

மந்திரவாதிகள் நாலு பேர் சுத்தி உட்கார்ந்து கொண்டு, பூஜை செய்கிறார்கள். இதான் படத்தின் முதல் சீன். அதில் தலைமை மந்திரவாதி, ஒரு உக்கிரமான ஆவியை வரவைத்து ஒரு பச்சைக்கல்லுக்குள் அடைக்கிறார்.  நான்கு பேரின் ரத்தம் கலந்த அந்த பச்சைக்கல் யாரிடம் இருக்கிறதோ, அவர் நினைச்சதெல்லாம் நடக்கும். அதில் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும்.  சின்ன வயசிலிருந்தே ராசி இல்லாதவராக இருக்கும் ஹன்சிகாவுக்கு அந்தக் கல் கிடைக்கிறது. அது கிடைத்தபின் நடக்கும் நல்ல—கெட்ட சம்பவங்களின் பின்னனி என்ன என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘கார்டியன்’.

சுரேஷ் மேனன், ஸ்ரீமன், அபிஷேக் வினோத், ஸ்ரீராம் பார்த்தசாதி ஆகிய நால்வரும் பார்ட்னராக இருக்கும் கம்பெனியில் ஆடிட்டராக வேலை பாத்தபடியே தனது ஐந்து வயது குழந்தையை வளர்க்கிறார் ஷோபனா. நால்வரும் பெரிய அளவில் பண மோசடி பண்ணும் காரியத்தில் இறங்கும் போது, அதை எதிர்க்கிறார் ஷோபனா. ஒரு நாள் ஐடி ரெய்டு வரப்போவதாக தகவல் வருகிறது. இதற்குக் காரணம் ஷோபனா தான் என கடுப்பான நால்வரும், ஷோபனாவின் வீட்டிற்குப் போய், அவரது குழந்தையின் பிறந்த நாளன்று, ஷோபனாவை அடித்துக் கொன்று கேஸ் சிலிண்டரைத் திறந்துவிட்டு தீ வைத்துக் கொளுத்திவிடுகிறார்கள். அனாதை ஆசிரமத்திற்குப் போய்விடுகிறது குழந்தை.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

ஷோபனாவின் உக்கிரமான ஆவி புகுந்த அந்த பச்சைக்கல் தான் ஹன்சிகாவிற்கு கிடைக்கிறது. அதன் பின் அந்த நால்வரையும் ஷோபனாவின் ஆவி ரூபத்தில் தீர்த்துக்கட்டுகிறார் ஹன்சிகா. வில்லன்களை பெண் ஆவி பழி தீர்க்கும் வழக்கமான பழக்கமான படம் தான். அதை முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி நடித்த ‘அய்யர் தி கிரேட்’, பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரிலீசான சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’, அப்புறம் கொஞ்சம் கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ பாணியில் நாலு பேர் பார்ட்னர்கள். இப்படி மூன்றையும் மிக்ஸ் பண்ணி ‘கார்ட்டியன்’ ஆக்கியிருக்கிறார்கள் இரட்டையர்களான சபரி—குரு சரவணன்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஆனாலும் பழி வாங்கும் டெக்னிக்கை வித்தியாசப்படுத்தி, இரண்டரை மணி நேரம் விறுவிறுப்பாக கொண்டு போயிருக்கிறார்கள். கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி இஞ்சினியராக கலகலப்பு, ஜாலி, ஷோபனாவின் ஆவி புகுந்ததும் காட்டும் ஆவேச முகபாவனை என ஹன்சிகா மோத்வானி  வெரைட்டி காட்டி வெளுத்துக்கட்டியிருக்கிறார். ஆடிட்டர் மீராவாக வரும் ஷோபனாவும் சும்மா சொல்லக் கூடாது. அவரை வில்லன்கள் நால்வரும் அடித்துக் கொல்லும் காட்சியில் அனுதாபத்தை அள்ளுகிறார்.  ஹீரோன்னு ஒருத்தர் வேணுமேங்கிறதுக்காக பிரதீப் ராயனை கமிட் பண்ணியிருக்கிறார்கள் போல். மொத்தமே ஏழெட்டு சீன்கள் தான் அவருக்கு.

மொட்டை ராஜேந்திரனும் தங்கதுரையும் காமெடி என்ற பெயரில் நம்மை ரொம்பவே கடிக்கிறார்கள்.  படத்தின் மிரட்டல் என்றால் மியூசிக் டைரக்டர் சாம் சி.எஸ்.ஸும் கேமராமேன் தங்கவேலும் தான்.

அறிவுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகள் இருந்தாலும் ஆவிகள், பேய்கள் பழி தீர்க்கும் கதையில் அதெல்லாம் பார்க்கக் கூடாது என்ற கட்டாயவிதி இருப்பதால், க்ளைமாக்ஸில், அனாதை இல்லத்தில் இருக்கும் குழந்தைக்கு ‘கார்ட்டியனாக’ ஹன்சிகாவை காட்டி சுபம் போடுகிறார்கள்.

சுவாரஸ்யத்திற்கும் பொழுது போக்கிறகும் இந்த ‘கார்டியன்’ க்யாரண்டி.

-மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.