மாஸ் சினிமா எடுக்க துப்பாக்கி மட்டும் போதுமா? திரைக்கதை நுட்பம்….?????

0

மாஸ் சினிமா எடுக்க துப்பாக்கி மட்டும் போதுமா? திரைக்கதை நுட்பம்….?????

எனக்கு மாஸ் படங்கள் பிடிக்கும். சினிமாவை தியேட்டரில் பார்ப்பது என்பது கூட்டத்தில் கரைந்து போய் ‘மாஸ்’களில் ஒன்றாக ஆவது. ‘கூட்டத்தில் தனியே’ என்று மலையாளத்தில் சொல்வார்கள். ஆனால் இது போன்ற மாஸ் சினிமாக்கள் பார்க்கும்போது கூட்டத்தில் தனியனாகவும் கூடவே கூட்டத்தில் ஒருவனாகவும் இருக்கும் இரட்டை மனநிலை எல்லாருக்கும் வாய்க்கும்.

https://businesstrichy.com/the-royal-mahal/

தனியன் மிகவும் லாஜிக்கானவன், அவனுடைய அறிவு, அகங்காரம், புத்திசாலித்தனம், கேள்வி கேட்கும் திறன் எல்லாம் திரையுடன் மோதிக் கொண்டிருக்கும். ஆனால் கூட்டத்தில் ஒருவன் சடங்குகளின் வெறியாட்டு திரளில் எக்ஸ்டசி மனநிலையில் கரைந்து விடுபவன். அவனுக்கு கொண்டாட்டமும் இன்பமும் மட்டுமே அப்போதைய மனநிலையாக இருக்கும்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

அந்த தனியனுக்கும் கூட்டத்தில் ஒருவனுக்குமான போராட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை தீர்மானிப்பது அந்த சினிமாவின் இயக்குனரே. வெறியாட்டத்தில் பங்கு கொள்ளும் பார்வையாளனை தனியன் என்று உணரச்செய்ய வாய்ப்பளிக்காத தலைமை சாமியாடியே அந்த இயக்குனர். ஆம் மாஸ் சினிமா என்பது சினிமாவுக்குள் தனித்ததொரு ‘ஆர்ட் ஃபார்ம்’ என்றே நான் நினைக்கிறேன். மாஸ் சினிமாக் களை வெறுப்புடன் பார்க்கும் நோக்கம் எனக்கு இல்லை. வாய்ப்பு கிடைத்தால் நானே அப்படி ஒரு மாஸ் சினிமாவை செய்யும் விருப்பம் உள்ளவன் தான்.

பார்வையாளனுக்கு புத்திசாலித்தனம் அப்போது வேலை செய்ய தேவை இல்லை என்று சொன்னேன் அல்லவா? ஆனால் இயக்குனருக்கு கண்டிப்பாக அது வேலை செய்ய வேண்டும். ஆதியில் வேட்டை முடித்து சமைத்து உண்டு தீப்பந்த வெளிச்சத்தில் ஓய்வெடுக்கும் இனக்குழுவின் நூறு மனிதர்களை மலையடிவார குளிரில் உட்கார வைத்து ஆடலும் பாடலுமாக ஏதேனும் தோலிசைக்கருவியுடன் கதை சொல்லி இருப்பான் அல்லவா ஒருவன்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அந்த இருநூறு கண்களையும் செவியையும் இருட்டில் கூராக்கி தன்னிலிருந்து அசைக்க முடியாமல் செய்த ஒருவன். குளிர் மறந்து நேரம் மறந்து காலம் மறந்து அந்த மானுட ஜென்மங்கள் கதைசொல்லியின் உதட்டசைவில் உடலசைவில் கருவியை இசைக்கும் கையசைவில் பெருகி பெருகி வரும் கதையில் தங்களை கரைத்துக் கொண்டிருப்பார்கள் அல்லவா. கதைக்குள் திளைத்தி ருப்பார்கள் அல்லவா. அந்த கதைசொல்லியின் நுட்பமும் புத்திசாலித்தனமும் இது போன்ற மாஸ் இயக்குனர்களுக்கு வேண்டும் என்றே சொல்வேன்.

