நானே பாதிக்கப்பட்டேன்… நேரடியாகப் பாதிக்கப்பட்டேன் – நீங்களும் கவனமாக இருங்கள் – பத்திரிகையாளரின் பதிவு !

0

 நானே பாதிக்கப்பட்டேன்… நேரடியாகப் பாதிக்கப்பட்டேன் – நீங்களும் கவனமாக இருங்கள் – பத்திரிகையாளரின் பதிவு ! 

கோவத்துடனும் இயலாமையிலும் எழுதுகிறேன்…

ஊருக்குப் போக வேண்டியிருந்தது. மதுரையிலிருந்துதான் போக வேண்டும். சமரையும் சாரலையும் கூட்டிச் செல்ல வேண்டும் என்பதால் பஸ் பயணம்தான் எங்களுக்கு வசதி. இரண்டு பேருக்கான ஸ்லீப்பர் டிக்கெட் போட்டுவிட்டால் நாங்கள் நாலு பேரும் பயணிக்க வசதியாக இருக்கும். அப்படித்தான் இந்த வெள்ளிக்கிழமை ஊருக்குப் போவதற்கும் பஸ்ஸில் டிக்கெட் புக் செய்தேன். இரண்டு வாரத்துக்கு முன்பே டிக்கெட் புக் செய்தபோதும் ஒவ்வொரு டிக்கெட்டின் விலையும் 2,000 ரூபாய்க்கு மேல் இருந்தது (ஏன் அரசுப் பேருந்தில் போகலாமே எனக் கேட்போர் இப்படியே இந்த போஸ்ட்டைக் கடந்துவிடவும். ப்ளீஸ்). ரிட்டர்ன் டிக்கெட்டும் அதே விலைதான்.

போகும்போது எந்தச் சிக்கலும் இல்லை. ரிட்டர்ன் நான் மட்டும் வேலை நிமித்தம் காரணமாக முதல் நாளே வர. நேற்று சமர், சாரலோடு அண்ணன் மகன் பாலா, அவங்க அம்மாவுடன் சென்னை பயணம் ஆனார். @ சர்வீஸில் டிக்கெட் புக் செய்திருந்தேன். அவங்க அம்மாவுக்கும் ஒரு டிக்கெட் புக் செய்திருந்தேன். அந்த டிக்கெட்டின் விலை 1,300 ரூவாய். ஆனால், ஒரு சில மணி நேரத்தில் அதுவே கேன்சல் ஆனது. மீண்டும் முயன்று டிக்கெட் புக் செய்தபோது அதே பஸ்ஸில் அதே டிக்கெட் இருந்தது. ஆனால், இப்போது டிக்கெட்டின் விலை 2,300 ரூவாய். ஆனால், அவங்க அம்மா இவர்களுடன் வருவது திடீர் முடிவு என்பதால் ஒரே பஸ்ஸில் புக் செய்ய வேண்டிய நிர்பந்தம். டிக்கெட் புக் செய்துவிட்டோம். பஸ் 9.52க்கு மதுரையிலிருந்து. எல்லோரும் மாட்டுத்தாவணி சென்று விட்டனர்.

- Advertisement -

- Advertisement -

இந்த இடம்தான் திரில்லிங்கான இடம்…

நான் சமரின் அம்மாச்சிக்கு புக் பண்ண டிக்கெட்டும் சமர் வர வேண்டிய டிக்கெட்டும் வேறு வேறு பஸ். ஆனால், பத்து நிமிட இடைவெளி. சமாளித்துவிடலாம் என இருந்தவர்களுக்கு வந்தது ஒரு ஷாக். டிக்கெட் கேன்சல் என செய்தி வந்தது. டென்சன் தொற்றிக்கொண்டது. சரி அந்த பஸ்ஸிலாவது போகலாம் என அந்த டிரைவரின் நம்பருக்கு போன் செய்தால் போன் எடுக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு டிக்கெட் போன் நம்பர் ஸ்விட்ச் ஆப். நேரம் 11 ஆனது. போன் எடுத்தார். பத்து நிமிடத்தில் பேசுகிறேன் என்கிறார். வெயிட்டிங் கால் போகிறது. ஆனால், திரும்பி அழைப்பு இல்லை. நேரம் பன்னிரெண்டு மணி. போன் எடுக்கவே இல்லை.

4 bismi svs

இதற்கிடையே வேறொரு பஸ்ஸில் டிக்கெட் எடுத்துவிட்டோம். மூணு டிக்கெட் விலை 7,500 ரூவாய். இந்தப் பயணத்துக்கு மட்டும் மொத்தம் 10,000 செலவு. என்னுடைய மாதச் சம்பளத்தின் மிகப்பெரும் பங்கு இது. காலையில் அந்த #YOLO_BUS சர்வீஸில் இருந்து ஒரு செய்தி. உங்கள் பயணம் எப்படி இருந்தது. ரேட் செய்யவும் என… எப்படி நொந்துகொள்வது என்றே புரியவில்லை. அந்தப் பேருந்து வந்ததா இல்லையா என்றே தெரியவில்லை. விசாரித்தால்…

ஆன்லைன் டிக்கெட்… பஸ் நிறைந்துவிட்டது. ஓனருக்குப் போக வேண்டிய பஸ் போய்விட்டது. YoloBus சர்வீஸுக்கு மாட்டுத்தாவணியில் கடைகள் இல்லை. எனவே எங்கே கேட்பது எனத் தெரியவில்லை. Paytm-இல் கஸ்டர் கேரில் சரியான ரெஸ்பான்ஸும் இல்லை. நான் ஏமாந்துதான் விட்டேன். தனியார் பேருந்துகளைக் கொள்ளைக்கூடாரமாக மக்களைக் கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிறார்கள். அரசு திருவிழா நேரங்களில் மட்டும் கண் துடைப்புக்காக விசாரணை செய்வதுபோல நடத்துவதுபோல நடித்துவிட்டு, பிறகு அதைப் பற்றிக்கண்டுகொள்வதே இல்லை.

அரசும் அரசு இயந்திரமும் மக்களுக்கானதாக எப்போதும் இருக்கப் போவதில்லை. அரசின் கையில் நிர்வாகம் இருக்கும்போதே இந்த லட்சணம் என்றால் தனியாரிடம் மொத்தமாகச் சென்றால் என்ன ஆகும்…

நடு ரோட்டில் வைத்து உங்கள் கோமணம் உருவப்படும்… எல்லோரும் வேடிக்கைதான் பார்ப்பார்களே தவிர யாரும் அதை ஏனென்று கேட்க மாட்டார்கள். அப்படிக் கேட்பார்கள் என நினைத்தாலும் அதுவும் நம் முட்டாள்தனத்தில்தான் வந்து சேரும்…

நான் ஏமாற்றப்பட்டேன். அதற்கு யாரையும் பொறுப்பாக்க முடியாது. இனி கவனமாக இருக்க வேண்டும். நீங்களும் கவனமாக இருங்கள்…

-ச.அழகு சுப்பையா

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.