விக்ரமையே எடுத்துக் கொள்வோம். அதன் முதல் பாதி அவ்வகையான அனுபவம். அமர் கதாபாத்திரத்துக்குள் புகுந்து கொண்ட நம் காலத் தின் சிறந்த நடிகன் ஒருவனின் திறன் நம்மை அசரடிக்கிறது. சந்தனம் பாத்திரத்தின் துவக்கம், மற்றும் துண்டு துக்கடா பாத்திரங்கள், கர்ணனை பற்றிய தகவல்கள் அமரின் தேடல்கள் வழியாக உருவாகி வளர்ந்து வருவதில் கிடைக்கும் பரவசம், கர்ணன் கதாபாத்திரத்தின் எதிர்பாராத்தன்மை, அவன் விக்ரமாக மாறி தியேட்டரை சல்லியாக்கி பார்வையாளர்களை குலவையிட்டு சன்னதம் கொள்ள செய்யும் உச்சக்கட்ட இடைவேளை.

திரையை ஆட்டக்களமென கொண்டு இந்தக் கதாபாத்திரங்களை ஆடித்தீர்க்கும் ஆற்றல் கொண்ட நடிகர்களின் களியாட்டு போல இருக்கிறது அந்த முதல் பாதி. இங்கே ஊடும் பாவுமாக குறுக்கும் மறுக்குமாக கதையை நெய்து பெருக்கும் திரை எழுத்தாளனின்/இயக்குனனின் புத்திசாலித்தனம் பார்வையாளனை திணறடிக்கிறது.

ஆனால்  இரண்டாம் பாதி. ‘ஸ்கிரிப்ட் பேப்பரை எடுத்துட்டு வரல சார்’ என்ற உதவி இயக்குனரிடம் ‘த்தா பாத்துக்கலாம்’ என்று இயக்குனர் சொல்லி இருக்கலாம். இருக்கிற வெப்பன்ஸை எல்லாம் வைத்து கொத்தியும் கொதறியும் வெட்டியும் சுட்டும் முடிக்கும்போது படமே முடிந்து போய்விடும் என்கிற நம்பிக்கை. ஃப்ரீ ஃபயர் போன்ற வீடியோ கேம்களை விளையாடும் இளந்தலைமுறைகளுக்கு இந்த வேட்டுச்சத்தமே கூக்குரலிட்டு கூஸ்பம்ஸ் கொள்ள போது மானதாயிருக்கிறது என்பதற்கு நான் சாட்சி.

கடைசி முக்கால் மணி நேரம் ஏதோ காயலாங் கடைக்குள் இருந்து விட்டு வந்த ஃபீலிங்கை அடைந்தேன். துருவேறாத எதுவும் திரையில் இல்லை. அப்போது தான் திரளுக்குள் நான் தனியனானேன் அல்லது நான் ஏதேனும் தவற விட்டேனா? நேற்று மாலை அட்லீயின் ஜவான் டைட்டில் டீசரை பார்த்தபோதும் அதில் துப்பாக்கிகளை துடைத்து வைத்து தயாராகிறார் ஷாருக்கான்.

போனமாதம் முழுக்க ராக்கிபாய் சோஷியல் மீடியாவில் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தார்.  புழு போன்ற சினிமாக்களை ஒரு இ-&புக் படிப்பது போல நான் லேப் டாப்பில் பார்த்துக் கொள்வேன்.  ஆனால் தியேட்டரில் மாஸுடன் நான் தூய்க்கவிரும்புவது இம்மாதிரி மாஸ் படங்களை தான் என்றாலும், ஒரு மாஸ் சினிமா ரசிகனாக, மாஸ் சினிமாக்களில் துப்பாக்கிகள் தோட்டாக்கள் மட்டுமல்லாது திரைக்கதையின் நுட்பங்களும் வேண்டும் என்றே மனம் இறைஞ்சுகிறது.

நன்றி : சந்தோஷ் நாராயணன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.